Tamil News Today, 06 January 2024: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 06, 2024 22:42 ISTபணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை; சென்னை மாநகர போக்குவரத்து கழகம்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது
-
Jan 06, 2024 21:44 ISTநெல்லையில் ஆவணங்களை பெற சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற, திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இழந்த ஆவணங்களை, 8 வருவாய் அலுவலகங்களிலும் நடக்கும் முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
-
Jan 06, 2024 20:42 ISTகலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர் - நடிகர் சூர்யா
கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர். சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் டிரெண்ட் செட் செய்தவர் கலைஞர் என கலைஞர் 100 விழாவில் நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்
-
Jan 06, 2024 20:18 IST'கலைஞர் 100' விழா; முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் நடைபெறும் 'கலைஞர் 100' விழாவில் திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ஜோஜாவும் 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்றுள்ளார்
-
Jan 06, 2024 20:00 ISTநாடாளுமன்ற தேர்தல்; காங்கிரஸ் 'வார் ரூம்' தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் மத்திய 'வார் ரூம்'-ன் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
-
Jan 06, 2024 19:32 ISTநீலகிரியில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை மரணம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த 3 வயது குழந்தை மரணமடைந்துள்ளார். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
-
Jan 06, 2024 19:09 ISTபொங்கல் பரிசு டோக்கன் நாளை முதல் விநியோகம்
பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் விநியோகம். வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன், தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை
-
Jan 06, 2024 18:03 ISTவின்பாஸ்ட் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் தென் மாவட்டத்தில் ரூ 16000 கோடி முதலீடு
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென் மாவட்டத்தில் ரூ.16000 கோடி முதலீடு செய்துள்ளது. வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் தமிழகத்தில் 3,000 முதல் 3,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jan 06, 2024 18:00 ISTஎல்.ஐ.சி. பட தலைப்பு விவகாரத்தில் விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை
எல்.ஐ.சி - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் தலைப்பு விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எல்.ஐ.சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் எல்.ஐ.சி. என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தியுள்ள நிலையில், 7 நாட்களுக்குள் தலைப்பை மாற்றாவிட்டால், உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jan 06, 2024 17:26 ISTபொங்கல் பரிசு வழங்க வரும் 12ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக, வரும் வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும் - தமிழக அரசு
-
Jan 06, 2024 16:59 ISTஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி - மோடி வாழ்த்து
சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்ட ஆதித்யா விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, இந்திய மக்களுடன் இணைந்து வாழ்த்துக்கள் என்று 'X' தளத்தில் ட்வீட் செய்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
Jan 06, 2024 16:20 ISTபிரதமரின் தமிழக பயணம் ஒத்திவைப்பு
வரும் 19ம் தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருவதாக இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்து வைக்கும் தேதி, திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேதி மாற்றத்தால், பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டமும், மருத்துவமனை திறக்கும் நாளன்று நடக்க வாய்ப்புள்ளது.
-
Jan 06, 2024 16:18 ISTதிருச்செந்தூர் - நெல்லை இடையே மீண்டும் ரயில் சேவை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை - திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இன்று முதல் திருச்செந்தூர் விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள், நாளை முதல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 06, 2024 15:44 ISTமின் கசிவு காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக பயணிகள் பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
Jan 06, 2024 15:09 ISTஅடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jan 06, 2024 15:06 ISTதமிழக அரசு விளக்கம்
"ரொக்கமாக வெள்ள நிவாரண தொகை வழங்கியது ஏன்?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், 'வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் தொலைந்திருக்கக்கூடும். எனவே, வெள்ள நிவாரண தொகை ரூ 6,000, ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டது' என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
Jan 06, 2024 14:23 ISTஏ.ஆர்.ரஹ்மானுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
துள்ளல் இசையாலும் - தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் @arrahman சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும். #ARRahman
— Udhay (@Udhaystalin) January 6, 2024 -
Jan 06, 2024 14:22 ISTஏ.ஆர்.ரஹ்மானுக்கு யுவன் பிறந்தநாள் வாழ்த்து
Birthday wishes to dearest @arrahman & @arrameen 😊 Wishing you both the best of everything. God bless!
— Raja yuvan (@thisisysr) January 6, 2024 -
Jan 06, 2024 14:22 ISTநெல்லை அறிவியல் மையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள அறிவியல் மையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சல் அடிப்படையில் தீவிர சோதனை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது.
-
Jan 06, 2024 14:14 ISTஎஃப்.ஐ.ஆரில் சாதி பெயர் - அண்ணாமலை
"எஃப்.ஐ.ஆரில் சாதி பெயர் இருந்ததால் சம்மனில் சாதி பெயர். சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம். காவல்துறை எஃப்.ஐ.ஆரில் சாதி பெயர் இருந்ததால் சம்மனில் சாதி பெயர் இடம்பெற்றதாக கூறுகிறார்கள்" என்று அண்ணாமலை கூறினார்.
