Tamil Nadu news updates : ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதல்வர் உத்தரவு

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

By: Nov 3, 2019, 7:02:52 AM

Tamil Nadu news today live updates :  துபாயில் இருந்து வந்த ஏழு பயணிகளிடம் சுங்கத்துறை விசாரித்தத்தில் சட்ட விரோதமாக  ரூ.94 லட்சம் மதிப்புள்ள 2.33 கிலோ தங்கம் கடத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேற்கொண்ட விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் சூரசம்ஹாரத்தைக் கான எண்ணற்ற மக்கள் அங்கு குவிந்துள்ளனர். இன்று மாலையில் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற முக்கிய தலைப்புச் செய்திகளை கான இந்த லைவ் ப்ளொக்கில் இணைந்திருங்கள்.

Live Blog
Tamil Nadu news today live updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:30 (IST)02 Nov 2019
ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதல்வர் உத்தரவு

கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த தண்ணீர் திறப்பு மூலம் 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பது குறிப்பிடத்தக்கது.

21:38 (IST)02 Nov 2019
ரஜினி மேலும் திரைத்துறையில் சாதிக்க வாழ்த்துகள் – ராமதாஸ்

கோவாவில் இம்மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு Icon of Golden Jubilee award வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

20:18 (IST)02 Nov 2019
சந்திரயான் 2 முடிவல்ல – மீண்டும் முயற்சிப்போம்…இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ, சந்திராயன் 2 பயணத்தை ஒரு முடிவாக நினைக்கவில்லை.  நிலலை நோக்கிய பயணம் மீண்டும் துவங்கும் என்று இஸ்ரோ தலைவன் சிவன் கூறியுள்ளார்.

19:40 (IST)02 Nov 2019
தாய்லாந்து மொழியிலான திருக்குறள் பதிப்பு – பிரதமர் மோடி வெளியீடு

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.

18:55 (IST)02 Nov 2019
திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம் – பக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் கஜமுக வடிவில் வந்த சூரபத்மனை வதம் செய்தார் முருகன். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். வதம் செய்த நிகழ்வின் போது பக்தர்களின் அரோகரா கோஷம் வானை பிளந்தது.

18:21 (IST)02 Nov 2019
விருது அறிவிப்பு – ரசிகர், நண்பர்களுக்கு ரஜினி நன்றி

நடிகர் ரஜினிகாந்துக்கு, மத்திய அரசு சார்பில் கோவா திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்ப்டடுள்ளது. இந்த விருது அறிவிப்புக்கு முதலில் மத்திய அரசுக்கு டுவிட்டர் மூலம் ரஜினி நன்றி தெரிவித்திருந்தார். தனது இரண்டாவது டுவிட்டர் பதிவில், இந்த விருதை தான் பெற தான் காரணமாக இருந்த நண்பர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள், திரைத்துறையின் சக கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

17:40 (IST)02 Nov 2019
திருமாவளவன் கோரிக்கை!

தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்னையை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.   பஞ்சமி நிலம் தொடர்பாக தமிழகத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில் திருமாவளவன் முதல்வர் எடப்பாடிக்கு இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

17:37 (IST)02 Nov 2019
அதிமுக எம்.எல் ஏ. மரணம்!

புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புருஷோத்தமனுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது . இந்நிலையில் தனது தோட்டத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருக்கும் போது புருஷோத்தமனை விஷ வண்டு கடித்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 

17:28 (IST)02 Nov 2019
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண அலை அலையாய் பக்தர்கள் கூட்டம் திரண்டு வழிகிறது. யானை முகத்தில் வந்த சூரனை முருகன் வதம் செய்தது திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படும். 

16:31 (IST)02 Nov 2019
ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கருணாஸ்!

நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள்  என்று நடிகரும், எம்.எல்.ஏ வுமான கருணாஸ்  தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர், நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது  என்றும் அவர் கூறியுள்ளார். 

16:29 (IST)02 Nov 2019
தமிழை காணவில்லை!

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று, போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகைசீட்டில் தமிழை காணவில்லை - என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

15:16 (IST)02 Nov 2019
அடிக்கல் நாட்டு விழா!

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், தாம்பரம் - வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 207 கோடி ரூபாய் செலவில் புதிய ரெயில்வே பாலம் கட்டப்படுகிறது. சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இப்பாலத்திற்கு, அடிக்கல் நாட்டினார்.

14:26 (IST)02 Nov 2019
தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து!

அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்த நடிகர் ரஜினிக்கு வாழ்த்து, படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா  என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். 

14:23 (IST)02 Nov 2019
ஜி.கே வாசன் வாழ்த்து!

