Live

Tamil News updates: 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Fuel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.01 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.96.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை 34 காசுகள் அதிகரித்துள்ளது.

சிலைகளை நீக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் நீக்கப்பட வேண்டும்; மக்களின் நம்பிக்கைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சிலைகள் அகற்றப்பட்டு தலைவர்களின் சிலைகளை வைக்க பூங்காக்களை உருவாக்க வேண்டும் என்றும், அதனை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளை, சிலைகளை வைக்கும் அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம்.

3 மாதங்களில் தலைவர்கள் சிலைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமானை கைது செய்ய வேண்டும் – தமிழக காங்கிரஸ் புகார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பேசுவதாக காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், போபண்ணா ஆகியோர் சென்னையில் டி.ஜி.பியிடம் தங்களின் புகாரை அளித்தனர்.

அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
4:21 (IST) 8 Oct 2021
1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வகுப்பறைகள், வளாகங்கள் தூய்மையாக இருப்பதையும், போதிய அளவு முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் இருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2:04 (IST) 8 Oct 2021
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன் பதவி விலகல்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன் பதவி விலகல்

3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கே.சுப்பிரமணியன் ராஜினாமா

2:03 (IST) 8 Oct 2021
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா; 20 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 1,473 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இன்று 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 16,379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

12:54 (IST) 8 Oct 2021
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம், நீலகிரி, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:58 (IST) 8 Oct 2021
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் மரணம்

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.

11:46 (IST) 8 Oct 2021
தன்னை பாதுகாத்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி – நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தா நாக சைதன்யா சமீபத்தில் தங்கள் பிரிவதாக அறிவித்திருந்தனர். தற்போது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமந்தா, தன்னை பற்றி பரவிய தவறான செய்திகளில், தன்னை பாதுகாத்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.

அவர்கள் நான் ஒரு சந்தர்ப்பவாதி, வேறொரு தொடர்பு, குழந்தை பெற்று கொள்ள விரும்பவில்லை, இப்பொது நான் கருக்கலைப்பு செய்தேன் என்று பரப்பி வருகின்றனர். விவகாரத்து என்பதே மிகவும் வலிமிகுந்த செயல், இதில் இருந்து என்னை மீள விடுங்கள். இது போன்ற செய்திகள் எதுவும் என்னை பாதிக்காது” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

10:59 (IST) 8 Oct 2021
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்

ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10:02 (IST) 8 Oct 2021
ஆஷிஷ் மிஸ்ரா நாளை ஆஜராவார் என இணையமைச்சர் தகவல்

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எனது மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் உடல்நிலை சரியில்லாததால் போலீசில் ஆஜராக முடியவில்லை; நாளை ஆஜராவார் என்று ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9:15 (IST) 8 Oct 2021
4 நாள் முதல் 5 நாள் வரை நிலக்கரி கையிருப்பு

தனியார் நிறுவனங்களிடம் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்

9:14 (IST) 8 Oct 2021
இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9:10 (IST) 8 Oct 2021
கபாலீஸ்வரர் கலை – அறிவியல் கல்லூரி

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கலை – அறிவியல் கல்லூரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது!

8:59 (IST) 8 Oct 2021
உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள் நியமனம்

தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டு்ளளனர். உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8:57 (IST) 8 Oct 2021
டெல்லி அரசு அறிவிப்பு

ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்துக்கொள்ளாத பணியாளர்கள் வரும் 16ம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதி இல்லை என டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டு்ளளது.

8:00 (IST) 8 Oct 2021
உ.பி. வன்முறை – நீதிமன்றம் கேள்வி

உ.பி. லக்கிம்பூர் வன்முறை தொடர்பான கொலை வழக்கை இப்படிதான் கையாள்வதா? என்று உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

7:59 (IST) 8 Oct 2021
முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

போரூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை நேரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

7:58 (IST) 8 Oct 2021
உள்ளாட்சி தேர்தல் – 77.43% வாக்குப்பதிவு

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 77.43% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

7:52 (IST) 8 Oct 2021
வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6:49 (IST) 8 Oct 2021
‘அண்ணாத்த’ 2வது பாடல் நாளை வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு்ளளது.

6:45 (IST) 8 Oct 2021
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

கத்திப்பாரா பாலத்தின் கீழ், பேருந்து நிறுத்தம், பூங்கா, வணிக வளாகம் கட்டப்படுகின்றன. ரூ.14 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

5:48 (IST) 8 Oct 2021
பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

தமிழகம் முழுவதும் 7ம் தேதி அன்று கோவில்களை திறக்க கோரி பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தியது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப் பதிவு

5:28 (IST) 8 Oct 2021
ஜி.எஸ்.டி வளர்ச்சி 9.5% என கணிப்பு

2022ம் நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 9.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதே சமயத்தில் பண வீக்கம் 5.3% ஆக இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

5:10 (IST) 8 Oct 2021
சிங்காரா டி23 புலியை கண்காணிக்கும் பணி நிறுத்தம்

சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் மீது இருந்து புலியை கண்காணிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புலியின் நடமாட்டத்தை கண்டறிந்த பிறகு மீண்டும் இப்பணி தொடரும் என்று வனத்துறை தகவல்.

4:59 (IST) 8 Oct 2021
காவிரியை பாதுகாக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி

மருந்து கழிவு, ரசாயனம் போன்றவற்றால் மிகவும் மாசுபட்டுள்ளது காவிரி ஆறு என்று சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் அடையாளமாக திகழும் காவிரியை பாதுகாக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி அறிவித்துள்ளார்.

4:25 (IST) 8 Oct 2021
லக்கீம்பூருக்கு வருகை புரியும் முன்னாள் மத்திய அமைச்சர்

சிரோமனி அகலி தளம் உறுப்பினர்கள், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தற்போது லக்னோ விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை அரசு கேட்கவில்லை. தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் விவசாயிகளுடன் நிற்கின்றோம் என்று ஹர்ஸிம்ரத் கௌர் பாதல் தெரிவித்துள்ளார்.

4:20 (IST) 8 Oct 2021
கரூர் நகராட்சி தூய்மை நகராட்சியாக விரைவில் மாற்றப்படும்

கரூர் நகராட்சி தூய்மை நகராட்சியாக விரைவில் மாற்றப்படும். 48 வார்டுகளில் சிறப்பு திட்டமாக தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளத என்று சிறப்பு திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

4:09 (IST) 8 Oct 2021
உலக மல்யுத்த போட்டி : வெள்ளி வென்றார் அன்ஷு மாலிக்

சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

3:59 (IST) 8 Oct 2021
சர்வதேச மாநாட்டிற்கு தாலிபான்களை அழைக்க ரஷ்யா முடிவு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் நாட்டு பிரதிநிதிகளுடன் தாலிபான் பிரதிநிதிகளையும் அழைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

3:44 (IST) 8 Oct 2021
இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாட்டை தளர்த்தியது பிரிட்டன்

கோவிஷீல்ட் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்று பிரிட்ட அறிவித்துள்ளது. திங்கள் முதல் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

3:30 (IST) 8 Oct 2021
உடற்பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு கருணாநிதி முன்மாதிரி – மா. சுப்பிரமணியன்

உடற்பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டார் கருணாநிதி. அவருடைய வழியில், வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் அமைத்துள்ளார் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு.

3:29 (IST) 8 Oct 2021
விமானப்படை தினம் – மோடி வாழ்த்து

விமானப்படை தினத்தை ஒட்டி, நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர் என்று மோடி விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Web Title: Tamil nadu news live updates lakhimpur kheri violence politics bjp dmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X