Advertisment

Tamil Nadu news today updates : 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை - உச்சநீதிமன்றம்

Parliament Session : நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பிக்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News today live updates

News today live updates

Tamil Nadu news updates Chennai weather Mumbai Flood : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அரபிக்கடலோரம் அமைந்திருக்கும் கடற்கரை மாவட்டங்கள் எல்லாம் கனமழையில் இதமாக நனைந்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2005ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பு, இப்படி ஒரு கனமழையை மும்பை மக்கள் கண்டிருக்க மாட்டார்கள். நேற்று ஒரே நாளில் 400 மி.மீ கனமழை மும்பையில் பதிவாகியுள்ளது. இன்று காலை இதன் வேகம் சற்று தனிந்திருந்தாலும், இன்று மதியம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Mumbai Rains 2019 :  ஊரெங்கும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த கனமழை நாளை மட்டும் நாளை மறுநாளும் தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : சென்னை, கோவை, தேனி மாவட்டங்களுக்கு இன்று மழை – வானிலை அறிக்கை

Tamil Nadu Weatherman Update on Mumbai Flood

நான்கு நாட்களாக விடாமல் கொட்டிய கனமழையால் மும்பை தெருக்களில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 400 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கொட்டிய மழையின் அளவு

29.06.2019 – 235 மி.மீ

30.06.2019 – 93 மி.மீ

01.07.2019 – 92 மி.மீ

02.07.2019 – 375 மி.மீ ( இன்று காலை 5.30 மணி வரை)

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, Mumbai Flood, Tamil Nadu Water Scarcity, TN assembly : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    20:25 (IST)02 Jul 2019

    அனைத்து கல்லூரிகளிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு

    மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து கல்லூரிகளிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:35 (IST)02 Jul 2019

    ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்த வைகோ

    மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தொடர்ந்து பேட்டியளித்த வைகோ, "மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கியதற்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன்" என்றார்.

    19:29 (IST)02 Jul 2019

    11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை

    ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேபோன்று, 3 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.

    18:31 (IST)02 Jul 2019

    கிரண் பேடியின் கருத்தில் உள்நோக்கம் இல்லை - தமிழிசை

    ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் குறித்து கிரண்பேடி தெரிவித்த கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.

    17:43 (IST)02 Jul 2019

    எம்.எல். ஏ ரத்தினசபாபதி பேட்டி!

    'டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர். தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும்.  மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன். அமமுகவை பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வர வேண்டும் . அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்' என்று முதல்வரை சந்தித்த பின்பு எம்.எல். ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். 

    17:19 (IST)02 Jul 2019

    எம்.எல். ஏ ரத்தினசபாபதி!

    அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி இன்று  முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார் 

    16:52 (IST)02 Jul 2019

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்!

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடக்க இருந்த நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    16:52 (IST)02 Jul 2019

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்!

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடக்க இருந்த நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    16:20 (IST)02 Jul 2019

    அமைச்சர் அன்பழகன்!

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார் 

    15:56 (IST)02 Jul 2019

    மாநிலங்களவை தேர்தல்!

    மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் வரும் 6-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அன்றைய தினமே மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

    15:29 (IST)02 Jul 2019

    உள்ளாட்சி தேர்தல்!

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகள் எப்பொழுது தொடங்கும்  என்பதை 2 வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    15:26 (IST)02 Jul 2019

    பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி!

    நியூசிலாந்தில் நடைப்பெற்று வரும் ஐசிசி உலககோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு  செய்துள்ளது. இம்முறை சிறிய மாற்றத்துடன் இந்திய அணி களம்மிறங்கியுள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ்க்கு பதிலாக புவனேஷ் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    15:20 (IST)02 Jul 2019

    அமைச்சர் காமராஜ் பேச்சு!

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய அமைச்சர் காமராஜ், “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை விவகாரத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும்”என்றார்.

    15:17 (IST)02 Jul 2019

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் உசேன் பதவி ஓய்வு பெறுவதால் அருண்குமார் சின்கா த்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    15:14 (IST)02 Jul 2019

    தமிழகம் வரும் மோடி!

    பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி .  இம்மாதம் 3-வது வாரம் நடைபெறும் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை பிரதமர் மோடி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மோடியின் வருகையொட்டி பலத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. 

    15:08 (IST)02 Jul 2019

    ஆளுநருடன் சந்திப்பு!

    தலைமை செயலாளராக புதியதாக பதவியெேற்ற கே.சண்முகம் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆளுநார் பன்வாரிலாலை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

    14:08 (IST)02 Jul 2019

    வைகோவுக்கு சிக்கல்!

    ராஜ்ய சபா எம்பியாக  திமுக சார்பில் வைகோ ஒருமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்  2009 ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் திமுக தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.

    இதனால் மதிமுகவிலிருந்து வைகோ மாநிலங்களவைக்கு செல்வார் என்ற முடிவு இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.  ஜூலை 5ஆம் தேதி வரும் தீர்ப்பைப்பொறுத்துதான் வைகோ மாநிலங்களவைக்கு செல்வாரா என்பது உறுதியாகும்

    12:33 (IST)02 Jul 2019

    10% இட ஒதுக்கீடு குறித்து முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி

    10% இட ஒதுக்கீடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டினை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருக்கிறது மத்திய அரசின் திட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    12:01 (IST)02 Jul 2019

    மதிமுகவின் மாநிலங்களவை எம்.பியாகிறார் வைகோ

    திமுக மற்றும் மதிமுக செய்துகொண்ட தேர்தல் கூட்டணி இப்பந்தத்தின் படி ராஜ்யசபை உறுப்பினருக்கான ஒரு இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் மற்றும் சண்முகம் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மதிமுக சார்பில் வைகோவை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது மதிமுக.

    11:52 (IST)02 Jul 2019

    அதிமுகவில் இணைகிறார் இசக்கி சுப்பையா

    அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது ஜெயலலிதா என்றும் என்னை தினகரன் அடையாளம் காட்டவில்லை என்றும் நெல்லையில் பேசிவருகிறார் அம்மாவட்ட அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா. தினகரன் ஏன் தவறாக பேசுகிறார் என்று தெரியவில்லை என்று கூறிய இசக்கி சுப்பையா, மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்றும் கூறியுள்ளார். பாஜக மற்றும் திமுகவில் இருந்தும் கூட அழைப்பு வந்தடது ஆனால் அதிமுகவில் இணையவே விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    11:31 (IST)02 Jul 2019

    11 பேர் தகுதி நீக்க வழக்கு

    11 எம்.எல்.ஏக்கள் தகுந்தி நீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தங்கத் தமிழ்செல்வன் சார்பில் கபில் சிபில் உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வில் கோரிக்கை. புதிய நீதிபதி அமர்வின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பு. 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அவருக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

    11:29 (IST)02 Jul 2019

    கிரண்பேடியை எதிர்த்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்

    தமிழக அரசு மற்றும் மக்களை விமர்சித்து ட்வீட் செய்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம். திமுக சார்பில் டி.ஆர். பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    11:26 (IST)02 Jul 2019

    தெருவிளக்குகள் அமைப்பதற்காக எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து நிதி தர வகை செய்ய வேண்டும் - துரைமுருகன்

    தெருவிளக்குகள் அமைப்பதற்கான பணிக்கு எம்.பி. தொகுதியின் நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதைப் போல், எம்.எல்.ஏக்களின் தொகுதி நிதியில் இருந்தும் ஒதுக்கும் வகையில் அனுமதி தர வேண்டும் என்று அனுமதிக்க காட்பாடி எம்.எல்.ஏ மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேரவையில் பேச்சு

    10:58 (IST)02 Jul 2019

    சென்னை மெட்ரோ

    சென்னையில் நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயங்காத காரணத்தால் மெட்ரோ ரயில்களில் நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் நபர்கள் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ அறிவித்துள்ளது. இன்றும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    10:49 (IST)02 Jul 2019

    எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால்

    ரூ. 1 கோடி மதிப்பிலான சேவை வரி தொடர்பான வழக்கில் இன்று நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜரானார்.

    10:41 (IST)02 Jul 2019

    2395 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன - செல்லூர் ராஜூ

    2011 முதல் 2019 வரையான காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 673 முழுநேரம் ரேசன் கடைகளும், 1722 பகுதிநேர ரேசன் கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல். மேலும் திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    10:33 (IST)02 Jul 2019

    புதுவை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

    தமிழக மக்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ட்வீட் செய்ததிற்கு கண்டனம் தெரிவித்ததை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் நேற்று சட்டப்பேரவையில் இருந்து திமுக நேற்று வெளியேறியது. இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தினை கையில் எடுத்துள்ளது திமுக.  புதுவை ஆளுநரின் இந்த செயல் தரம் தாழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட அம்மாநில முதல்வர், தமிழக மக்களை குறைசொல்ல கிரண் பேடிக்கு அருகதை இல்லை என்றும், தமிழகத்தைப் பற்றி பேச கிரண் பேடிக்கு என்ன தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

    10:10 (IST)02 Jul 2019

    அதிமுகவில் இணைகிறாரா இசக்கி சுப்பையா?

    தென்காசியில் வருகின்ற 6ம் தேதி மாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார் அமமுகவின் முக்கிய நிர்வாகி இசக்கி சுப்பையா. இதற்காக சொந்த ஊரில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போட ஏற்பாடு செய்துள்ளார் இசக்கி. ஏற்கனவே தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    09:47 (IST)02 Jul 2019

    மிக் 21 போர் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்... கோவை அருகே பரபரப்பு

    சமீபமாக இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை கண்காட்சியின் ஒத்திகையின் போது இரண்டு விமானங்கள் நொறுங்கி விழுந்தன. கடந்த மாதம் இமாச்சலப்பிரதேசம் சென்ற விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இன்று கோவையில் மிக் - 21 விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று கீழே விழுந்துள்ளது. கோவை சூலூரில் இந்திய விமானப்படையின் பயிற்சிப் பள்ளி உள்ளது. அதில் இருந்து பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட மிக் 21 விமானத்தின் பெட்ரோல் டேங் கீழே விழுந்ததில் விவசாயி ஒருவரின் நிலத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது.

    09:41 (IST)02 Jul 2019

    IndVsBan : வாழ்வா சாவா போட்டியில் வங்கதேசம்... வெற்றியை கைப்பற்றுவது யார்?

    பிர்மிங்காம் நகரில் இன்று வங்க தேசத்திற்கு எதிராக நடைபெறும் லீக் சுற்றில் விளையாட உள்ளது இந்தியா. இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 5ல் வெற்றி, 1ல் தோல்வி, 1ல் முடிவு எட்டப்படவில்லை. +0.854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக இந்தியா இருக்கும். வங்க தேச அணியோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளும். வாழ்வா சாவா என்ற நிலையில் இன்று போட்டியில் களம் இறங்குகிறது வங்க தேசம் அணி. 

    மேலும் படிக்க : இந்தியா vs வங்கதேசம் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    09:36 (IST)02 Jul 2019

    மழை வேண்டி இசைக்கலைஞர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சி

    தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை மனதில் கொண்டு, மழையை வேண்டி, சென்னையில் 150க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    09:27 (IST)02 Jul 2019

    தமிழக சட்டசபை

    தமிழக சட்டசபை 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, தமிழக மக்களை இழிவு செய்யும் விதமாக புதுவை ஆளுநர் கிரண்பேடி ட்வீட் செய்ததாக கூறி கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின். ஆனால் அவருடைய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவினர் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். இன்று சட்டசபையில் நடைபெறும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளையும் உடனுக்குடன் படிக்க 

    09:08 (IST)02 Jul 2019

    Water Scarcity Chennai : ஜூலை 7ம் தேதி முதல் வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர்

    சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் படி வருகின்ற 7ம் தேதி முதல் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர்க் கொண்டு வரப்படும்.  ,

    08:47 (IST)02 Jul 2019

    ஹைட்ரோ கார்பன் திட்டம்

    புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றமாட்டோம் என்று அந்த அரசு திட்ட்வட்டமாக அறிவித்திருக்கிறது. அதுபோன்று ஏன் தமிழக அரசு அறிவிக்கவில்லை என்று வாதம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடர்பான வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

    08:44 (IST)02 Jul 2019

    ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாத காலங்களுக்கு நீட்டிப்பதற்காகவும், ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகவும் மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

    08:41 (IST)02 Jul 2019

    Windmill Electricity : தேனியில் சராசரி மின் உற்பத்தி அதிகரிப்பு

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகளின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை ஆரம்பமான நாள் முடதல் தேனி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. தேவாரம், சங்கராபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் ஒரு காற்றாலையின் சராசரி மின் உற்பத்தி 25 ஆயிரம் யூனிட்டாக உயர்வு.

    08:30 (IST)02 Jul 2019

    Mumbai Rains : சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி

    மகாராஷ்ட்ராவில் கொட்டி வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மும்பையின் மலாடா கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிம்பிரிடாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். அதே போல் புனே நகரில் உள்ள சிங்காத் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Tamil Nadu news today updates : நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக எம்.பிக்கள் தமிழகத்தில் நடைபெறும் அனைத்துவிதமான முக்கிய பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்தனர். உதகை எம்.பி. ஆ. ராசா, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு வழங்கப்பட இருக்கும் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசினார்.

    திருமாவளவன் பேச்சு

    தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெறும் ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று சிதம்பரம் தொகுதியின் எம்.பி. தொல். திருமாவளவன் பேசினார்.உயர்கல்வி நிறுவனங்களில் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்தும் அவர் பேசினார்.

    வெங்கடேசன் உரை

    மதுரையை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரையின் எம்.பி. வெங்கடேசன் கேட்டுக்கொண்டார். 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த நகரம் என்றும், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தமிழ்குடியின் பெருமையையும், மதுரையின் பெருமையையும் விளக்குவதற்கான சான்று என்றும், 20 கி.மீ சுற்றளவில் 12 இடங்களில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் வேறெந்த பகுதிகளிலும் இப்படி எழுத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    Tamil Nadu Mumbai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment