இன்றைய செய்திகள்: மு.க.ஸ்டாலின் ஒரு மலைதான்; அண்ணாவின் மலை – துரைமுருகன் பேச்சு

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.81 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 6832 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Tamil nadu news today updates :  இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல.  இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையுல் இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க வேண்டும் என்று  பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பாரத் பந்திற்கு பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்காததால், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வரும் 25 ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்துக்கான அழைப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபோன்ற, முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Live Blog

Tamil Nadu News Today Updates : தமிழகம் மற்றும் இந்தியாவின் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, வழக்கு, வணிகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.


21:46 (IST)23 Feb 2020

மு.க.ஸ்டாலின் ஒரு மலைதான்; அண்ணாவின் மலை – துரைமுருகன் பேச்சு

திமுக பொருளாளர் துரைமுருகன்: மு.க.ஸ்டாலின் ஒரு மலைதான்; அவர் அந்த அண்ணாமலை இல்லை, அறிஞர் அண்ணாவின் மலைஅவர் அந்த அண்ணாமலை இல்லை, அறிஞர் அண்ணாவின் மலை என்று தெரிவித்துள்ளார்.

20:19 (IST)23 Feb 2020

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகளான, சுனில் குமார், சுனில் குமார் சிங், அபஷ் குமார், டேவிட்சன் தேவாசிர்வாதம், சேஷசாய் ஆகிய 5 அதிகாரிகளை தமிழக அரசு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

20:05 (IST)23 Feb 2020

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செயல்படுத்தி வருகிறோம் – துணை முதல்வர்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செயல்படுத்தி வருகிறோம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

19:38 (IST)23 Feb 2020

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தார்

மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தார்.

17:57 (IST)23 Feb 2020

சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,442 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார்.

17:24 (IST)23 Feb 2020

இத்தாலியில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இத்தாலியில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

16:38 (IST)23 Feb 2020

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ள நாமக்கல்லை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய அறிவியல் தேர்வில் வெற்றி பெற்று, நாசா செல்லும் வாய்ப்பை அபிநயா பெற்றுள்ளார். அவருக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

16:35 (IST)23 Feb 2020

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்; புதுக்கோட்டையில் அனைத்து குளங்களும் நிரப்ப‌ப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரப்ப‌ப்படும் என தெரிவித்துள்ளார்.

16:34 (IST)23 Feb 2020

கன்னியாகுமரியில் சிஏஏ பேரணி – 2000 பெண்கள் பங்கேற்பு

கன்னியாகுமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் சிறுவர்கள் உட்பட 2000 பெண்கள் பங்கேற்றனர்.

15:25 (IST)23 Feb 2020

மத்திய குற்றப்பிரிவு விசாரணை வளையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வழக்கு ஆவணத்தை நசரத்பேட்டை போலீஸ் ஒப்படைத்ததை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியது.

15:10 (IST)23 Feb 2020

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு – நல்லகண்ணு வேதனை

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் எங்கே எனது வேலை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை சென்னை   கொருக்குப்பேட்டையில் தொடங்கி வைத்த அவர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கூட வேலை இல்லாமல் உள்ளதாகவும்,  வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பது அரசின் கடமை என்றும் கூறினார். 

13:59 (IST)23 Feb 2020

மாசிமாத  அமாவாசை : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்

இன்று மாசிமாத  அமாவாசை என்பதால்  ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நாளில் மறைந்த தங்களது மூதாதையர்களுக்கு திதி மற்றும் தர்ப்பனம் கொடுப்பது வழக்கம் . பக்தர்கள் தேவையான அணைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

13:55 (IST)23 Feb 2020

மாணவர்கள் அரசு தேர்வுகளில் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் – சகாயம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு  தொடர்பான செய்திகளை கேட்டு மாணவர்கள் அரசு தேர்வுகளில் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.   தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சகாயம்,”   முறைகேட்டில்  ஈடுபட்டோருக்கு  கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார் .

13:52 (IST)23 Feb 2020

அரசியலமைப்பை பாதுகாப்பது மாணவர்கள் கடமை – ரஜினிக்கு அய்ஷே கோஷ் பதில்

கல்வி உரிமையையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க போராடும் உரிமை ஒவ்வொரு மாணவர்களுக்கு உண்டு. . இதனை நடிகர் ரஜினி காந்த் புரிந்துக் கொள்ள வேண்டும்  என்று அய்ஷே கோஷ் தெரிவித்துள்ளார். கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் ஜேஎன்யு என்ற ஒற்றை கல்வி நிறுவனத்தோடு நின்று விடுவதில்லை,   இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் கலந்து கொண்டு பேசிய அய்ஷே கோஷ், சிருபான்மையினருக்கும், பெண்களுக்கும், தலித் சமூக மக்களுக்கும் கல்வி அதிகாரமளிக்கும் கருவி என்பதை அம்தேத்கார் தெளிவாக கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.       

13:38 (IST)23 Feb 2020

தங்கம் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் – ராமதாஸ்

தங்கம்  இறக்குமதியில் விதிக்கப்பட்ட வரியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தினமும் பிடிபடும் கடத்தல் தங்கத்தை விட, தப்ப விடப்படும் தங்கத்தின் மதிப்பு 10 மடங்குக்கும் அதிகம் என்று சுங்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். இது உண்மையா?  என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.  

12:54 (IST)23 Feb 2020

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா- 4/144

மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்குப் பின் தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்க்ஸ் ரன்களை விட இந்தியா இன்னும்  39 ரன்கள் பிந்தங்கியுள்ளன. விராத் கோலி, புஜாரா போன்ற முக்கிய வீரர்களை இந்தியா இழந்துள்ளது. ரஹானே மற்றும் விஹாரி தற்போது களத்தில் உள்ளனர்.     

11:55 (IST)23 Feb 2020

வரும் தேர்தல்களை தீர்மானிக்கும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கும்

இன்று திருச்சியில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி  ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் பேரண நடைபெற்றது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள்  பங்கேற்றனர். 

பேரணியில் பேசிய தோல். திருமாவளவன் அடுத்த சட்டமன்றத் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்கும் என்று தெரிவித்தார்.  70 வயதுவரை நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும்போது, 30 ஆண்டுகளாக மக்களுக்காக போராடி  வரும் விடுதலைச் சிறுத்தைகள் , ஏன் ஆட்சிக்கு வர விரும்பக்கூடாது?  என்ற கேள்வியையும்  திருமாவளவன் முன்வைத்துள்ளார்.

10:34 (IST)23 Feb 2020

இந்தியன் 2 கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,    கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு  அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  

10:19 (IST)23 Feb 2020

பாகுபலி மார்பிங் வீடியோவை ரீட்வீட் செய்த ட்ரம்ப்

தனது இரண்டு நாள் இந்தியா பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தனது ட்விட்டர்  பக்கத்தில்  ‘பாகுபலி 2: தி கன்லுஷன்’ திரைப்படத்தின் மார்பிங் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பயனர் வெளியிட்ட இந்த  வீடியோ கிளிப்பை ரீட்வீட் செய்த , டிரம்ப் : “இந்தியாவில் எனது சிறந்த நண்பர்களுடன் இருப்பதற்கு மிகவும் எதிர்நோக்கியுள்ளேன் ! என்று பதிவ செய்துள்ளார்.  

08:50 (IST)23 Feb 2020

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : ரவிகுமார் தங்கப் பதக்கம்

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 57 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தஜகிஸ்தான் வீரர் Vohidovவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த திவ்யா கரன், சரிதா மோர், பிங்கி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

08:43 (IST)23 Feb 2020

ராணிப்பேட்டை வாணியம்பாடியில் நான்காவது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு   போன்றவைகளை திரும்பப் பெறக் கோரி பிப்ரவரி 14 ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு, வாணியம்பாடியில்  பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.  

08:35 (IST)23 Feb 2020

கபாலீஸ்வரர் கோவிலில் உடை கட்டுப்பாடு : சர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட் உடைகளுக்கு தடை

சென்னையில் உள்ள மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள்  டி – சர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ், கைலி, அரைக்கால் பேன்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  பெண் பக்தர்கள், சேலை, ரவிக்கை, பாவாடை – தாவணி, துப்பட்டாவுடன் சுடிதார் மற்றும் பஞ்சாபி உடை அணியலாம்  . ஆண்கள் சட்டை, முழுக்கால் பேன்ட், ஷர்வானி ஆகிய உடைகளை அணியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:26 (IST)23 Feb 2020

டொனால்ட் டிரம்ப் விருந்தில் கலந்து கொள்ள மறுப்பு – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்காததால், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வரும் 25 ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்துக்கான அழைப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் 134 ஆண்டுகள் பழமையான ஜனநாயகக் கட்சி, எங்கள் தலைவர் அனைத்து ஜனநாயக நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறார்… இருப்பினும் தற்போது அழைக்கப்படவில்லை . இது காங்கிரசுக்கு நேரடி அவமதிப்பு. எனவே,  இந்த அழைப்பை என்னால் ஏற்க  முடியாது, ”என்று அவர் சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறினார்

Tamil Nadu News Today updates ; தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மை தொகுப்பாசிரியராகவும் இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் மனிமண்டபத்தையும், உருவச் சிலையையும் தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு திட்டம், கருமேணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு, சாத்தான்குளம் வட்டத்திற்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும் போன்ற புது திட்டங்களையும்  முதலமைச்சர் அறிவித்தார்.

சென்னை பல்கலைகழகத்தில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news live updates mann ki baat trump visit india

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com