News Highlights: தேமுதிக- அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை

Tamil News Live : முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Live Updates: உத்தரகாண்ட் முதலவர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, ஆளும் பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் உள்ளதாக பாஜக தெரிவித்தது.

மநீமவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் செலவின கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அமைப்புகளின் துறைத்தலைவர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.


ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண் காவல் அதிகாரியை தடுத்தது தொடர்பாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி டி.கண்ணனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, தமிழக தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு உரிய பிரதிநிதித்துவம், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என பாமக செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil News Live Bulletin : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.12:40 (IST)10 Mar 2021


நாளை மறுநாள் தண்டி யாத்திரையை தொடங்கி வைக்கிறார் – பிரதமர்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை மீண்டும் நினைவு கூறும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி , நாளை மறுநாள் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

12:27 (IST)10 Mar 2021


தபால் ஓட்டு செலுத்துவது குறித்த சைகை மொழி காணொளி

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016ன் படி, வருகின்றன சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக தபால் ஓட்டு செலுத்துவது குறித்த சைகை மொழி காணொளியை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.  

12:25 (IST)10 Mar 2021


அமமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையே  கூட்டணி பேச்சுவார்த்தை

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓட்டலில்  அமமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையே  கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது வருகிறது.

12:13 (IST)10 Mar 2021


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது

கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கண்ணூர் மாவட்டம் தர்மடம் சட்டமன்றத் தகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார் . 

கேரள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விரும்பவோர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க நேற்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

11:56 (IST)10 Mar 2021


வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் – டிடிவி தினகரன்

வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவிக்கும் என  டிடிவி.தினகரன் தெரிவித்தார்.  

11:54 (IST)10 Mar 2021


முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக் கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.  

11:14 (IST)10 Mar 2021


நாள்தோறும் மக்களை நசுக்கி வதைப்பதே ஆட்சியாளர்களின் திட்டம் – ஸ்டாலின்

“பெட்ரோல் – டீசல் – சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என நாள்தோறும் மக்களை நசுக்கி வதைப்பதே மத்திய – மாநில ஆட்சியாளர்களின் திட்டம்” என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  

10:55 (IST)10 Mar 2021


முல்லைப்பெரியாறு அணை விவகாரம்- விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

10:54 (IST)10 Mar 2021


பெருமகிழ்ச்சி அடைகிறேன் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் பதினாறாவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் தெரிவித்தார்.

10:50 (IST)10 Mar 2021


பாஜக நாடாளுமன்றக்  கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது

பாஜக நாடாளுமன்றக்  கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

10:24 (IST)10 Mar 2021


எஸ்.பி.டி.ஐ. கட்சிக்கு 18 சட்டமன்றத் தொகுதிகள்

மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்தது எஸ்.பி.டி.ஐ. கட்சிக்கு 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

10:22 (IST)10 Mar 2021


வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிப்போம் – கே எஸ் அழகிரி

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி. 

 \n\n\n” id=”lbcontentbody”>
10:20 (IST)10 Mar 2021


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 

09:22 (IST)10 Mar 2021


தொகுதிப் பட்டியலை திமுக, அதிமுக இன்று வெளியிடும்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பட்டியலை திமுக, அதிமுக இன்று வெளியிடும் என்று எதிரபார்ககப்படுகிறது.   

09:12 (IST)10 Mar 2021


பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? – மு. க ஸ்டாலின்

திமுக மீதான மக்களின் நம்பிக்கை, ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது. குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள். 

பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?  குடும்பத்தலைவியரே கேட்பர்! என திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கேள்வி எழுப்பினர்.   

09:10 (IST)10 Mar 2021


16.5 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 16.5 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ. 4 லட்சம் பரிமுதல் செய்யப்பட்டன.        

09:00 (IST)10 Mar 2021


திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வேலூரில் நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

09:00 (IST)10 Mar 2021


பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் – ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹிடே-யுடன் பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹிடே-யுடன், இருதரப்புக்கும் தொடர்புடைய பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இன்று பேசினார்கள்.

Web Title: Tamil nadu news live updates tamil nadu election breaking news dmk admk kamal haasan

Next Story
அந்த துரைமுருகன் வேறு; எங்கள் துரைமுருகன் வேறு..! கோர்ட்டில் திமுக சர்ச்சை மனு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express