மத்திய அரசு விருது அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   ரஜினியை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு வாசன் வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

13:50 (IST)02 Nov 2019
பொள்ளாச்சி குற்றவாளிகள் தப்பக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை- மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு தொடர்பான செய்திக்கு ‘க்ளிக்’ செய்யவும்.

13:26 (IST)02 Nov 2019
அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு

சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்தார். அப்போது தனது மகள் திருமண அழைப்பிதழை ஸ்டாலினுக்கு வழங்கினார் ஹெச்.ராஜா.

12:09 (IST)02 Nov 2019
உயரிய கவுரவம்: மத்திய அரசுக்கு ரஜினி நன்றி

வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா பொன்விழாவையொட்டி இந்த உயரிய கவுரவத்தை வழங்கியிருப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.    

11:56 (IST)02 Nov 2019
ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. வருகிற 20-ம் தேதி கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.  

10:48 (IST)02 Nov 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் கண மழை கொட்டி தீர்த்தது. இதன் தொடர்ச்சியாக, ரமானாதபுரத்தில் உள்ள அணித்து பள்ளிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.      

10:31 (IST)02 Nov 2019
தாய்லாந்து மொழியில் திருக்குறள்!

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (2.11.19) தாய்லாந்து செல்கிறார். அதனைத் தொடர்ந்து பாங்காங்கில் நடைபெறும் ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.  இந்த சிறப்பு பயணத்த்கில் மற்றொரு சிறப்பு வெளியீடும் அரங்கேறவுள்ளது. தாய்லாந்தில் குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி  அந்நாட்டு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை மோடி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:15 (IST)02 Nov 2019
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறவிக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்

2016 ல் நடக்க வேண்டிய தமிழக உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு சூழ்நிலையால் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்றார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.     

09:57 (IST)02 Nov 2019
திருச்சி பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை - 5 பேரிடம் விசாரணை

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ. 143  கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது . சமந்தப்பட்ட நபர்களையும் , முக்கிய தடயங்களையும்  போலீசார் முழு மூச்சுடன் தேடி வருகின்றனர். இந்நிலையில்,  இது தொடர்பாக இன்று ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது  திருச்சி காவல் துறை.  

09:46 (IST)02 Nov 2019
மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் லஞ்சம் வாங்கியதால் கைது:

திருவண்ணாமலை மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் வேல்முருகன் ரூ . 3000 லஞ்சம் வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   மறைந்த அரசு அதிகாரியின் ஓய்வூதியத்தை அவரது மனைவிக்கு மாற்ற வேண்டி வந்த மனுவிற்கு ரூ. 3000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.   

09:41 (IST)02 Nov 2019
டிடிவி தினகரன் பின் யாரும் இல்லை

உள்ளாட்சித்  துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அமமுக கட்சியில் இருந்த முக்கிய நபர்கள் எல்லாம் அதிமுக வில் இணைந்துவிட்டனர். டிடிவி தினகரன்  தற்போது ஒத்தையில் தான் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் கூறினார் .    

09:28 (IST)02 Nov 2019
ஷாருக் கானின் 54வது பிறந்த நாள்

இன்று உலகம் முழுவதும் ஷாருக் கானின்  ரசிகர்கள்  அவரின் 54வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு அவரின் வீட்டிற்கு  முன் நின்று ஆயிரக்கனக்கான ரசிகர்கள் வாழ்த்து சொல்ல காத்திருந்தனர்.  ஷாருக் கானும் ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பரிமாறினார். 

09:19 (IST)02 Nov 2019
பிரதமர் தாய்லாந்து நாட்டிற்கு இரண்டு நாள் பயணம்:

16 வது ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு, 14 வது கிழக்கு ஆசியா உச்சி மாநாடு , 3 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு உச்சி மாநாடு  (ஆர்சிஇபி)  போன்றவைகளில் கலந்து கொள்வதற்காக இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்று பயணமாக தாய்லாந்து நாட்டிற்கு செல்கிறார்.  இந்த மூன்று அமைப்பிலும் இந்தியாவின் பங்களிப்பை அதிகப்படுத்த, இந்த சுற்று பயணம் உறுதுணையாய் இருக்கும் என்று நம்பப்படுகிறது   

Tamil Nadu news today live updates :  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்ஏல்ஏக்களுக்கு சபநாயகர் தனபால் நேற்று பதவிபிராமணம் செய்து வைத்தார்.

சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் இல்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Web Title:Tamil nadu news live updates chennai weather crime politics soorasamharam dmk admk tamil cinema saturday news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X