இன்றைய செய்திகள்: 2016 விஏஓ தேர்வில் முறைகேடு செய்ததாக 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ.74.90-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து ரூ.68.72-க்கும் விற்பனையாகிறது

இன்றைய செய்திகள்:  92வது ஆஸ்கர் வருது வழங்கும்  விழா தற்போது நடைபெற்றுவருகிறது. சிறந்த நடிகை,நடிகர்,இயக்குனர், திரைக்கதை, இசை போன்ற பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் பிராட் பிட் தட்டி சென்றார். சிறந்த திறக்கதைகான விருதை பாராசைட் தட்டிச் சென்றது.

நடிகர் விஜய் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு , சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.  முன்னதாக நெய்வெலி என்.எல்.சி.யில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் ரசிகர்கள் நடிகர் விஜய்யை காண என்எல்சி முன்பு கூடியிருந்தனர். அங்கே கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்

Live Blog

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

21:14 (IST)10 Feb 2020
இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் பின்னடைவை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் - கமல்ஹாசன்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் பின்னடைவை சரி செய்யும் சட்டத் திருத்த‌த்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

20:13 (IST)10 Feb 2020
நெய்வேலிக்கு நன்றி தெரிவித்த விஜய்; படிப்பிடிப்பு தளத்தில் பேருந்து மீது ஏறி ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமானவரித்துறையினர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், 6-ம் தேதி பாஜகவினர் என்.எல்.சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடியது. இதனால், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இன்று என்.எல்.சியில் மாஸ்டர் படப்பிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் கூடியதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் திரண்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் பேருந்து மீது ஏறி கையசைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு நெய்வேலிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

19:51 (IST)10 Feb 2020
புத்த கயாவில் மகாபோதி விகாருக்கு வந்த இலங்கை பிரதமர் ராஜபக்ச

இலங்கை பிரதமர் ராஜபக்ச இன்று பீகார் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்த விகாருக்கு வருகை தந்து வணங்கினார்.

18:58 (IST)10 Feb 2020
குழாயைத் திறந்தால் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தல்

தண்ணீர் என்பது அடிப்படை என்றும், இதனை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி, சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று துவக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் என்பதில் ஏழை,பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல், குழாயைத் திறந்தால் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

18:37 (IST)10 Feb 2020
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதானுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அவர்களிடம், காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான முதல்வரின் கடிதத்தை வழங்கினார்.

18:33 (IST)10 Feb 2020
2016 விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத் தரகர் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 2016 விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடைபெற்றதாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, - நெல்லை படலையார்குளம் விஏஓ பன்னீர்செல்வம், திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ செந்தில்ராஜ் கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரும் ஜெயக்குமாரிடம் தலா ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றதாக சிபிசிஐ போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

18:13 (IST)10 Feb 2020
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ராஜ்யசபாவில் வைகோ கோரிக்கை

பட்ஜெட் உரை குறித்து ராஜ்யசாபாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.-யுமான வைகோ, பட்ஜெட் உரை மீதான உறுப்பினர் உரையின்போது குறுக்கிட கூடாது என கூறி, துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் ஆவேசமாக முறையீடு செய்தார். பின்னர், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த அவர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவும் கோரிக்கை வைத்தார்.

17:30 (IST)10 Feb 2020
விஜய்க்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா? - மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி

மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்க்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், “எல்ஐசி, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற இந்திய அரசின் சொத்துக்களை தொடர்ந்து மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. ஆதார் அட்டைக்காக ஏற்கனவே 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு நாட்டு மக்களின் தகவல் திரட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்காக மேலும் 4500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட முடிவு எடுத்திருப்பதும் பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்று தேவையற்ற செலவு செய்வதை ஏற்க முடியாது.” என்று கூறினார்.

17:02 (IST)10 Feb 2020
சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது; புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கூடாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

16:14 (IST)10 Feb 2020
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் - நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த முதல்வரின் கோரிக்கை கடித‌த்தை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும் என்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.

16:02 (IST)10 Feb 2020
வேலை பெற்று தருவதாக கூறி மோசடி - செந்தில் பாலாஜிக்கு உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

15:46 (IST)10 Feb 2020
வருமான வரி சோதனையில் உள்நோக்கம் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனையில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் ரஜினி காந்த் கட்சி ஆரம்பித்தால் கூட்டணி அமைப்புது குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

15:20 (IST)10 Feb 2020
தண்ணீர் பிரச்சனையை கையில் எடுக்கும் ஏ.ஆர். ரகுமான்?

தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை நாம் நம் இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த தவறிவிட்டோம். தண்ணீர் விழிப்புணர்வு தொடர்பாக உலக அளவில் பாடல் ஒன்றை வெளியிட உள்ளேன் என்று இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அறிவித்துள்ளார்.

15:06 (IST)10 Feb 2020
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை தான் - ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை தான் என்று இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

14:58 (IST)10 Feb 2020
முதல்வரின் அறிவிப்பு வரவேற்கதக்கது - கே.எஸ். அழகிரி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் எதிர்கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கே.எஸ்.அழகிரி முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது என்று கூறியுள்ளார்.

14:13 (IST)10 Feb 2020
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 நபர்களை கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஓம் காந்தின் கூட்டாளிகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

13:56 (IST)10 Feb 2020
சாலைகளை காலவரையின்றி தடுக்க முடியாது – ஷாஹீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்

ஷாஹீன் பாக் போராட்டத்தை தடை கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில்  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு, ஆனால் போராட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு பகுதியில் போராட  வேண்டும், மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு  விசாரணையை ஒத்திவைத்துள்ளது .

12:28 (IST)10 Feb 2020
எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை திருத்தம் சட்டம் (2018) செல்லும் - உச்ச நீதிமன்றம்

கடந்த 2018 ஆம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ்  குற்றஞ்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்யவும், அவர்கள் ஜாமீன் பெற முடியாத வகையிலும்   மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்த சட்ட திருத்தம் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.  தீர்ப்பில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை திருத்தம் சட்டம் (2018) செல்லும் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிட்டஹ்து . 

12:00 (IST)10 Feb 2020
இடஒதுக்கீடு கொள்கை பாஜக பாதுகாத்திட வேண்டும் - ஸ்டாலின் அறிக்கை

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது !

BC/MBC/SC/ST இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல்- சமூகநீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

11:09 (IST)10 Feb 2020
17 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வரும் 17 ஆம் தேதி  சென்னை அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  

இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

11:02 (IST)10 Feb 2020
விஜய் இன்று ஆஜாரகவில்லை - கால அவகாசம் கேட்க முடிவு

Master Vijay Income tax : இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  நேரில் இன்று விஜய் ஆஜாராவர் ய்டென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் நேரில் ஆஜராக விஜய் காலஅவகாசம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

10:56 (IST)10 Feb 2020
மிகவும் அபாயகரமான  தருணம் - டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

இதுவரை 900 மக்கள் இந்த கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அனைத்து நாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் .  சீனாவிற்கு முன்பின் பயணம் செய்யாத  மக்களிடம் கூட கொரோனா வைரஸ் காணப்படுவது அபாயகரமான  தருணம்  என்று எச்சரித்துள்ளார்.   

10:47 (IST)10 Feb 2020
ஷாஹீன் பாக் போராட்டத்தை தடை கோரும் மனு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சடந்த 50 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.   இந்த போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் அமித் சாஹ்னி மற்றும் பாஜக தலைவர் நந்த் கிஷோர் கார்க் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  பிப்ரவரி 8 ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவடிந்த பின்பு இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்க விசாரிக்கப்படுகிறது .      

09:44 (IST)10 Feb 2020
அமைச்சரவை எடுத்த விடுதலை முடிவுக்கான சட்ட நியாயங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் - அற்புதம் அம்மாள்

நாளைபேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அமைச்சரவை எடுத்த விடுதலை முடிவுக்கான சட்ட நியாயங்களை தமிழக அரசு முன்வைக்கவேண்டும்; அறிவின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அற்புதம் அம்மாள் தெரிவித்துளாளர்.  

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், நளினி ஆகியோர் 28 ஆண்டுகளைக் கடந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

09:06 (IST)10 Feb 2020
ஆஸ்கார் வென்றார் பிராட் பிட்

92வது ஆஸ்கர் வருது வழங்கும்  விழா தற்போது நடைபெற்றுவருகிறது. சிறந்த நடிகை,நடிகர்,இயக்குனர், திரைக்கதை, இசை போன்ற பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் பிராட் பிட் தட்டி சென்றார். சிறந்த திறக்கதைகான விருதை பாராசைட் தட்டிச் சென்றது.

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்து சமூகம் என்பது பாஜக என்று அர்த்தமில்லை; பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு சமமல்ல. அரசியல் சண்டைகள் தொடரும், ஆனால் அதனை இந்து சமூகத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறினார்.

Web Title:

Tamil nadu news live updates oscar 2020 delhi election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close