Advertisment

Tamil Nadu News today Updates : வண்டுமுருகன் அஜித்; கைப்புள்ள விஜய் - என்ன நடக்கிறது ட்விட்டரில்?

Tamil Nadu news today updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates : Tamil Nadu news today live updates : நேற்று சென்னையில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர். மழை நீர் சேகரிப்பிற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் தண்ணீர் போன்ற இன்றியமையாத தேவையின் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.

Advertisment

இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், ஜூன் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மழை பெய்ய வேண்டி, அ.தி.மு.க., சார்பில் கோவில்களில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் லைவ் அப்டேட்ஸ்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அதிக அளவில், நோட்டும், சீட்டும் கேட்பதால், அவர்களை வளைக்கும், தி.மு.க.,வின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.எனவே, சற்று பொறுத்து இருக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

தலைமை நீதிபதி கடிதம் : அதிக அளவில் வழக்குகள் தேங்குவதற்கு, போதிய நீதிபதிகள் இல்லாததே காரணம். அதனால், உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள, 31 நீதிபதிகள் பதவியிடத்தை, 37ஆக உயர்த்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கடிதம் எழுதியுள்ளார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.



























Highlights

    19:45 (IST)23 Jun 2019

    வண்டுமுருகன் அஜித்; கைப்புள்ள விஜய்

    ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மிக கீழ்த்தரமாக மோதிக்கொள்ளும் சம்பவத்திற்கு இதுவும் ஒரு உதாரணமாக விளங்குகிறது. இந்திய அளவில், வண்டுமுருகன் அஜித் என்கிற ஹேஷ்டேக்கும், கைப்புள்ள விஜய் எனும் ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது. இதில், அஜித், விஜய் ஆகியோரின் புகைப்படங்களை அருவருக்கத்தக்க வகையில் எடிட் செய்து, ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.

    19:15 (IST)23 Jun 2019

    309 ரன்கள் இலக்கு

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.23) நடைபெற்று வரும் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாக்., 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக, ஹரிஸ் சோஹைல் 89 ரன்கள் எடுத்துள்ளார்.

    18:11 (IST)23 Jun 2019

    ஹைட்ரோ கார்பன் விவகாரம், மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. மரக்காணத்தில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ, பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    17:24 (IST)23 Jun 2019

    முதுநிலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி : பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு

    முதுகலை ஆசிரியர் பணிக்கான கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும். 

    தொழில்நுட்ப கோளாறால், தேர்வை முழுமையாக முடிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும்.

    தேர்வு நாள் குறித்த விபரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    16:30 (IST)23 Jun 2019

    கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு

    மே 1ம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டங்கள், மக்களவை தேர்தலின் காரணமாக அப்போது நடைபெற இயலாமல் போனது. அதற்கு பதிலாக வரும் 28ம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    15:42 (IST)23 Jun 2019

    புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

    மீனவர்களுக்கான மானிய டீசல் வழங்க, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் நாளை( ஜூன் 24ம் தேதி) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    14:53 (IST)23 Jun 2019

    தண்ணீர் பிரச்னைக்கு அதிமுக என்ன செய்யும்? : தேமுதிக கேள்வி

    தண்ணீர் பிரச்னைக்கு அதிமுக என்ன செய்யும். அவர்களா தண்ணீர் உற்பத்தி் செய்கிறார்கள். மழை பெய்தால், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தீர்ந்துவிடப்போகிறது என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    13:53 (IST)23 Jun 2019

    குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : சென்னை போலீஸ் கமிஷனர்

    சென்னை கோடம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள் கார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    13:07 (IST)23 Jun 2019

    மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    மரக்கன்று நடும் மாணவர்களுக்கு தேர்வில் 2 மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கட்டணங்களை வசூலிப்பதால், பள்ளிகளுக்கு தேவையான குடிநீரை அவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என கூறினார்.

    12:41 (IST)23 Jun 2019

    Latest Tamil News : அதிமுகவின் யாகத்தினால் மழை : தமிழிசை சவுந்தர்ராஜன்

    அதிமுகவினர் நேற்று (ஜூன் 22ம் தேதி) மாநிலமெங்கும் உள்ள கோயில்களில் நடத்திய யாகத்தினால் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    12:17 (IST)23 Jun 2019

    செங்கல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

    செங்கல்பட்டு  மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.  - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    12:01 (IST)23 Jun 2019

    Latest Tamil News : தமிழக முன்னாள் டிஜிபி லட்சுமி நாராயணன் காலமானார்

    தமிழக முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார் .சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

    11:37 (IST)23 Jun 2019

    விபத்துகளில் மரணம் : முதல்வர் நிதியுதவி

    தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க  - முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    11:14 (IST)23 Jun 2019

    Latest Tamil News : தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை - சென்னை, கரூரில் திமுக ஆர்ப்பாட்டம்

    தண்ணீர் பிரச்னைக்காக தமிழக அரசைக் கண்டித்து சென்னை திருவான்மியூர், கரூரில் திமுக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

    திருவான்மியூர் ஆர்ப்பாட்டத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ வாகை சந்திரசேகர் பங்கேற்பு

    கரூரில் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்பு

    10:56 (IST)23 Jun 2019

    சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு தண்ணீர் பிரச்னை

    தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு குடிநீர் பிரச்சனை உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.  

    கல்குவாரிகளில் இருந்து சென்னைக்கு தினமும் 25 எம்.எல்.டி. குடிநீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

    10:34 (IST)23 Jun 2019

    எஸ்.வி. சேகரின் நாடக அரங்கேற்ற இடம் மாற்றம்

    நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம், இன்று ( ஜூன் 23ம் தேதி) எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த நாடகம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கல்லூரியில் தான் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பாதுகாப்பு கருதி போலீசார் தடைவிதித்ததால் தற்போது மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரியில் தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    10:28 (IST)23 Jun 2019

    Latest Tamil News : தண்ணீர் பிரச்னை - நாடகமாடுகிறது திமுக- அமைச்சர் உதயகுமார்

    தண்ணீர் பிரச்னை குறித்த திமுக கூறும் அவதூறு கருத்துகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.  தண்ணீர் பிரச்னைக்காக, போராட்டம் என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றி இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu news today live updates : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அதிக அளவில், நோட்டும், சீட்டும் கேட்பதால், அவர்களை வளைக்கும், தி.மு.க.,வின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.எனவே, சற்று பொறுத்து இருக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு குடிநீர் பிரச்சனை உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். கல்குவாரிகளில் இருந்து சென்னைக்கு தினமும் 25 எம்.எல்.டி. குடிநீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment