Tamil Nadu news today updates : பள்ளிக்கல்வித்துறையில் ரூ 163 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் - விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. ரூ 21 கோடி செலவில் கண்காணிப்பு கேமிரா வசதி அமைத்துத் தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கர்நாடகாவில் நொடிக்கு நொடி அரசியல் மாற்றம் நடந்த வண்ணம் உள்ளது. இந்த மாற்றங்கள் அரசியல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. காங்., மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏ.,க்களும், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்எல்ஏ., ஒருவர் என மொத்தம் 14 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்துள்ள சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்ததுடன், பா.ஜ.,விற்கு தான் ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் போலீஸ் படையில் 23 லட்சத்து 79 ஆயிரத்து 728 இடங்கள் உள்ளன.இவற்றில் கடந்த 2018 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவர படி 18 லட்சத்து 51 ஆயிரத்து332 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 5லட்சத்து 28 ஆயிரத்து 396 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும,. 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், திமுக, திக, விசிக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
"காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை, பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தலைவர்களின் விவரம் பின் வருமாறு:
திமுக - மு.க.ஸ்டாலின், பொன்முடி
மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்
பாஜக - தமிழிசை சௌந்திரராஜன்
காங்கிரஸ் - போபண்ணா
விசிக - திருமாவளவன், ரவிக்குமார்
மதிமுக - மல்லை சத்யா
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகை தந்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் துவங்கியது.திமுக, மக்கள் நீதிமய்யம், பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்காததால், துணை முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அதன் தலைவர் கமல்ஹாசன், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்குகளை எண்ண மறுப்பு தெரிவித்து, விஷாலின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
கடந்த மாதம் 23ம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் நடக்கிறது. இதில் முக ஸடாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பஙகேற்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் 23ம் தேதி காஞ்சிபுரம் வர உள்ளார். பிரதமர் வருகையினால், அன்றைய தினத்தில், பொதுமக்களின் தரிசனத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அத்திவரதரை, தரிசிக்க தினந்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன், சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.
அதிமுக கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் கண்ட மாநில பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
27 மாதங்களாக தீர்மானங்களை கிடப்பில் போட்டிருந்ததாக மத்திய அரசு மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்தார். திமுகவின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
காஞ்சி அத்தி வரதர், ஏழாம் நாள் வைபவமான நேற்று, 1.20 லட்சம் பக்தர்கள், கடும் வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights