Advertisment

இன்றைய செய்திகள்: ஆவின் 12.95 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டி புதிய உச்சம்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: ஆவின் 12.95 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டி புதிய உச்சம்

Tamil Nadu News Today Updates: புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில்,  “புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தேன். இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது முதல், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது வரை, பல்வேறு அமைச்சகங்கள் & மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்காப்பை உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான முக்கிய நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

Advertisment

அல்-ஹக்’ என்ற என்ற அமைப்பு பெயரில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், "ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மக்கள் தொகை பதிவேடை நடைமுறைப் படுத்தினால்,தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களை கடத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ்- ப்ளாக்கை காணவும்

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:27 (IST)04 Mar 2020

    குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை தொடங்க நீர்வள ஆதாரத்துறையிடம் விண்ணப்பிக்கலாம்

    குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை தொடங்க விரும்புபவர்கள் நீர்வள ஆதாரத்துறையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்களுக்கு சட்டதிட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி, மறு அனுமதி வழங்கப்படும்

    http://groundwatertnpwd.org.inஇல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - நீர்வள ஆதாரத்துறை அறிவிப்பு

    20:24 (IST)04 Mar 2020

    ஆவின் பால் 12.95 லட்சம் லிட்டர் விற்பனையை எட்டி புதிய உச்சம்

    ஆவின் தொடங்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக 12.95 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

    சென்னையில் மட்டும் ஆவின் பால் 12.95 லட்சம் லிட்டர் விற்பனை, இதர மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டர் பால் விற்பனை

    19:50 (IST)04 Mar 2020

    மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மனித உரிமை ஆணையம்

    பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை, தடுக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? - மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி

    பள்ளிக்கல்வி துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

    19:18 (IST)04 Mar 2020

    கிருஷ்ணா நதியில் கூடுதலாக நீர் திறக்க ஆந்திர முதல்வரிடம் வலியுறுத்திய தமிழக அமைச்சர்கள்

    சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் நேரில் வலியுறுத்தினர்.

    19:15 (IST)04 Mar 2020

    கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதல்வர் பழனிசாமி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    19:13 (IST)04 Mar 2020

    ஐ.டி. ஊழியர்கள் வெளிநாடு செல்ல சுகாதாரத்துறை அனுமதி பெற வேண்டும்

    கர்நாடகா அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஜாவைத் அக்தர், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    18:55 (IST)04 Mar 2020

    சந்திரயான் 3 திட்டம் 2021-ம் ஆண்டில் செலுத்த திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்

    சந்திரயான் 3 திட்டம் குறித்து மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், சந்திரயான் 3 திட்டம் 2021-ம் ஆண்டு முதல் பாதியில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகதாக தெரிவித்துள்ளார்.

    18:50 (IST)04 Mar 2020

    கொரோனா பாதிப்பு எதிரொலி: ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் ரத்து

    கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    17:03 (IST)04 Mar 2020

    சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவு

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக முக ஸ்டாலின்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    17:00 (IST)04 Mar 2020

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது?

    நிர்பயா குற்றவாளியான பவன்குமாரின் கருணை மனுவை இன்று மீண்டும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர். இந்த நான்கு குற்றவாளிகளுக்கும் எப்போது தூக்கு என்று கோரிய மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    16:40 (IST)04 Mar 2020

    சிறந்த கலைஞர்களுக்கு லலித் கலா அகாதெமி விருதுகள்

    சிறந்த கலைஞர்களுக்கான லலித் கலா அகாதெமி விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. டெல்லியில் அமைந்திருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசுத் தலைவர் சிறந்த கலைஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

    16:36 (IST)04 Mar 2020

    கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கிருஷ்ணகிரியில் அமைய இருக்கும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரும் பங்கேற்பு.

    16:18 (IST)04 Mar 2020

    தனியார் மயமாகும் ஏர் இந்தியா - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

    ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

    16:17 (IST)04 Mar 2020

    10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கிறது மத்திய அமைச்சரவை

    10 பொதுத்துறை வங்கிகளை நான்காக மாற்றுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது மத்திய அரசு. ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது இந்த நடைமுறை.

    15:56 (IST)04 Mar 2020

    நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க உத்தரவு

    நாடு முழுவதிலும் உள்ள நித்தியானந்தாவின் சொத்துகளை முடக்க கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலியல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த காரணத்தால் இந்த முடிவை எட்டியுள்ளது நீதிமன்றம்.

    15:50 (IST)04 Mar 2020

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி திட்டம் ஒத்திவைப்பு

    நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படுதல் நிறுத்தி வைப்பு. விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:32 (IST)04 Mar 2020

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம் கட்ட அனுமதி பெற வேண்டும்

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் ஏதேனும் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முறையாக தேசிய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

    15:14 (IST)04 Mar 2020

    பட்டாசு ஆலை விபத்து

    விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று அறைகளும் தரைமட்டமானது. இதில் குருசாமி என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சின்னமுனியாண்டி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    15:09 (IST)04 Mar 2020

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியனை நியமனம் செய்து அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

    14:46 (IST)04 Mar 2020

    டெல்லியில் கொரோனா - அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு

    டெல்லியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    14:32 (IST)04 Mar 2020

    கள்ளக்குறிச்சி, அரியலூரில் மருத்துவக் கல்லூரி

    கள்ளக்குறிச்சியின் சிறுவாங்கூரில் 20.5 ஏக்கர் நிலபரப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.382 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூரில் 10.83 ஏக்கர் நிலப் பரப்பில் உருவாகவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இதன் கட்டுமான பணிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    14:25 (IST)04 Mar 2020

    அதிமுக எம்.பி. வங்கிக் கடன் வழக்கில் குற்றவாளி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    வங்கிக் கடன் வாங்கிய வழக்கு ஒன்றில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி என்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். வங்கியில் ரூ. 20 கோடி கடன் பெற்ற வழக்கில் வங்கி மேலாளர், ராமச்சந்திரனின் மகன் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு. கடன் கொடுக்க வங்கி மேலாளர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பினை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

    13:13 (IST)04 Mar 2020

    ராமதாஸ்-கருணாஸ் சந்திப்பு

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர், எம்எல்ஏ-வும் ஆன நடிகர் கருணாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமாதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்..

    12:36 (IST)04 Mar 2020

    கிரிப்டோகரன்சி தடை உத்தரவை, உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

    ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 6 மாதம் கிரிப்டோகரன்சி குறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.அதில், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி  மூலம் எந்த சேவையையும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தது.  இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் இந்த  சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது.  

    11:48 (IST)04 Mar 2020

    நடிகர் ரஜினி மீது என்ன நடவடிக்கை? உயர்நீதிமன்றம் கேள்வி

    கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச் சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

    பெரியார் பற்றிய பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக திராவிடர் கழக நிர்வாகி புகார் அளித்திருந்தார். தான் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திருவல்லிக்கேணி ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    11:18 (IST)04 Mar 2020

    ஒரே நாளில் ரூ. 1, 024 அதிகரிப்பு : தங்கம் விலை ஏற்றம்

    சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று  ஒரு சவரனுக்கு ரூ. 32,244 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ. 1, 024 அதிகரித்து காணப்படுகிறது.

    10:43 (IST)04 Mar 2020

    ஆர்.கே.பேட்டை  ஒன்றியக் குழு தலைவர் மறைமுகத் தேர்தல்: போலிஸ் குவிப்பு

    ஆர்.கே.பேட்டை  ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் இன்று நடைபெற இருந்தது.  இரு கட்சியினர் அதிகளவில்  திரண்டதால் போலீஸ் பதற்றம் நிலவி வருகிறது.  இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   

    10:31 (IST)04 Mar 2020

    மேட்டூர்-சரபங்கா நீரேற்ற திட்டம் : முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

    மேட்டூரில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளை இணைக்கும்  மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.    மேட்டூர் அணையின் உபர நீரினை சரபங்கா, திருமணிமுத்தாறு, மற்றும் முசிறி ஆகிய சிறு வடிநிலங்களில் தற்போது உள்ள அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகளின் பாசனத் திறனை அதிகரிக்கும் பொருட்டு, இணைப்புக் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், அரியலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் என்று நம்பப்படுகிறது.  

    10:16 (IST)04 Mar 2020

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

    தமிழ் நாட்டில் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது . தேர்வு முடிவுகள் மே 4 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 8.32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 

    10:06 (IST)04 Mar 2020

    ரம்யா ஹரிதாஸ், ஜோதிமணி என்னை தாக்கினர் - பாஜக எம்.பி குற்றச்சாட்டு

    ஓடிசா பலாங்கீர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கீதா சிங் தியோ (பாஜக), ரம்யா ஹரிதாஸ், ஜோதிமணி ஆகியோரால் தான் தாக்கப்பட்டதாக,  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம்   புகார் அளித்துள்ளார்.

    கடந்த திங்களன்று,கேரளாவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ், பாஜகவின் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரம்யா ஹரிதாஸ்
    ரம்யா ஹரிதாஸ் 

    09:21 (IST)04 Mar 2020

    234 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவோம், மர்ம கடிதம்

    அல்-ஹக்’ என்ற என்ற அமைப்பு பெயரில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், “ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மக்கள் தொகை பதிவேடை நடைமுறைப் படுத்தினால்,தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களை கடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Tamil nadu news today updates : இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்தும் அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளன. இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாட்டு மக்களுக்கு மார்ச் 3 அல்லது அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட அனைத்து வழக்கமான விசாக்கள் மற்றும் இ விசாக்களை நிறுத்தி வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment