Tamil Nadu news today : தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள்

Chennai Rains : இன்று முதல் சென்னையில் தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை இருக்குமென சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates : நேற்று சென்னையில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர். இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருக்கிறது.

Tamil Nadu news today live updates

ஆனால் அனைத்து இடங்களிலும் மழைக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன என்பதையும் தெரியப்படுத்தி உள்ளனர். மழை நீர் சேகரிப்பிற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் தண்ணீர் போன்ற இன்றியமையாத தேவையின் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிப் பிழைக்கலாம். இது தொடர்பான பல்வேறு முக்கியமான செய்திகளைப் படிக்க 

International Yoga Day  2019

இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது.
உலகுக்கு இந்தியா அளித்த மிகப் பெரிய கொடை யோகா என்றும், நல்வாழ்வுக்கான திறவுகோல் என்றும் பிரதமர் மோடி தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார். மேலும் யோகாவே உலக அமைதிக்கு முக்கிய பங்காற்றுகிறது என்றும், ஏழை மக்களுக்கும் இந்த கலை சென்று சேர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.


20:36 (IST)21 Jun 2019

ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங்,  ஜூலை 8 – 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

ஆன் லைன் முறையிலேயே கவுன்சிலிங் நடைபெறும், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இன்று (ஜூன் 21ம் தேதி)  முதல் வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

20:03 (IST)21 Jun 2019

கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள்

தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

கள்ளக்காதல் காரணமாக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்கின்றனர் – நீதிபதிகள் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்சினையாக கள்ளக்காதல் உருவெடுக்கும் – நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செல்போன்களில் எளிதாக கிடைக்கும் ஆபாச படங்களால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? – உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

19:20 (IST)21 Jun 2019

திமுக எதிரி கட்சியாக உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

தண்ணீர் பிரச்னைக்கு, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்.  திமுக எதிர்க்கட்சியாக இல்லாமல், எதிரி கட்சியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திமுகவின் போராட்டம், வெற்றுப்போராட்டம் ஆகிவிடும் என்று ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளார்.

18:38 (IST)21 Jun 2019

மழை வேண்டி யாகம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவு

மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு  பிறப்பித்துள்ளனர். கோயில்களில் நாளை நடைபெறும் யாகத்தில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொள்ள உள்ளனர்.

18:04 (IST)21 Jun 2019

முத்தலாக் தடை சட்ட மசோதா – மக்களவையில் தாக்கல்

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் தடை மசோதாைவ தாக்கல் செய்தார். பின் அவர் பேசியதாவது,  முத்தலாக் தடை சட்டத்தின் மூலம்,  இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார். பெண்களுக்கான நீதி மற்றும் அதிகாரமளித்தல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டம் நீதி வழங்கும் என்று அவர் கூறினார்.

17:22 (IST)21 Jun 2019

கடனை விரைவில் அடைத்து கல்லூரியை மீட்போம் : பிரேமலதா

இஞ்ஜினியரிங் கல்லூரியை மேம்படுத்துவதற்காகவே வங்கிகளில் இருந்து கடன் பெறப்பட்டதாக நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் இஞ்ஜினியரிங் கல்லூரி மற்றும் அவரது சொத்துக்கள் விரைவில் ஏலத்திற்கு வர உள்ளன. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது,  பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டது.  விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை. இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்போம். கடனை விரைவில் அடைத்து கல்லூரியை மீட்போம் என்று பிரேமலதா கூறினார்.

16:57 (IST)21 Jun 2019

ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்காக ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை ரூ.4459 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். டில்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.  இதில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத்தொகையான ரூ.386 கோடியை வழங்குமாறும் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

16:27 (IST)21 Jun 2019

நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா? : இன்று மாலை இடைக்கால தீர்ப்பு

நடிகர் சங்கத்திற்கு 23ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக, இன்று ( ஜூன் 21ம் தேதி) மாலை இடைக்கால தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. 

தேர்தலை நடத்த ஏன் அனுமதி வழங்க கூடாது? – அரசுக்கு நீதிபதி ஆதிகேசவலு கேள்வி . தேர்தலை தாமதப்படுத்துவது ஏன்..? தேர்தல் அதிகாரி மீது ஏதேனும் புகார் உள்ளதா? – அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது.

