Tamil Nadu updates : சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 பைசாக்கள் அதிகரித்து ரூ. 99.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 24 பைசாக்கள் அதிகரித்து ரூ. 94.17க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண் ஆணையம் ஆலோசனைக் கூட்டம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது காவிரி மேலாண் ஆணையம். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மேகதாது அணை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்துவிட்டது மேலாண்மை.
ஐ.பி.எல் போட்டிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று களம் இறங்கிய ஐதராபாத் சன்ரைஸர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:02 (IST) 28 Sep 20211 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- 19:47 (IST) 28 Sep 2021தமிழ் அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு
செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பென்சில்வேனியாப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை முனைவர் வீ.எஸ். இராஜம் தேர்வு செய்யபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு சென்னைப் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பொன். கோதண்டராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 19:30 (IST) 28 Sep 2021தமிழகத்தில் ஒரே நாளில் 1,630 பேருக்கு கொரோனா; 17 பேர் பலி
தமிழகத்தில் மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.
- 19:24 (IST) 28 Sep 2021பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் திடீர் ராஜினாமா
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் சித்து என்று ரஸியா சுல்தான் தெரிவித்துள்ளார்.
- 18:34 (IST) 28 Sep 2021போதைப் பொருள் கடத்திய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட்
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி டி.எஸ்.பி. ரகுபதிக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 18:31 (IST) 28 Sep 2021எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் - லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்களின் 7 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறாஇ சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், நிறுவனங்கள், சென்னையில் உள்ள வீடு என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சம் பணம், பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- 18:26 (IST) 28 Sep 2021கன்ஹையா குமார் காங்கிரஸில் இணைந்தது அவரது தனிப்பட்ட முடிவு - டி. ராஜா
கன்ஹையா குமார் காங்கிரஸில் இணைந்தது அவரது தனிப்பட்ட முடிவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
- 18:25 (IST) 28 Sep 2021காங்கிரஸில் இணைந்தனர் கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி
ராகுல் காந்தி தலைமையில் கன்ஹையா குமார், குஜராத் சுயட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
- 16:50 (IST) 28 Sep 2021நீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது - சுப்ரிம் கோர்ட்
ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுவதை தடுக்காமல் இருக்கும் காவல் ஆணையர் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 15:49 (IST) 28 Sep 2021செவிலியர்கள் போராட்டத்துக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், செவிலியர்களின் பணி முடிந்துவிட்டதைபோல சிதறடிக்க வேண்டாம். கொரோனா இன்னும் முடியவில்லை என தெரிவித்தார்.
- 15:39 (IST) 28 Sep 2021தமிழிசைக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து
2016இல் தமிழ்நாடு பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது, விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:15 (IST) 28 Sep 2021பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 15:00 (IST) 28 Sep 2021ரவுடிகளை ஒடுக்க புதிய மசோதா தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
ரவுடிகளை ஒடுக்க திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா விரைவில் சட்டமானால் காவல் துறைக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
- 14:58 (IST) 28 Sep 2021ரவுடிகளை ஒடுக்க புதிய மசோதா தாக்கல் - தமிழக அரசு தகவல்
ரவுடிகளை ஒடுக்க திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா விரைவில் சட்டமானால் காவல் துறைக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- 14:53 (IST) 28 Sep 2021ரவுடிகளை ஒடுக்க புதிய மசோதா தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
ரவுடிகளை ஒடுக்க திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா விரைவில் சட்டமானால் காவல் துறைக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
- 14:29 (IST) 28 Sep 2021கொரோனா பாதிப்பு: உதகை அரசு கலைக் கல்லூரி மூடல்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- 14:29 (IST) 28 Sep 2021கொரோனா பாதிப்பு: உதகை அரசு கலைக் கல்லூரி மூடல்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- 13:52 (IST) 28 Sep 20219 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள்
புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன
- 13:28 (IST) 28 Sep 2021வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:21 (IST) 28 Sep 2021பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டம்
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 1500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 13:11 (IST) 28 Sep 2021நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:39 (IST) 28 Sep 2021பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- 12:10 (IST) 28 Sep 2021பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை நடத்த பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
- 11:56 (IST) 28 Sep 2021புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரியில் 150 இடங்களுக்கும், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல்லில் 100 இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 11:42 (IST) 28 Sep 2021காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் நவம்பர் 31-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11:19 (IST) 28 Sep 2021வேலை வாய்ப்பு 29% அதிகரித்துள்ளது - ஆய்வில் தகவல்
நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் 29% வரை வேலைவாய்ப்பு பெருகி உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013-14ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.37 கோடி அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது 3.8 கோடி வரை அதிகரித்துள்ளது.
- 10:59 (IST) 28 Sep 2021சோலாரால் இயங்கும் சென்னை மத்திய ரயில்நிலையம்
சென்னை மத்திய ரயில் நிலையம் தன்னுடைய மின்சார தேவைக்காக 100% சூரிய ஒளியை மட்டுமே நம்பியுள்ளது. முழுக்க முழுக்க சோலாரால் இயங்கி சாதனை புரிந்துள்ளது இந்த ரயில் நிலையம். பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் தெற்கு ரயில்வேயின் இந்த முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
- 10:31 (IST) 28 Sep 2021கால்நடை அறிவியல் படிக்க மாணவர்கள் ஆர்வம்
பி.வி.எஸ்.சி., ஏ.எச் மற்றும் பி.டெக் படிப்புகள் படிக்க பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 15,732 மாணவர்கள் இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இந்த படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20% அதிகம் என்று தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- 10:05 (IST) 28 Sep 2021காவல் துறை அருங்காட்சியகம்
எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பிஸ்டல் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை ஏராளமான ஆயுதங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- 09:08 (IST) 28 Sep 2021ஓதுவார் பயிற்சி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் மாதம் 27ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
- 09:08 (IST) 28 Sep 20211-8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது?
ஊரடங்கு தளர்வுகளை அதிகரிப்பது தொடர்பாக இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும், வழிபாட்டு தலங்களை தரிசனத்திற்காக வார இறுதிகளில் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 09:07 (IST) 28 Sep 2021Chennai Car Accident
சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் சாலை தடுப்புக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலியாகினார்கள். 5 தொழிலாளர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த நபர் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.