Tamil Nadu News Live Updates : பெகாசஸ் மென்பொருள் குறித்து பிரச்சனையை தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பிய நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தியாவில் இந்த மென்பொருளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றூம் 500க்கும் மேற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Ind Vs SL : இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தது. மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பில் 15வது ஓவரில் வெற்றியை உறுதி செய்தது.
Olympics updates : நடுவர்கள் நியாயமற்ற முடிவால் தோல்வி அடைந்துள்ளேன். இந்த ஒருதலைபட்சமான முடிவிற்கு எதிராக நீதிப் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பாஜகவின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பசுவராஜ் பொம்மை டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுககு தனித்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்ட தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய ரேவதி, சுபா, அலெக்ஸ் அந்தோணி, சர்தாக் பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய அணி கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டது
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும், அதன் மீதான மேல் நடவடிக்கைகளை கைவிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற உத்தரவிட்டுயள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை இதற்கான இரண்டு குழுக்களை நியமித்துள்ளது. 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளததாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திசெய்ய அளிக்கப்பட்ட அனுமதி நாளையுடன் முடிவடைவதால் இன்றுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. காலிறுதி வாய்ப்பை இந்திய அணி ஏற்கனவே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி என வரவேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவைர் திருமாவளவன, மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு(EWS)10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது' என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி: மத்திய தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசு ஒப்புதல்!சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு(EWS)10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது!#obcreservation pic.twitter.com/KWWBXXeQ4U
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 30, 2021
27% ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு அதிமுக பின்பற்றி வரும் சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் சட்டப்போராட்டத்தால் அனைத்து மாநில இதர பிறப்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 50% இட ஒதுக்கீட்டை அடைய அதிமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.” என்று தெரிவித்துள்ளனர்.
2021 – 22 ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத OBC ஒதுக்கீடு அஇஅதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல். #obcreservation pic.twitter.com/80B4A6YNNW
— AIADMK (@AIADMKOfficial) July 30, 2021
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது சுமார் ரூ100 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்பட்டதாக சிறப்பு விசாரணை கோரிய மனுவில் சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விசாரணையில் உதவிக்காக சென்னை பல்கலை புவியியல் துறை மற்றும் இந்திய அணு தாதுக்கள் துறை உதவியையும் பெறலாம் எனவும், வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
This is what it meant for Sindhu to make it to the semis! 🙌👑#tokyo2020 | #unitedbyemotion | #strongertogether | #ind @Pvsindhu1 pic.twitter.com/6oZkX142Uz
— #tokyo2020 for India (@Tokyo2020hi) July 30, 2021
நடப்பு கல்வியாண்டில் 85% கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 75% கட்டணத்தை செலுத்தலாம் மற்றும் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும், கடைசி தவணையை 2022 பிப்ரவரி 2-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தன்னிடம் நடிகை பணம் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் பொய் புகார் அளித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், நடிகை சாந்தினி ஆகியோர் பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பிற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா முதல் அலையை விட 2-ஆவது அலையின் போது பலி எண்ணிக்கை அதிகம் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பவார் கூறியுள்ளார்.
நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா முதல் அலையை விட 2ஆவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது வாகனம் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நீதிபதி கொலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய மாநில தலைமைச் செயலர், டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். காலிறுதியில் கொரியாவின் ஆன் சானிடம் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார்.
கிருஷ்ணகிரி, வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை தற்போது இல்லை எனவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தொடர்ந்து அனுமதி வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் என இருவேறு தடுப்பூசிகளை ஒரே நபருக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது.
http://www.cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,230 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 555 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய மனுவை அமர்ந்து கொண்டே கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வாங்கியதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருக்கின்றேன். இது என்ன புதிய பழக்கம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசியவுடன் எழுந்து நின்று மனுக்களை பெற்றுக் கொண்டார் ஆட்சியர்.
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் மகளிர் 69 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று கேரளத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
Rising cases of Coronavirus infections in Kerala are worrying. I appeal to our brothers and sisters in the state to follow all safety measures & guidelines.Please take care.— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2021காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சிம்ரன் ஜித் கவுர் தோல்வி அடைந்தார். 60 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்து வீராங்கனை சுடாபானிடம் 5க்கு 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார் சிம்ரன்ஜித்
தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய வீராங்கனை பெரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் தீபிகா குமாரி
கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் நரேந்திர மோடியையும் சில முக்கிய மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து பேச உள்ளார்