Advertisment

மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ 76 உயர்வு: சென்னையில் ரூ 696-க்கு விற்பனை

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LPG price Rise in Chennai, LPG subsidiezed Cylinder price rise , கேஸ் சிலிண்டர் விலை

LPG price Rise in Chennai, LPG subsidiezed Cylinder price rise , கேஸ் சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை கடுமையாக ஏற்றம் :

Advertisment

தொடர்ந்து மூன்றாவது முறையாக மானிய எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி  சிலிண்டரின் விலை ரூ. 76 -க அதிகரித்துள்ளது. இதனால்,  சென்னையில் 696 என்ற கணக்கில் சிலிண்டர் விற்பனையாகும். கடந்த மூன்று மாதங்களாக, மாதத்தின் முதல் நாள் சிலின்டரின் விலை மாற்றியமைக்கப்படுகிறது.அக்டோபர் மாதத்தில் ரூ. 15 ம் , செப்டம்பரில் ரூ.  15.50 ம்  உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்போது ஏற்றப்பட்ட விலை மிகவும் அதிகமாக கருதப்படுகிறது.

தமிழக அரசு மருத்துவ சங்கம் நடத்தி வந்த வேலைநிறுத்தம் முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக  நிறுத்தி வைத்துள்ளனர்.

நவம்பர் ஒன்றாம் நாள், 1956 ம் ஆண்டு  மொழிவாரியாக  மெட்ராஸ் ராஜஸ்தானியம் என்பதை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு என்ற தனிமாநிலம் உருவான இந்நாளை தமிழ்நாடு நாள் என்று அரசு கொண்டாடி வருகிறது.

 

இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள  இந்த லைவ் ப்ளோகை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu news today live updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்














Highlights

    22:12 (IST)01 Nov 2019

    வேட்டி கட்டினால் தமிழர்களை ஏமாற்ற முடியாது – கி.வீரமணி

    வேட்டி கட்டினால் தமிழர்களை ஏமாற்ற முடியாது, எந்த மயக்க மருந்தையும் கொடுத்து தமிழர்களை மயக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் தேதியைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    20:34 (IST)01 Nov 2019

    தண்ணீர் கேனில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

    வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த வீரமணி-ரம்யா தம்பதியின் மகள் யஷ்வந்திகா. 3 வயதான அக்குழந்தை, வீட்டின் அருகே துணி துவைக்கும் இடத்தில் விளையாடியுள்ளது. டிரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி டிரம்முக்குள் தலைகீழாக விழுந்ததில், மூச்சு திணறல் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக  குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர்.  டிரம்மில் மூழ்கி மூன்று வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

    19:58 (IST)01 Nov 2019

    ஆங்கிலத்தை விட 3 மடங்கு அதிக சொற்களை கொண்டது தமிழ் – அமைச்சர் பாண்டியராஜன்

    ஆங்கிலத்தை விட 3 மடங்கு அதிக சொற்களை கொண்டது தமிழ், மேலும் 10 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் நடைமுறைக்கு வர‌வுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    19:28 (IST)01 Nov 2019

    தமிழகத்தில் நடப்பது மத்திய அரசின் எடுபுடி

    பண பலத்தைக் கொண்டே இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை மதுரவாயலில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக பண பலத்தைக் கொண்டே வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார். வரும் காலங்களில் அக்கட்சி, எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இல்லை என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கான எடுபுடி ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

    18:50 (IST)01 Nov 2019

    கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது – முதல்வர் பழனிசாமி

    கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது என்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    18:17 (IST)01 Nov 2019

    சிவகங்கை மாவட்டத்தில் உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

    சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    17:22 (IST)01 Nov 2019

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு!

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.  இந்நிலையில் இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

    17:05 (IST)01 Nov 2019

    ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!

    ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்  வரும் நவம்பர் 13ம் தேதி தொடங்குகிறது, நவம்பர் 30ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    17:03 (IST)01 Nov 2019

    மதுரை கீழடி கண்காட்சி!

    மதுரை கீழடி கண்காட்சியை காணொலிக்காட்சி மூலம் முதல் இன்று திறந்து வைத்தார். அரியலூரில் ரூ.809 கோடி மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

    16:39 (IST)01 Nov 2019

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் முருகன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முருகனை  சாதாரண சிறை பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    16:36 (IST)01 Nov 2019

    21 திட்டங்களுக்கு அனுமதி!

    அரசு அனுமதிக்காக விண்ணப்பித்து பல்வேறு நிலைகளில் இருந்த 21 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  ரூ.8,120 கோடி மதிப்பிலான இந்த தொழில் முதலீடுகள் மூலம் 16,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உறுதியாகியுள்ளது  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    15:51 (IST)01 Nov 2019

    மு. க ஸ்டாலின் ட்வீட்!

    தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அதிமுக அரசு மாறி இருக்கிறது என்று, தமிழகத்தில் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி இல்லை பாஜக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

    15:31 (IST)01 Nov 2019

    ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு!

    ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிதம்பரம் உடல் நிலையை கருத்தில் கொண்டு கொசுவலை, மாஸ்க் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி தொடரப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நிராகரிப்பட்டுள்ளது.

    சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்தது.  

    14:40 (IST)01 Nov 2019

    மீண்டும் இணைந்த இரு துருவங்கள்!

    தேனியில் பாரதிராஜா மற்றும் இளையராஜா சந்திப்பு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயலும், இசையும் இணைந்தது, இதயம் என் இதயத்தை தொட்டது என பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

    14:30 (IST)01 Nov 2019

    பொள்ளாச்சி வழக்கு!

    தமிழகத்தையே புரட்டி போட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளனது. இவர்கள் மீதான் குண்டர் சட்டத்தை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

    13:33 (IST)01 Nov 2019

    பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் கொள்ளை

    திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.50 கோடி பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த, சில முக்கியத் தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். பெரிய நிறுவனத்துக்குள் இருக்கும் கூட்டுறவு வங்கியில் பணம் களவாடப்பட்டிருப்பது அனைவரயும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    சில நாட்களுக்கு திருச்சி பஸ் ஸ்டாண்டில் அருகில் இருக்கும் லலிதா ஜுவல்லரியில் நகை கொல்லையடிக்கப்பட்டன  என்பதும் குறிப்பிடத்தக்கது

    13:24 (IST)01 Nov 2019

    2ஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:

    2ஜி விவகாரத்தில்  ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரனையை அடுத்த மாதம் நவம்பர் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர் நீதி மன்றம் 

    12:54 (IST)01 Nov 2019

    மஹா புயல் - தமிழகம் பயப்படத் தேவையில்லை

    அரபிக் கடலில்  மையம் கொண்டிருந்த மஹா புயல் மிக வேகமாக வடமேற்கு நோக்கி நகர்வதால் தமிழகம் கடலோர மாவட்டங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    publive-image

    publive-image

    publive-image

    11:20 (IST)01 Nov 2019

    அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்

    நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கடந்த எட்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக அரசு மருத்தவர்கள் சங்கம், இன்று காலை தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் செய்தது. இதனால், பிரேக் இன் சர்வீஸ் ( பணி முறிவு ) என்ற துறை சார்ந்த நடவடிக்கையை அரசு கைவிடுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  மேலும் , மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.  

    11:10 (IST)01 Nov 2019

    ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் இந்தியா வருகை

    இரண்டு நாள் அரசு முறை பயனாமாக இந்தியா வந்து ஜனாதிபதி மாளிகையில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலை இந்தியா பிரதமர் வரவேற்றார்.  இன்று இந்தியப் பிரதம மந்திரியோடு நடக்கும் இருநாட்டு தலைவர் சந்திப்பில் - இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை பலபடுத்துவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

    publive-image

    publive-image

    publive-image

    10:54 (IST)01 Nov 2019

    உமா மகேஸ்வரி கொலை வழக்கு - சீனியம்மாள் திமுக-வில் இருந்து நீக்கம்

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் சீனியம்மாள், மற்றும்  அவரது கணவர் சன்னாசி உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்  .  இந்நிலையில்,  சீனியம்மாளையும்,  அவரது கணவரையும் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பை, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.       

    10:21 (IST)01 Nov 2019

    புதுச்சேரி காமராஜ் நகர் வேட்பாளார் பதவியேற்பு

    கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த புதுச்சேரி காமராஜ் நகர்  இடைத் தேர்தலில் காங்கிரஸ்  வேட்பாளர் ஜான் குமார் 7000க்கும் அதிகாமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று, ஜான் குமார் புதுச்சேரியின் சட்டமன்ற உறுப்பினராக முறைப்படி பதியேற்றார்.   

    10:10 (IST)01 Nov 2019

    புது எம்எல்ஏக்கள் பதவியேற்பு:

    நான்குனேரி  அதிமுக வேட்பாளர் நாராயணன், விக்கிரவாண்டி  அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் சற்று முன்பு  சட்டமன்ற உறுப்பினர்களாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால்  சென்னை தலைமை செயலகத்தில்  இந்த பதவிப்பிரமாணத்தை  செய்து வைத்தார்.

    09:18 (IST)01 Nov 2019

    ஜெயலலிதா நினைவிடத்தில் புதிய எம்எல்ஏக்கள் மரியாதை

    சில நாட்களுக்கு முன்பு  விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது.   நான்குனேரி தொகுதியில் 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும் வெற்றி பெற்றனர்.

    இன்று, இந்த இரு எம்எல்ஏக்களும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். 

    09:08 (IST)01 Nov 2019

    இன்று தமிழ்நாடு நாள் - துணை முதல்வர் வாழ்த்து

    தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளான இப்பொன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பேரறிஞர் அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர்களையும் இந்நாளில் நினைவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    09:01 (IST)01 Nov 2019

    மருத்துவர்களின் 8 நாள் வேலைநிறுத்தம் வாபஸ்

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான சம்பளம் அளிக்கப்பட வேண்டும் போன்ற நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. கடந்த 8 நாட்களாக இந்த போராட்டம் நடை பெற்று வந்த சூழ்நிலையில்,   பொதுமக்கள் பாதிக்கும் வகையில் மருத்துவர்களின் செயல்பாடு இருக்குக் கூடாது என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் முன் வைத்தார். மேலும், கொடுக்கப்பட்ட கெடுவுக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சுற்றரிக்கையும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது . இந்நிலையில், இன்று முதல் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக  வாபஸ் பெறுவதாக  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.  

    Tamil Nadu news today live updates : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளிடையே 50;50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசியுள்ளனர். வழக்கமான சந்திப்ப தான் என்று சிவசேனா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் நேற்று காலை 6 மணிக்கு அவரது வீட்டில் காலமானார்  காலமானார். அவருக்கு வயது 83.

     

     

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment