Tamil Nadu news live updates : பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி, சென்னையுஇல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Weather news : இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து தென்மேற்கு டெல்லி, புதுடெல்லி, கிழக்கு டெல்லி, ஷாஹ்தரா, ப்ரீத் விஹார், மத்திய டெல்லி, வடகிழக்கு டெல்லி, கூர்கான், மனேசார் பகுதிகளில் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
olympics updates : 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பக்கர், சவுரப் சவுத்ரி இணை 2வது சுற்றில் தோல்வி அடைந்துள்ளனர். பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவரது சொந்த மாநிலமான மணிப்பூரில் அவருக்கு ரூ.1 கோடி பரிசும், ஏ.எஸ்.பி. பதவியும் அளித்து கௌரவித்தது அம்மாநில அரசு.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:11 (IST) 27 Jul 2021பெகாசஸ் விவகாரம் : பிரதமர் மோடியை வலியுறுத்திய மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பானர்ஜி மீணடும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
- 19:33 (IST) 27 Jul 2021பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மம்தா பானர்ஜி
பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உளவு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமையிலான விசாரணையை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 19:29 (IST) 27 Jul 2021தோலவிரா குறித்து பிரதமர் மோடி புகழாரம்
யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பதி மகிழ்ச்சியளிக்கிறது, என்று கூறியுள்ள பிரதமர் மோடி, கடந்த கால நிகழ்வுகளுக்கு தோலவிரா ஒரு முக்கிய இணைப்பாகும் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் தோலவிரா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
- 19:27 (IST) 27 Jul 2021மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
- 19:25 (IST) 27 Jul 2021தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை
தமிழக சடடசபையில் வரும் 2-ந் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படதிறப்பு விழாவில் கலந்துகொள்ள குடியரசுத்தலைவர் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- 17:29 (IST) 27 Jul 2021ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல்
12-18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார்.
- 17:00 (IST) 27 Jul 2021தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 16:06 (IST) 27 Jul 2021க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி; 2வது டி-20 ஒத்திவைப்பு!
இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியான நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 15:51 (IST) 27 Jul 2021வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டுக்கான அரசாணை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேல்முருகன் எம்.எல்.ஏ.!
வன்னியர் உள்ளிட்ட எம்.பி.சி பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு (10.5%) வழங்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.
- 15:51 (IST) 27 Jul 2021வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டுக்கான அரசாணை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேல்முருகன் எம்.எல்.ஏ.!
வன்னியர் உள்ளிட்ட எம்.பி.சி பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு (10.5%) வழங்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.
- 15:36 (IST) 27 Jul 2021அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறது.
- 15:10 (IST) 27 Jul 2021கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- 14:15 (IST) 27 Jul 2021எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- 14:12 (IST) 27 Jul 2021பத்திரப்பதிவுத்துறை சீரமைப்பு
2 மாத காலமாக பத்திரப்பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது என்றும் போலி பத்திரம் எழுதும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
- 13:03 (IST) 27 Jul 2021மரியாதை நிமித்தமாக அமித்ஷாவுடன் சந்திப்பு -எடப்பாடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
- 12:17 (IST) 27 Jul 2021நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 12:04 (IST) 27 Jul 2021நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் - விஜய் தரப்பு
சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என்றும், நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 11:42 (IST) 27 Jul 2021அமித்ஷாவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்து பேசினர். சந்திப்பின் போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.
- 11:26 (IST) 27 Jul 2021தகைசால் தமிழர் விருது உருவாக்கம்
தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக 'தகைசால் தமிழர்’ என்ற விருது உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 10:53 (IST) 27 Jul 2021பேட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
பேட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்றில் இந்திய வீரர்களான சாத்வித் சாய்ராஜ், சிராக் செட்டி, 2க்கு ஜீரோ என்ற கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தியது.
- 10:52 (IST) 27 Jul 2021வன்முறையாக மாறிய போராட்டம்
தடுப்பூசிகளுக்கு எதிராக பாரீசில் நடைபெற்ற போராட்டம் தற்போது வன்முறை கலவரமாக மாறியுள்ளது. கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டம் கலைப்பு
breaking: The anti-vaccine protests in Paris have turned violent. Police are clashing with protesters. Tear gas deployed. pic.twitter.com/Se6637t8bU
— Election Wizard (@ElectionWiz) July 24, 2021 - 10:08 (IST) 27 Jul 2021டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர் சரத் கமல் அதிர்ச்சி தோல்வி. சரத் கமலை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார் சீன வீரர் மா லாங்.
- 09:51 (IST) 27 Jul 2021மயிலாடும்பாறை அகழ்வாய்வு
மயிலாடும்பாறையில் நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிற்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Swords, Axes , TC Jars, Basins, Stones…. It’s not mere pit but a treasure trove!
Fascinating Mayiladumparai!❤️ @TNexcavations pic.twitter.com/96vTOf7MZU
— Thangam Thenarasu (@TThenarasu) July 27, 2021 - 09:31 (IST) 27 Jul 2021பெகாசஸ் உளவு விவகாரம் - மூத்த பத்திரிக்கையாளர் ராம் வழக்கு
பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்றும் ஊடகவியலாளர்களை ஒட்டுக் கேட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
- 09:27 (IST) 27 Jul 202159 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
சுருக்குமடி வலைக்கு தடை விதித்ததாலும், மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை கைவிடக் கோரியும் நாகை, காரைக்கால் மற்றூம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 59 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 09:16 (IST) 27 Jul 2021மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
- 09:15 (IST) 27 Jul 2021திவாலானவர் விஜய் மல்லையா - பிரிட்டன் நீதிமன்றம்
தொழில் அதிபர் விஜய் மல்லையா திவாலானவர் என்று பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கிக் கணக்குகளை முடக்கி கடன் தொகையை மீட்க இந்திய வங்கிகள் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட உள்ளதா அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
- 09:08 (IST) 27 Jul 2021மக்களவை ஒத்திவைப்பு
ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடவும், 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 08:30 (IST) 27 Jul 2021அன்வர் ராஜாவின் சர்ச்சை பேச்சு
ஜெயலலிதா சிறை சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தேர்தல்களில் தோல்வி அடைந்திருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்க கூடும் என்று பரமக்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
- 08:12 (IST) 27 Jul 2021இந்திய ஆடவர் அணி அபார வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 3க்கு ஜீரோ என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னை வீழ்த்தியது இந்தியா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.