16:07 (IST)21 Jun 2019

டில்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூடியது

டில்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் துவங்கியது.  தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளதால், அதற்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக இந்த கூட்டத்தில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15:33 (IST)21 Jun 2019

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக முதற்கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதற்கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.  எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த மதிப்பீடு ரூ.1,264 கோடி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

15:13 (IST)21 Jun 2019

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன : துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்

பருவமழை பொய்த்ததே, தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

டில்லியில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பத்திரிகையாளர்களை சந்தித்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது, மாநில வருவாயை ஆண்டுதோறும் வெளிப்படையாக அறிவித்து, வழங்க வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புக்கான நிதியை, இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்ததாக அவர் கூறினார்.

14:15 (IST)21 Jun 2019

Water Crisis : Chief Minister Press Meet (3/3)

விடுதிகள் மற்றும் உணவகங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டது என்பது மிகவும் தவறான செய்தி. அதே போன்று அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு அதிகப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கூறுவதும் தவறான செய்தி என்று மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி ஏழை மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதே அரசின் முதல் கடமை என்றும் கூறியுள்ளார்.

14:09 (IST)21 Jun 2019

Water Crisis : Chief Minister Press Meet (2/3) : தரமற்ற தண்ணீரை விநியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்

ஆந்திர மாநிலம் 12 டி.எம்.சி தண்ணீரை தான் வழங்க வேண்டும். ஆனால் டி.எம்.சி. தான் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசோ தர மறுக்கிறது. தரமற்ற நீரையும், தண்ணீரை அதிக விலைக்கு விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

14:00 (IST)21 Jun 2019

Chennai Water Crisis (1/3) : குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் இன்று விவாதித்தது என்ன?

பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 4 முக்கியமான ஏரிகளும் வறண்டுவிட்ட காரணத்தால் குடிநீர் வழங்க விரைவாக ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.சென்னையில் ஒரு நாளைக்கு 9800 முறைகள் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் பிரச்சினையை மட்டும் தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் எடப்பாடி.

13:03 (IST)21 Jun 2019

Private Schools Fees Structure – ஒரு மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு

2018 – 2021ம் கல்வி ஆண்டுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விபரங்களை தனியார் பள்ளிகள் ஆன் லைனில் வெளியிட 1 மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அரசு தரப்பு மூன்று மாத காலம் அவகாசம் கோரியது குறிப்பிடத்தக்கது.

12:48 (IST)21 Jun 2019

Tamil Nadu Rain Updates – RMC

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மேலும் பருவமழை காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

12:21 (IST)21 Jun 2019

Indian Express Chennai Live News Updates

சென்னை மற்றும் அதன் சுற்றுவ்ட்டாரப் பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளின் தொகுப்புகளை ஆங்கிலத்தில் படிக்க  : Chennai, Tamil Nadu News Live Updates: Water scarcity: lakes being desilted, quarries identified as water sources

12:07 (IST)21 Jun 2019

DMDK : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஏலத்திற்கு வந்துள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துகள் ஏலத்திற்கு வந்துள்ளது. சாலிகிராமத்தில் இருக்கும் காவேரி சாலையில் அமைந்திருக்கும் அவரின் சொத்துக்களும், ஆண்டாள் அழகர் கல்லூரியும், கண்ணாம்மாள் தெருவில் அமைந்திருக்கும் அவருடைய வீடும் ஏலத்திற்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11:38 (IST)21 Jun 2019

நிர்மலா சீதாராமன் தலைமையில் துவங்கியது நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்

நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்திந்திய மாநில நிதி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. தமிழகத்தின் சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்பு.

11:14 (IST)21 Jun 2019

Gold Rate Today : இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை

நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 516 ரூபாய் அதிகரித்தது. இன்றும் விலை உயர்ந்து வருகிறது. இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.464 வரை அதிகரித்துள்ளது. இன்றைய விலை ரூ. 26168.

10:58 (IST)21 Jun 2019

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பொதுப்பணித்துறை, மின்வாரியம், வேளாண் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர்.

