Tamil Live News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று, “தமிழ்நாட்டிற்கும் திராவிட முன்னேற்றக கழகத்திற்கும் வாழ்வை அர்பணித்திருக்கிறேன்; பிறந்தநாள் விழா என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்”, என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை:
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி நிலவரம்:
சென்னையில் இன்று 22கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,201 என்றும், சவரனுக்கு ரூ.41,608 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.9 மற்றும் சவரனுக்கு ரூ.72 சரிந்துள்ளது. 24கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,674 என்றும், சவரனுக்கு ரூ.45,392 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.69 என்றும் கிலோவுக்கு ரூ.69,000 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,000 சரிந்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்
திரிபுரா
NDA: 24
SDF: 21
டிஎம்பி: 14
மற்றவை: 1
மேகாலயா
NPP: 22
பாஜக: 5
காங்கிரஸ்: 3
மற்றவை: 29
நாகாலாந்து
NDA: 44
NPF: 6
காங்கிரஸ்: 0
மற்றவை: 9
இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக் கணிப்புகள் மேகாலயாவில் 59 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
NPP: 18-24
காங்கிரஸ்: 6-12
பாஜக: 4-8
மற்றவை: 17-29
நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் NDPP கூட்டணி 38-48 இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.
NDPP : 38-48
காங்கிரஸ்: 1-2
NDF: 3-8
மற்றவை: 5-15
பா.ஜ.க : 35-43
NPF: 2-5
NPP: 0-1
காங்கிரஸ்: 1-3
மற்றவை: 6-11
பாஜக : 6-11
NPP: 21-26
டி.எம்.சி: 8-13
காங்கிரஸ்: 3-6
மற்றவை: 10-19
இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பு மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக+ 36-45 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 6-11 இடங்களை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். திப்ரா மோதா கட்சி 9-16 இடங்களைப் பிடிக்கலாம்.
இந்தியா டுடேயின் கணிக்கப்பட்ட வாக்குகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பாஜக வெற்றி பெறுவதைக் காட்டுகிறது. வங்காள வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்றும் கருத்துக்கணிப்பாளர்கள் கணித்துள்ளனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சினையுமின்றி, அமைதியாக நடைபெற்றது. தேர்தல் தொடர்பாக இன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்
கோயம்பேடு – ஷெனாய் நகர் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு, வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படுகின்றன என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியது. அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருவதால் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கி உள்ளது
மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என்றும், தேர்வர்களுக்கு உரிய பதிவெண்களுடன் வினாத்தாள்கள் அடுக்கப்படாமல் விட்டதும் குளறுபடிக்கு காரணம் என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது
மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சி.பி.ஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது
குளறுபடி காரணமாக தகுதியான தேர்வர்களுக்கு பாதிப்பு. எனவே, குரூப் 2 தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி புகாரில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்துக்கு எதிராக மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மார்ச் 22க்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உள்ளாட்சி அமைப்புகளில் 24 புதிய நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ. 302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் பினராயி கண்டனம் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வின்போது புத்தகங்கள், செல்போன்களை பார்த்து தேர்வு எழுதியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய டி.என்.பி.எஸ்.சி., திட்டம்.
மத்திய அரசு பட்ஜெட் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் ராணுவ குடியிருப்பு அருகே காட்டுத்தீ பரவி வருகிறது.
இதனால், பேரட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
“நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்படுகிறது. அதன் எண்ணிக்கையை பார்க்கும்போதே மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது”, என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் இன்று பதவியேற்றார்.
வழக்கறிஞர் லட்சுமி நாராயணனுக்கு பதவிப்பிரமாணம், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா செய்து வைத்தார்.
இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தியாவின் நலன் கருதியே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
“வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது.
வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட்-அப் உருவானால் தான், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய முடியும்”, என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்