-
Jan 06, 2024 13:58 ISTஇந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் புதுக்கோட்டை திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளுக்கும் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
- வானிலை ஆய்வு மையம்
-
Jan 06, 2024 13:51 IST3 மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 06, 2024 13:47 ISTபுதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடம் மாற்ற ஒப்புதல்
250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்
புதுச்சேரி ஆளுநர் மாளிகை உறுதித்தன்மையை இழந்ததால் பாதுகாப்பு கருதி இடம் மாற்றம் செய்ய பொதுப்பணித்துறை பரிந்துரை செய்தது.
-
Jan 06, 2024 13:41 IST'இந்திய ஒற்றுமை நீதி பயணம்' லோகோ வெளியீடு
'இந்திய ஒற்றுமை நீதி பயணம்' லோகோவை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட்டார்.
Today Congress President Shri @kharge launched the logo of 'Bharat Jodo Nyay Yatra' at AICC Headquarters in Delhi.#BharatJodoNyayYatra pic.twitter.com/PP4K1GC7Qy
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 6, 2024 -
Jan 06, 2024 13:40 ISTமழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
- வானிலை ஆய்வு மையம்
-
Jan 06, 2024 13:08 ISTபொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக டோக்கன் நாளை (ஜன.7) முதல் வழங்கப்பட உள்ளது. நாளை (ஜன.7) முதல் ஜன.9-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஜன.10-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்
பொங்கல் தொகுப்பை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
-
Jan 06, 2024 13:06 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கார்த்தி சுப்புராஜ் அஞ்சலி செலுத்தினார்.
-
Jan 06, 2024 12:58 ISTஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசும், போக்குவரத்து நிர்வாகமும் பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திடும் வகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
- ஜி.கே.வாசன் எம்.பி.
-
Jan 06, 2024 12:27 ISTஏ. ஆர். ரஹ்மானுக்கு கமலஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
Happy birthday @arrahman ji. Looking forward to working with you again and to more great music for all from you. pic.twitter.com/a8VhrL6wNB
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2024 -
Jan 06, 2024 12:26 ISTநெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது
தூத்துக்குடியில் பெய்த பெருமழையால் இந்த வழித்தடத்தில் சேதமடைந்திருந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது
பிற்பகல் 3 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்பதால், தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
-
Jan 06, 2024 12:03 IST'BLUE STAR' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன், ஷாந்தனு ஆகியோர் நடித்துள்ள 'BLUE STAR' திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
-
Jan 06, 2024 12:03 ISTஇலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் முயற்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
தமிழ்நாட்டை தாண்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை
-
Jan 06, 2024 11:46 ISTகேப்டன் மில்லர் ட்ரெய்லர்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
-
Jan 06, 2024 11:46 ISTஏ.ஆர்.ரஹ்மானுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024 -
Jan 06, 2024 11:39 ISTமதுரையில் அமைதி பேரணி
மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் அமைதி பேரணி - 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
-
Jan 06, 2024 11:38 ISTவருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள புதுச்சேரி அரசு வணிகவரித்துறை அலுவலகத்தில் நேற்று இரவு முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
-
Jan 06, 2024 11:38 ISTஅமைச்சர் சேகர்பாபு பேட்டி
வள்ளலாருக்கு முப்பெரும் விழா மற்றும் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் சர்வதேச மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்; இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்ட உள்ளார்
- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
-
Jan 06, 2024 11:23 ISTகேப்டன் விஜயகாந்த்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்
-
Jan 06, 2024 11:16 IST6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு
-
Jan 06, 2024 11:02 ISTதிமுக இளைஞரணியின் மாநில மாநாடு: புதிய தேதி அறிவிப்பு
தி.மு.க இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெருமழை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிப்பு
-
Jan 06, 2024 10:36 ISTபொங்கல் பரிசு தொகுப்பு - நாளை முதல் டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரு. 1000 பொறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும்- கூட்டுறவுத்துறை.
-
Jan 06, 2024 09:50 ISTதமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு அலெர்ட்
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jan 06, 2024 09:06 ISTரயில்கள் மீது மர்மநபர்கள் கல்வீச்சு - வழக்குப்பதிவு
சென்னை, திருவொற்றியூர் அருகே சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு 7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு.
-
Jan 06, 2024 08:16 ISTஇன்று இலக்கை அடைகிறது 'ஆதித்யா எல்-1'
சூரியனை நோக்கி ஏவப்பட்ட 'ஆதித்யா எல் 1' விண்கலம் இன்று மாலை 4 மணிக்கு லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலை நிறுத்தப்படுகிறது. 15 லட்சம் கி.மீ., தூரத்துக்கு பயணம் செய்துள்ள 'ஆதித்யா 1' விண்கலம், ஒளிவட்டப் பாதைக்குள் நுழைய உள்ளதாகவும் இஸ்ரோ தகவல்.
-
Jan 06, 2024 08:15 ISTஜன.8ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை
ஜன. 8ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை, தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு.
-
Jan 06, 2024 08:15 ISTதச்சன்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு
2024ம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் தயாராக உள்ளன
-
Jan 06, 2024 08:13 IST10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு
-
Jan 06, 2024 08:13 IST5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது அணையில் இருந்து வினாடிக்கு 3100 கனஅடி நீர் வெளியேற்றம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.