10:43 (IST)21 Jun 2019

ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் – யாகம் நடத்திய சத்யநாராயணன்

நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம் மூலமாக பல்வேறு அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். நாடாளுமன்ற தேர்தலின் போது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும், எங்களின் இலக்கு 2021 சட்டமன்ற தேர்தல் தான் என்றும் கூறினார். இந்நிலையில் அவருடைய சகோதரர் சத்யநாராயணன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10:14 (IST)21 Jun 2019

Blood Donation : காவலர்கள் இரத்த தானம் வழங்கும் முகாம்

தமிழக காவல்த்துறையினர் ரத்த தானம் வழங்கும் முகாம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.  இன்று தமிழகத்தில் 81 இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் 13,868 காவலர்கள் இரத்த தானம் செய்கின்றனர்.

09:56 (IST)21 Jun 2019

AN 32 Aircraft Crash : அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்

அருணாச்சலப்பிரதேசத்தில் வெடித்து சிதறிய ஏ.என். 32 விமானத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

09:19 (IST)21 Jun 2019

IMD Report : மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  வடக்கு, தெற்கு வங்கக் கடல், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளுக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

Weather Forecasting & Warning based on 0830 IST dated 20.06.2019 pic.twitter.com/MmvPsySWtQ

09:11 (IST)21 Jun 2019

Nadigar Sangam Election 2019 – இன்று விசாரணைக்கு வருகிறது நடிகர் சங்க தேர்தல் விவகாரம்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால். அம்மனுவில் நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளில் பதிவாளர் தலையிட அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறியதை நேற்று மறுத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.  இந்நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது நடிகர் சங்க தேர்தல் விவகாரம் குறித்த மனு. 

09:04 (IST)21 Jun 2019

Chennai Water Crisis : அமைச்சர் வேலுமணியின் பதில் (2/2)

கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றும், சென்னையின் ஒரு நாள் தேவை என்பது 525 MLD. கேரளம் அனுப்பும் 2 MLD தண்ணீரை இங்கே நாம் சமாளித்துக் கொள்ளலாம். எனவே தேவை இருக்கும் போது நிச்சயமாக கேரள அரசின் உதவியை நாங்கள் பெறுவோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் இது தொடர்பாக இன்று நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

08:58 (IST)21 Jun 2019

Water Scarcity in Tamil Nadu : கேரளாவின் உதவியை மறுத்ததா தமிழகம் (1/2)

கேரள முதல்வர் பினராய் விஜயன் “தமிழக மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டினை உணர்ந்து 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் அளிக்க விரும்பி, உதவி செய்ய முன்வந்தது என்றும், ஆனால் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது” என்றும் நேற்று மாலையில் முகநூலில் பதிவு செய்திருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த உதவி மறுக்கப்படவில்லை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

08:51 (IST)21 Jun 2019

மொழிகளை கடந்து அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் யோகா தினத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதை முடித்து வெளியே வந்த செங்கோட்டையன், ”பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் யோகா பயிற்சி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மதம் – மொழிகளை கடந்து அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

08:48 (IST)21 Jun 2019

International Yoga Day 2019 : Prime Minister Narendra Modi Speech

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் 40 ஆயிரம் பேருடன் இன்று காலை யோகா செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பாக அவர் பேசிய போது, யோகக் கலை இந்தியர்களால் உலகுக்கு அளிக்கப்பட்ட கொடை என்று கூறினார். நல்வாழ்வுக்கான திறவு கோலாக அது செயல்படுகிறது என்றும் உலக அமைதிக்கு யோகா மிக முக்கியமான பங்காற்றுகிறது என்றும் அவர் கூறினார். யோகக் கலையின் பலன் ஏழை மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

08:44 (IST)21 Jun 2019

Fuel Price in Chennnai : மூன்றாவது நாளாகவும் எந்த மாற்றமும் காணாத பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 72.64க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.67.46 ஆகும்.

Tamil Nadu news today live updates : சென்னையில் மிகவும் வறட்சியை மக்கள் சந்தித்து வருகிறது. இதனை அறிந்து கொண்டு கேரள அரசு உதவுவதாக முன்வந்தது ஆனால் தமிழகம் அந்த உதவியை நிராகரித்துவிட்டது என்று கேரளா மாநில அரசின்  அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி, ப்ரபாத் தாரா வளாகத்தில் மாணவர்களுடன் யோகா செய்து மாணவர்கள் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் முக்கியமான செய்திகளை தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news live updates chennai rains water scarcity international yoga day political events

Next Story
இன்றைய வானிலை : ஜில்லுனு மாறிய சென்னை… ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டை நினைவில் கொள்ளுங்கள்!Chennai weather today chennai heavy rain alert IMD report
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com