Tamil Nadu news today updates : ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.04க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.83 ஆகும்.

By: Oct 23, 2019, 11:14:32 PM

Tamil Nadu news today updates :   சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்த மருது சகோதரர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். 1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலடப் பட்டார்கள். இதனால், ஒவ்வொரு வருடமும் 24ம் தேதி தமிழக அரசு சார்பில் நினைவு தினமும் 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெரும் . இந்த வருட குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு பணிகள் பலபடுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற முக்கிய செய்திகைளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:25 (IST)23 Oct 2019
ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பி-யுமான திருமாவளவன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

22:19 (IST)23 Oct 2019
காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. 
தற்போது மேட்டூர் அணைக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

20:54 (IST)23 Oct 2019
சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தல் - அமைச்சர் கடம்பூர் ராஜூ டுவிட்

அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், சிறப்புக் காட்சியை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது; முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார்.

20:27 (IST)23 Oct 2019
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 4 ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிக்குள்ளான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைத்து புதுப்பிப்பதற்கான திட்டங்களுக்கு அமைச்சர்வை ஒப்புதல். இந்த 2 நிறுவனங்களுக்கும் சுமார் ரூ.14,000 கோடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:57 (IST)23 Oct 2019
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் ஜாமீன் மனுக்களை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ள் தள்ளுபடி செய்து உத்தரவு.

19:54 (IST)23 Oct 2019
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்கு முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு நன்றி

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்ச பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

19:24 (IST)23 Oct 2019
நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். பாஜக, அதிமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவருக்கு பாதுகாப்பில்லை என்பதை என்.சி.ஆர்.பி அறிக்கை காட்டுகிறது. அறிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தல்

18:56 (IST)23 Oct 2019
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

18:21 (IST)23 Oct 2019
காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி

காவல்துறையினருக்கான குடியரசு தலைவர், முதலமைச்சர் பதக்கம், அத்திவரதர் சிறப்பு பணி பதக்கங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் 596 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின் பேசிய முதலமைச்சர்: காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. அமைதி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது.

18:03 (IST)23 Oct 2019
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் திருப்பூர், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

17:27 (IST)23 Oct 2019
நிர்மலா சீதாராமன் - எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.  நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும்  நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் வேலுமணி கோரிக்கை வைத்தார். 

17:24 (IST)23 Oct 2019
காவலர்களுக்கு விருது வழங்கும் விழா!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் விருதுகளை தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 596 போலீசாருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் விருதுகளை முதல்வ வழங்கி வருகிறார் . அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக டிஜிபி திரிபாதிக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது

16:49 (IST)23 Oct 2019
பிஎஸ்என்எல் 4ஜி!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனம்   3ஜி யில் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கு தற்போது  4ஜி உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

16:21 (IST)23 Oct 2019
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்  என்று  போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் சேவை கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் இணைப்பு பேருந்துகள் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படும். 

16:15 (IST)23 Oct 2019
சோனியா காந்தி ஆலோசனை!

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் வரும் 25ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் சோனியா காந்தி. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.  மேலும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மூத்த ஆலோசகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

15:41 (IST)23 Oct 2019
சுபஸ்ரீ வழக்கு!

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய அவரின் தந்தையின் மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

15:39 (IST)23 Oct 2019
அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்!

கட்சி நிகழ்ச்சிகளின் போது தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என்று  உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே பேனர் வைக்க மாட்டோம் என திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில்  தற்போது அதிமுகவும் தாக்கல் செய்துள்ளது.

15:11 (IST)23 Oct 2019
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன்!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் திகார் சிறையில் இருக்கும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் டெல்லி உயர்நீதிமன்றம் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ. 25 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

15:07 (IST)23 Oct 2019
முதல்வர் உத்தரவு!

திண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 25ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிற்பித்துள்ளார். தண்ணீர் திறப்பு மூலம் 844 ஏக்கர் நிலம் பயன்பெறும் முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

15:05 (IST)23 Oct 2019
லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் பிடிப்பட்டார்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார் . வில்லிவாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் தமிழழகன் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் தமிழழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

14:49 (IST)23 Oct 2019
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று மாலை  16 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை  நீர்வரத்து, 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

13:46 (IST)23 Oct 2019
சென்னை வானிலை மையம் பேட்டி!

வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது . எனவே, சென்னை வானிலை ஆய்வு மையகடந்த சில நாட்களாக இருந்ததைவிட வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு குறைவாக பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்லது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் லேசான மழையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு  என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 

13:11 (IST)23 Oct 2019
பிகில் வழக்கு!

பிகில் அதிகாலை காட்சியை தடை செய்ய கோரியும், நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் அதிக பணம் வசூலித்தால் திரையரங்கத்தின் உரிமையை ரத்து செய்யக் கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். 

13:00 (IST)23 Oct 2019
தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம்!

தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. வருடம் தோறும் தீபாவளி அன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு காலை 6 மணி முதல் 7 மணி, மாலை 7 மணி முதல் 8 மணி வரை. 

12:27 (IST)23 Oct 2019
பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சிசி.ஐ ன் தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து , இன்று பி.சி.சி.ஐ ன் தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்    கங்குலி . 

12:21 (IST)23 Oct 2019
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ காவலில் இருந்து ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத் துறை காவலில் இருந்து வருகிறார். இந்த காவல் நாளையுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்தும் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்     

11:41 (IST)23 Oct 2019
பச்சையப்பன் கல்லூரி வழக்கு : மரக்கன்றுகள் நட உத்தரவிட்ட நீதிமன்றம்

பச்சையப்பன் கல்லூரி:  இந்த கல்வியாண்டின் தொடக்க நாளைக் கொண்டாடும் விதமாக, துரைராஜ்  என்கிற சட்டக்கல்லூரி மாணவர் போதுமக்கள் செல்லும் பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டடு , இடையூறு ஏற்படுத்தியதால்  போலீசார் அம்மாணவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவரின் எதிர் கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு வழக்கை ரத்து செய்தது. 

மேலும்,  அவர் படிக்கும் சட்டக் கல்லூரியில் 10 மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அதை  ஒரு மாதத்திற்கு பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

11:31 (IST)23 Oct 2019
பிரபல ரவுடி சிவக்குமார் கைது

மயிலாப்பூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பதிவாகியிருந்த பிரபல ரவுடி சிவக்குமாரையும்,  அவரின் நான்கு கூட்டாளிகளையும் சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

11:09 (IST)23 Oct 2019
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி :

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   

11:06 (IST)23 Oct 2019
அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

நில அபகரிப்பு புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருந்த  மு.க அழகிரி இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார்.  

10:57 (IST)23 Oct 2019
தீபாவளி போனஸ் விவகாரம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்

வரும் 27ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் விதமாக , தமிழக அரசாங்கத்தின் பல துறைகள் தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தன. ஆனால் , போக்குவரத்துத் துறை இன்னும் தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் சம்மந்தப்பட்ட அறிவிப்பைஇன்னும் வெளியிடவில்லை. இதனால் , போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம் அறிவித்துள்ளன.

10:47 (IST)23 Oct 2019
கீழடியில் நகர நாகரிகத்தின் சான்று கண்டுபிடிப்பு

சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டட  டெரகோட்ட பைப்புகள் ( குழாய்கள் )  கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  கீழடியில் நகர நாகரிகத்தின் சான்றாக இது அமைந்துள்ளது .  

Web Title:Tamil nadu news live updates chennai weather crime politics diwali nanguneri vikravandi byelection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X