Tamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்

Tamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!

By: Jun 14, 2019, 9:18:37 PM

Tamil Nadu news today : சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான மழை இல்லாததாலும், பெய்த மழையை சேகரிக்க தவறியதுமே இதற்குக் காரணம்.

Tamil Nadu Latest News Live Updates

இந்நிலையில் குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி, பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லியிருக்கின்றன.

இது போல் மற்ற அனைத்து தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க.. 

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!  
21:18 (IST)14 Jun 2019
பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்குது விஷால் - நடிகை ராதிகா

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு சரத்குமார் குறித்து விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு பதில் அளித்துள்ள ராதிகா, "சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிகையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா..? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும் போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா..?

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா..? படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்து விட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே..? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டோ..?" என்று ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

21:06 (IST)14 Jun 2019
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆபத்தான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு ரயிலில் பாய்ந்து அந்த நபர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதையடுத்து, அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

20:39 (IST)14 Jun 2019
அதிமுக அரசு அலட்சியம் - ஸ்டாலின் கண்டனம்

தமிழக மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட வேண்டும். தண்ணீர் பிரச்னைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை. மழை பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

19:04 (IST)14 Jun 2019
ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம் - காங்கிரஸ் தலைவர் அழகிரி

தேனியில் வெற்றி பெற்ற அதிமுகவின் ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

18:23 (IST)14 Jun 2019
தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக்கொண்டே இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

17:42 (IST)14 Jun 2019
யுவ புரஸ்கார் விருது!

சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது 'வால்' என்ற கவிதை தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. 

17:33 (IST)14 Jun 2019
Tamilnadu latest news : முதல்வர் பயணம்!

நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:47 (IST)14 Jun 2019
Today news : குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு!

குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.  இதன்படி  சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி,  திருச்சி மண்டலத்திற்கு ரூ.109கோடி,  மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடி, கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

14:45 (IST)14 Jun 2019
Tamil nadu today news : ஸ்டாலின் அஞ்சலி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், மறைந்த எம்.எல்.ஏ ராதாமணியின் உடலுக்கு நேரில்  அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.  அப்போது அவருடன் ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூட சிந்திக்க வைக்கும் வகையில் சட்டப்பேரவையில் ராதாமணி பேசுவார் என்றும்  அவரது மறைவு திமுக-விற்கு பேரிழப்பு  எனவும்  ஸ்டாலின் தெரிவித்தார்.

14:32 (IST)14 Jun 2019
நடிகர் பாக்யராஜ் பேட்டி!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து நடிகர் சங்க தேர்தலில்  ஆதரவு பெற சுவாமி சங்கரதாஸ் அணி ஒன்றாக சேர்ந்து சென்றிருந்தனர்.  சந்திப்புக்கு பின்பு அந்த அணியை சேர்ந்த இயக்குனர் பாக்யராஜ்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவிற்கு தன்னை அழையுங்கள் என கமல் கூறினார். எங்கள் அணியின் தேர்தல் அறிக்கையை கமலிடம் காண்பித்தோம்” என்றார். 

12:40 (IST)14 Jun 2019
சீமான் போராட்டத்திற்கு தடை!

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ராதாபுரத்தில் சீமான் தலைமையில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

12:27 (IST)14 Jun 2019
Tamilnadu political news : ஸ்டாலின் இரங்கல்!

திமுக எம்.எல்.ஏ ராதாமணி மற்றும் முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 12:05 (IST)14 Jun 2019
Nadigar sangam election : சுவாமி சங்கரதாஸ் அணி!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் ஆதரவு கேட்டனர்..

11:38 (IST)14 Jun 2019
latest political news : அதிமுக- வில் இணைந்தனர்!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். அதிமுகவில் இணைந்த அனைவரையும் முதல்வர் எடப்பாடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

11:36 (IST)14 Jun 2019
Latest tamil nadu news : நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார்!

நடிகர் சங்க தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், நடிகரும், முன்னாள் சங்க தலைவருமான சரத்குமாரிடம் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில், “ நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால், யாருக்கு ஆதரவு என்பது குறித்து கருத்து கூற முடியாது ” 

11:19 (IST)14 Jun 2019
News in tamil : அமைச்சர் செங்கோட்டையன்!

9 முதல் 12-ம் வகுப்பு வரை, வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும்  என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும்,   தமிழக பாடத் திட்டங்களை, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர்  எனவும் அவர்  கூறினார். 

11:04 (IST)14 Jun 2019
Tamil nadu political news : சிவசுப்பிரமணியன் மறைவு!

அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்   அவரின் உடல் ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

https://images.tamil.indianexpress.com/uploads/2019/06/sachin-13.jpg

முன்னதாக இன்று காலை விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ  ராதாமணி இன்று மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10:59 (IST)14 Jun 2019
Swami Sankaradas Ani : நடிகர் சங்க தேர்தல்!

நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி' இன்று கமல்ஹாசனை சந்தித்து , நடிகர் சங்க தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் படி  கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இரண்டு தினங்களுக்கு முன்பு இதே அணி  விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தது. 

10:06 (IST)14 Jun 2019
தகவல்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கட்டும்.

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள், மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

09:34 (IST)14 Jun 2019
Breaking news: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ மரணம்

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ராதாமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைந்தார்.  

09:12 (IST)14 Jun 2019
வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்

சென்னையில் செயல்படும் ஐ.டி உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி தங்களது ஊழியர்களை சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. வீட்டிலும் தண்ணீர் இல்லை, அலுவலகத்திலும் இல்லை என நொந்து கொள்கிறார்கள் மக்கள். 

09:00 (IST)14 Jun 2019
Tamil nadu news: சாப்பாடு இல்லை

குடிநீர் பஞ்சத்தினால் சென்னை ஹோட்டல்களில் குறைவாக சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தெரிவித்து பல உணவகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu news today live updates: தமிழகத்தின் முக்கியப் பிரச்னையாக குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் பல நிறுவனங்களை மூடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல ஹோட்டல்களில் உணவுகளை குறைவாக சமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுபோல் தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள், அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், பொதுப் பிரச்னைகள், நீதிமன்ற செய்திகள், சினிமா, விளையாட்டு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title:Tamil nadu news live updates chennai weather crime politics water scarcity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X