Advertisment

Tamil News Updates: மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

Tamil Nadu news Live Updates breaking news headlines: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates: மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19 ஆம் தேதி வரை நீட்டிப்பு

Advertisment

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஜூலை 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வாக, இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை பண்டங்கள் விற்பனை கடைகள் வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், திரையரங்குகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்தார். சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், கொரோனா கள நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் ஆளுநர் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசின் செயல்பாடு, தி.மு.க வின் கடந்த 2 மாத கால ஆட்சி நிலவரம் பற்றியும் விவாதித்தாக கூறப்படுகிறது.

மேகதாது அணை விவகாரம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, நாளை நடக்கும் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்க உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 20:43 (IST) 11 Jul 2021
  தமிழ்நாட்டில் இன்று 2,775 பேருக்கு கொரோனா; 47 பேர் பலி

  தமிழ்நாட்டில் இன்று 2,775 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 3,188 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • 19:15 (IST) 11 Jul 2021
  தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. • 18:35 (IST) 11 Jul 2021
  அஜித்தின் வலிமை திரைப்பட போஸ்டர் வெளியீடு

  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் போஸ்டரை சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். • 16:30 (IST) 11 Jul 2021
  கொசு ஒழிப்பு பணியில் 3,300 பணியாளர்கள்

  சென்னையில் டெங்கு, ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொசு ஒழிப்பு பணியில் 3,300 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • 16:05 (IST) 11 Jul 2021
  கோபா கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு சச்சின் பாராட்டு

  கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மெஸ்ஸி தலைமையில் வரலாற்று வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். • 15:56 (IST) 11 Jul 2021
  பணியின் போது மாரடைப்பு - தமிழக ராணுவ வீரர் மரணம்

  மேற்கு வங்கத்தில் பணியாற்றிய பெரம்பலூரை சேர்ந்த ராணுவ வீரர் சங்கர் பணியின்போது மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ராணுவ நடைமுறைகள் முடிந்து அவரது உடல் சொந்த ஊரான காரைக்கு நாளை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • 15:53 (IST) 11 Jul 2021
  கொங்கு நாடு முழக்கம் - டிடிவி தினகரன் கருத்து

  தமிழகத்தில் சமீப நாட்களாக கொங்கு நாடு முழக்கம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசு அடக்க வேண்டும் என கூறியுள்ளார். • 15:19 (IST) 11 Jul 2021
  லடாக் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

  லடாக் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளதை தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு, லே உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்தும், பைக் ரைடில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். • 15:17 (IST) 11 Jul 2021
  நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் தமிழ்வழி மாணவர்கள் சேர்க்கை சரிவு

  நிட் தேர்வினால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு பதிப்புகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டில், 481 மாணவர்கள் தமிழ் வழியில் படித்து மருத்துப்படிப்புக்கு தேர்ச்சி பெற்றதாகவும், இந்த எண்ணிக்கை நீட் தேர்வு வந்த பிறகு 100-க்கு கீழ் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் கடந்த 2019 -20 கல்வி ஆண்டில் 58 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வானதாக கூறப்படுகிறது. • 14:43 (IST) 11 Jul 2021
  தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது - கனிமொழி எம்.பி

  தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது என்றும், ஒன்றிய அரசு என்பது அரசியல் சட்டத்திலேயே உள்ளது. இதனால் ஒன்றிய அரசு என்பதில் தவறில்லை. தமிழகம் பாதுகாப்பான ஒரு ஆட்சியின் கீழ் உள்ளது அதனால் தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார். • 13:53 (IST) 11 Jul 2021
  திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

  அதிமுகவின்முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அரசை முதல்வர் ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி செல்கிறார் அவரது செயல்பாடுகள் என்னை ஈர்த்தது என்று தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டுள்ளார். • 13:45 (IST) 11 Jul 2021
  விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

  சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, கொரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த். • 13:31 (IST) 11 Jul 2021
  பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் முதல்வர்

  சென்னை, தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடம் நாளை நேரடியாக மனுக்களை பெறுகிறார் • 12:46 (IST) 11 Jul 2021
  நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

  நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் தேனி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. • 12:19 (IST) 11 Jul 2021
  புதுச்சேரியில் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

  புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். • 12:09 (IST) 11 Jul 2021
  இந்தியாவே திரும்பி பார்க்கும் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சி - தோப்பு வெங்கடாசலம் புகழுரை

  அரசை முதல்வர் ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி செல்கிறார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்யும், முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திமுகவில் இணைந்த பின் கூறியுள்ளார். • 12:07 (IST) 11 Jul 2021
  இந்தியாவே திரும்பி பார்க்கும் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சி - தோப்பு வெங்கடாசலம் புகழுரை

  அரசை முதல்வர் ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி செல்கிறார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்யும், முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திமுகவில் இணைந்த பின் கூறியுள்ளார். • 11:41 (IST) 11 Jul 2021
  விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

  சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, கொரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த். • 11:32 (IST) 11 Jul 2021
  திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

  முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 905 பேருடன் திமுகவில் இணைந்தார் • 11:18 (IST) 11 Jul 2021
  கொங்குநாடு குறித்த பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது - கரு. நாகராஜன்

  தமிழ்நாட்டில் கொங்குநாடு குறித்த பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது என பாஜகவின் கரு. நாகராஜன் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதி மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதை செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். • 11:17 (IST) 11 Jul 2021
  விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

  சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, கொரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த். • 11:01 (IST) 11 Jul 2021
  விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

  சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, கொரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த். • 10:24 (IST) 11 Jul 2021
  தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது - கனிமொழி எம்.பி

  தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து பாடுபடும். யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கனிமொழி கூறியுள்ளார். • 09:58 (IST) 11 Jul 2021
  இந்தியாவில் ஒரே நாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  இந்தியாவில் ஒரே நாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 895 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். • 09:31 (IST) 11 Jul 2021
  சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது

  பாலியல் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். • 09:29 (IST) 11 Jul 2021
  அழகுத்துமுத்துகோன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

  சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.Tamil Nadu Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment