Tamil Nadu news today updates : திமுக இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின்? தொண்டர்கள் உற்சாகம்

Tamil Nadu Assembly: தமிழக சட்டப்பேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10% இடஒதுக்கீடு, மும்மொழி கொள்கை தொடர்பாக விவாதங்கள் நேற்று நடைபெற்றது.

Udhayanidhi Stalin, Psycho movie
Udhayanidhi Stalin, Psycho movie

Tamil Nadu news today updates :  அதிமுகவிற்குள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என பிளவு ஏற்பட்டதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.  ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 பேர் வாக்களித்தனர். கொறடாவை மீறி இவர்கள் வாக்களித்தனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதைப் போன்றே இவர்களையும் தகுதி நீக்கம் செய்ய  வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. அதனை விரைந்து விசாரிக்க நேற்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று போப்டே, கவாய் நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Water Scarcity : சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்க 7ம் தேதி முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துவர நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றது. அது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு : 7ம் தேதி முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம்

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, Tamil Nadu Assembly Session, water scarcity, Fuel Price : சென்னை மற்றும் தமிழக வானிலை, சட்டப்பேரவை நிகழ்வுகள், தண்ணீர் தட்டுப்பாட்டினை சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.


20:52 (IST)03 Jul 2019

ஏன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்? – கமல்ஹாசன் விளக்கம்

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு போகும் முயற்சியிலேயே நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்

ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு நாங்கள் படம் எடுத்திருக்கிறோம். அதனால் இந்தப் படமும் தரமாக இருக்கும்

– ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு

19:49 (IST)03 Jul 2019

இளைஞரணி செயலாளராகும் உதயநிதி?

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.

19:43 (IST)03 Jul 2019

அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி – அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அத்திவரதர் தரிசனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை இட்டுள்ளது.

18:56 (IST)03 Jul 2019

Eng vs Nz Live : 305-8

உலகக் கோப்பை 2019 தொடரில், ரிவர் சைட் கிரவுண்ட் ஸ்டேடியத்தில், இன்று நடைபெற்று வரும் மிக முக்கியமான போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் விளாசினார். இவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

18:42 (IST)03 Jul 2019

ராகுல் தலைவராக இருக்க வேண்டும் – திருநாவுக்கரசர்

“ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது, அவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே காரணம் கிடையாது; யார் இடைக்கால தலைவராக வந்தாலும் அவர் இடத்தை நிரப்ப முடியாது” என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். 

17:59 (IST)03 Jul 2019

தோனி ஓய்வு பெறுகிறாரா?

நடப்பு உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்த தனது முடிவை தோனி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

17:47 (IST)03 Jul 2019

தீர்ப்பு நகல் வெளியிடும் பிராந்திய மொழிகளில் தமிழும் இடம்பெறும்

உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்களை வெளியிடும் பிராந்திய மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட மொழிகள் பட்டியலின் போது தமிழ் மொழியும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.

16:55 (IST)03 Jul 2019

டிடிவி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் – விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன்

முதல்வர் பழனிசாமியை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ. கலைச்செல்வன், பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள்; எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து டிடிவி தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியதை ஏற்க முடியவில்லை. அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை; எங்களுக்குள் இருந்தது அண்ணன்-தம்பி பிரச்னைதான். ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்படமாட்டார்கள்; முதல்வர் பழனிசாமி சொல்வதை கேட்டு செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

15:30 (IST)03 Jul 2019

புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் : ராகுல் காந்தி

தான் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், தாமதமின்றி உடனே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்று ராகுல் கூறியுள்ளார். கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், மேலும் தாமதமின்றி புதிய தலைவரை காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூடி தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் ராகுல் இன்று ( ஜூலை 3) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

14:29 (IST)03 Jul 2019

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அதிக உதவி பெறும் இரண்டாவது மாநிலம் தமிழகம் – தமிழிசை ட்வீட்

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் குஜராத்துக்கு அடுத்து இரண்டாவதாக அதிக நிதி உதவி பெற்ற நம் மாநிலம். ஆனால் பாஜகவால் வஞ்சிக்கப்படுகிறோம் என்று வசனம் பேசுகின்றார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட் செய்து அதில் ஸ்டாலினையும், வைகோவையும் டேக் செய்துள்ளார்.

13:42 (IST)03 Jul 2019

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் அம்பத்தி ராயுடு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.  தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பைக்கு அவர் தேர்வு செய்யப்படாததை தொடர்ந்து 3டி க்ளாஸ் மூலமாக உலக கோப்பையை பார்க்க வேண்டியது தான் என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

12:29 (IST)03 Jul 2019

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. மேலும் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோர் மீதான வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரிக்கப்படும் என்று அறிவிப்பு.

11:41 (IST)03 Jul 2019

தமிழ் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது – டாக்டர் ராமதாஸ்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க நிறுவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். மேலும் தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வரவேண்டும் என்று கூறீய அவர் தேவையான உதவிகளை தமிழக அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:35 (IST)03 Jul 2019

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் கொண்டு வர வேண்டும் – எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் கொண்டு வர வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ் சமர்பித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளத்திலும் கருத்துகளை பதிவு

செய்துள்ளார் அவர்.

11:18 (IST)03 Jul 2019

தெலுங்கு, அசாமி உள்ளிட்ட 6 மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு… தமிழுக்கு இடம் இல்லை

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் இது நாள் வரை ஆங்கிலத்தில் மற்றுமே இருந்து வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்து கொள்ளும் வகையில் பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் இந்தி, கன்னடம், தெலுங்கு, அசாமி,  ஒடியா ஆகிய மொழிகளில் தீர்ப்பினை மொழி பெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு அங்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

10:42 (IST)03 Jul 2019

BiggBoss 3 : சட்ட சிக்கலால் சிக்கித் தவிக்கும் இரண்டு போட்டியாளர்கள்

தன்னுடைய மகளை கடத்திவிட்டதாக வனிதா விஜயகுமார் மீது அவருடைய கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை செம்பரம்பாக்கத்தில் அமைந்திருக்கும் பிக்பாஸ் இல்லத்திற்கு சென்றுள்ளது தெலுங்கானா காவல்துறை.  அதே போன்று மீரா மிதுன் மீது கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் புகார் அளித்துள்ளார். அதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

10:12 (IST)03 Jul 2019

சசிகலா, தினகரன் தவிர எவரையும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோம்

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் இணைத்துக்கொள்வோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு. தனிமரம் தோப்பாகாது என்பது தினகரன் விசயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.

09:57 (IST)03 Jul 2019

Tamil Nadu Rajya sabha MP Elections

வருகின்ற 18ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் போட்டியிடுகின்றனர். திமுகவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக உறுப்பினர் ஒருவருக்கு எம்.பி. பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று மதிமுகவில் ஒரு மனதாக வைகோ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் வைகோ. 

09:49 (IST)03 Jul 2019

‘டிக்டாக்’ ஆல் நேர்ந்த சோதனை

திருத்தணி அருகே உள்ள தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். தாழவேடு காலனி மக்களை அவதூறாக பேசி தன்னுடைய நண்பர் விஜி என்பவரோடு சேர்ந்து டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். விஜியோ அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய அது ஊருக்குள் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. இருவர் மீதும் அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் தேடி வந்தது. ஆத்திரத்தில் தன் நண்பரை கொலை செய்துவிட்டு போலீஸில் சரணடைந்தார். தற்போது விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், தனக்கு தண்டனை அதிகமாக கிடைக்கும் என்று எண்ணிய வெங்கட்ராமன் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து உயிரிழந்தார்.

09:42 (IST)03 Jul 2019

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தென்காசியில் ஒருவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. ஜல்லி மைதீன் எனப்படும் அகமது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

09:40 (IST)03 Jul 2019

B.V.Sc admission Rank List

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷண்ன் வெளியிட்டார்.

09:23 (IST)03 Jul 2019

Today Assembly Live Updates

இன்றைய சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட உள்ளன. இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள 

09:13 (IST)03 Jul 2019

Mumbai Rains

கனமழை காரணமாக சென்னை – மும்பை விமானப் போக்குவரத்து சேவையில் 2வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை வரும் 2 விமானங்கள், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ஒரு விமானம் என 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 விமானங்கள் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

09:13 (IST)03 Jul 2019

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு

பொறியியல் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம். நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கும் இதில் முதற்கட்டமாக 9500 மாணவர்கள் பங்கேற்கின்றார்கள்.

Tamil Nadu news today updates : தமிழகத்தின் சட்டப்பேரவை இன்றும் தொடர்கிறது. முதல்நாளில், காலமான முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் அன்று பேரவை கூடியது. பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதாரத்தை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Chennai Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.19 ஆகும். ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 67.69 பைசாவாகும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news live updates chennai weather tn politics 11 mlas disqualification case dmk tamil nadu assembly session

Next Story
மும்பையை வெளுத்து வாங்கும் கனமழை… வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் பருவமழை…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X