Live

News Highlights: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

tamil nadu govt arts and science college admission online application starts from july 26th, tn govt arts and science college online application opens, arts and science college online application starts from july 26 to august 10, தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 26ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பm, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு, collegiate directorate, tamil nadu, arts and scinece college application

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் பட்டியல் இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்யும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் உள்ளாட்சி பணிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை தொடர்பான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ளது.

7ம் கட்ட அகழ்வாய்வில் 5424 பொருட்கள் கண்டுபிடிப்பு

அகரம், கீழடி, கொந்தகை ஆகிய மூன்று தளங்களில் நடைபெற்ற 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மொத்தமாக 5424 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 6ம் கட்ட பணியைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம் என்று தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி

உலகிலேயே 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவங்கியது க்யூபா. கியூபாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் பள்ளி செல்லும் சிறுவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் க்யூபா அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ. 93.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
2:53 (IST) 7 Sep 2021
தமிழக ஆளுநர் – பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

2:51 (IST) 7 Sep 2021
தமிழக ஆளுநர் – பிரதமர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.

2:47 (IST) 7 Sep 2021
தமிழகத்தில் மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,25,778 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 19 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 35055 ஆக உயர்ந்துள்ளது.

2:45 (IST) 7 Sep 2021
தனித்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நாளை வெளியீடு

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நாளை வெளியீடு என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2:43 (IST) 7 Sep 2021
சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு கருணாநிதி எழுதுகோல் விருது

சட்டசபையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சாமி நாதன் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு கருணாநிதி எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விருதுடன் 5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

1:04 (IST) 7 Sep 2021
கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க அனுமதி

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரிகள் பல்கலைகழகத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1:03 (IST) 7 Sep 2021
திருவண்ணாமலையில் அரசுப்பள்ளியில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று

சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழகததில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி பள்ளிகள திறக்கப்பட்ட நிலையில, ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:51 (IST) 7 Sep 2021
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் – திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் எழும்பூரை வரலாற்று பதிவுகளில் உள்ளபடி எழுமூ பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுகவைச் சேர்ந்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வலியுறுத்திப் பேசினார்.

10:48 (IST) 7 Sep 2021
சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஜாமின் மறுப்பு

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கு ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்போது, இருவரின் மரணத்திற்கு ஸ்ரீதருக்கும் தொடர்பு இல்லை என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

10:34 (IST) 7 Sep 2021
கோடநாடு வழக்கில் அதிமுக மனு தள்ளுபடி..எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

9:59 (IST) 7 Sep 2021
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

9:38 (IST) 7 Sep 2021
பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக அரசுக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

8:55 (IST) 7 Sep 2021
‘ரூட்டு தல’ மோதல் வேண்டாமே: கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை அறிவுரை

'ரூட்டு தல' என கூறி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சென்னை காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் நேரில் சென்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

8:21 (IST) 7 Sep 2021
110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டுகிறாரா ஜெகத்ரட்சகன்? பாஜக புகார் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து உள்ள திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இன்று பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

8:15 (IST) 7 Sep 2021
இனி குடிக்க மாட்டேன் என சொன்னால் ஜாமீன்- உயர் நீதிமன்றம் உத்தரவு

பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய வழக்கில் ஜாமீன் கேட்ட இருவருக்கு இனி குடிக்க மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் தருகிறேன் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

7:32 (IST) 7 Sep 2021
புத்தக பைகளில் தலைவர்கள் படம்

பள்ளி மாணவர்களின் புத்தகபைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

6:58 (IST) 7 Sep 2021
கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வேண்டும்

தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருக்கிறார்.

6:56 (IST) 7 Sep 2021
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு

கொரோனா பரவலை தடுக்க மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், விநாயகர் சிலைகள் செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5:37 (IST) 7 Sep 2021
சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது உயர்த்தி அறிவிப்பு

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

5:17 (IST) 7 Sep 2021
அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வருகின்ற ஜனவர் 1ம் தேதி முதல் அகவிலைப்படு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

5:09 (IST) 7 Sep 2021
ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தால், மாணவர்கள் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் சரியான அளவில் இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

5:05 (IST) 7 Sep 2021
வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

நாளை நடைபெற உள்ள வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

4:30 (IST) 7 Sep 2021
31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 290 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,41,042 ஆக உயர்ந்துள்ளது.

4:00 (IST) 7 Sep 2021
சிறந்த வீரர் விருது ஜஸ்ப்ரித் பும்ரா பரிந்துரை

ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பும்ராவுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளார் ஷகீன் அஃப்ரிடி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

3:30 (IST) 7 Sep 2021
மின்சாரம் தாக்கி சென்னையை சேர்ந்தவர் பலி

சென்னையில் நேற்று விடாமல் கனமழை பெய்தது. மில்லர்ஸ் சாலை அரசு மதுபான கடைக்கு எதிரே தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து புரசைவாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஅ என்பவர் பலியானார்.

3:29 (IST) 7 Sep 2021
பேராசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது

அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் இனி நல்லாசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

3:27 (IST) 7 Sep 2021
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் சிறப்பு டி.ஜி.பி. இன்று ஆஜர்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் இன்று ஆஜராக உள்ளனர்.

Web Title: Tamil nadu news live updates dmk aiadmk politics weather sports

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com