Advertisment

Tamil News Updates : மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு வழக்குப்பதிவு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு வழக்குப்பதிவு

Tamil Nadu news updates today : நான்கு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் விமானப்படை தளத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாகமான வரவேற்பை வழங்கினார்கள்.

Advertisment

IPL 2021 : டெல்லி அணி அபாரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடைபெற்று முடிந்த போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 98.96க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

weather update

காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:40 (IST) 23 Sep 2021
    தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமனம்

    தமிழக முன்னாள் டிஜிபியும் ஓய்வுபேற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். ஜே.கே திரிபாதி நியமனம் குறித்து ஓடிசா மாநில தகவல் மற்றும் பொது தொடர்புத் துறை வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (2005 22 இன்) பிரிவு -15 துணைப்பிரிவு (3) மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், ஒடிசா ஆளுநர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே. திரிபாதியை மாநில ஒடிசா மாநில தகவல் ஆணையத் தலைவராக நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் ஒடிசா தகவல் ஆணையத்தின் (ஓஐசி) தலைமை பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் பெயரை பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விதிமுறைகளின்படி, திரிபாதி இந்த பதவிக்கு பொறுப்பேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் வரை அல்லது அவருக்கு 65 வயது ஆகும் வரை பதவியில் இருப்பார்.

    ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜே.கே. திரிபாதி, 30 ஆண்டுகளாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளார்.

    தற்போது, ​​மாநில தகவல் ஆணையத்தின் குழு நான்கு தகவல் ஆணையர்களால் நடத்தப்படுகிறது. சுனில் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆகஸ்ட் 15, 2021 முதல் தகவல் ஆணையத்தின் தலைமை பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில்தான், தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 21:38 (IST) 23 Sep 2021
    மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு

    மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ. 13.5 லட்சம் பணம், ரூ.2.50 கோடி மதிப்பிலான சுமார் 6.5 கிலோ தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. 10 கிலோ சந்தன மரத்திலான பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 20:23 (IST) 23 Sep 2021
    தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் பலி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,745 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,624 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்தனர்.



  • 20:19 (IST) 23 Sep 2021
    “நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” - அஜித்தின் வலிமை படத்தின் Glimpse வெளியானது

    இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகை அஜீத் நடித்துள்ள வலிமை படத்தின் Glimpseஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



  • 19:29 (IST) 23 Sep 2021
    வேலூரில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைகுளத்தம்மன் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 18:25 (IST) 23 Sep 2021
    நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை - எடப்பாடி பழனிச்சாமி

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி "நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை" என கூறியுள்ளார்.



  • 18:24 (IST) 23 Sep 2021
    அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தொடர்பான வழக்கு

    வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:49 (IST) 23 Sep 2021
    குடியரசு தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

    ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்- ஐ சந்தித்தார். தொடர்ந்து அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:45 (IST) 23 Sep 2021
    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

    ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.



  • 17:43 (IST) 23 Sep 2021
    குடியரசு தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.

    ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்- ஐ சந்தித்தார். தொடர்ந்து அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:42 (IST) 23 Sep 2021
    குடியரசு தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

    ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்- ஐ சந்தித்தார். தொடர்ந்து அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:32 (IST) 23 Sep 2021
    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

    ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.



  • 16:53 (IST) 23 Sep 2021
    சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

    சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவுக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:40 (IST) 23 Sep 2021
    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் 15 லட்சம் பறிமுதல்

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாஜலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 16:24 (IST) 23 Sep 2021
    10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு

    தமிழ்நாடு முழுவதும் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக ஜெயந்த் முரளி நியமனம், ஆயுதப்படை ஏடிஜிபி ஆக அபய்குமார் சிங் நியமனம் , திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 16:14 (IST) 23 Sep 2021
    வீரப்பன் தேடுதல் வேட்டை நிவாரண வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7.20 கோடி நிவாரணத்தை வழங்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:06 (IST) 23 Sep 2021
    தேர்தல் பணி: வேலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.



  • 15:50 (IST) 23 Sep 2021
    கோயில் நகைகள் தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத நகைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



  • 15:37 (IST) 23 Sep 2021
    உள்ளாட்சி தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தற்போது வரை 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.



  • 15:20 (IST) 23 Sep 2021
    மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு

    தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • 14:56 (IST) 23 Sep 2021
    தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

    சென்னை, தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் குத்தப்பட்டுள்ளார். மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 14:21 (IST) 23 Sep 2021
    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாஜலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



  • 14:21 (IST) 23 Sep 2021
    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாஜலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



  • 14:20 (IST) 23 Sep 2021
    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாஜலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



  • 13:52 (IST) 23 Sep 2021
    வடகிழக்கு பருவமழை - முதல்வர் நாளை ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 13:45 (IST) 23 Sep 2021
    தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 13:20 (IST) 23 Sep 2021
    கிராம சபை கூட்டம் முறையாக நடப்பதை உறுதி செய்யுங்கள்!

    அக்டோபர் 2-ல் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் என்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்க மக்கள் நீதி மய்யத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



  • 12:37 (IST) 23 Sep 2021
    நெறிமுறைகள் மீறப்படுகின்றன - சு.வெங்கடேசன் கடிதம்

    ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன என்று மத்திய சமூக நீதி அமைச்சகத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.



  • 12:36 (IST) 23 Sep 2021
    கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 12:02 (IST) 23 Sep 2021
    3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

    தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் மையங்களில் 'மெகா தடுப்பூசி' முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.



  • 11:31 (IST) 23 Sep 2021
    இன்றைய ஐ.பி.எல். போட்டி குறித்து ஒரு அப்டேட்

    இன்று மாலை நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி நான்கில் தொல்ல்வி அடைந்து 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.



  • 11:05 (IST) 23 Sep 2021
    தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் தடுப்பூசிகள்

    தமிழகத்திற்கு ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சரிடம் திமுக நாடாளுமன்றகுழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.



  • 10:50 (IST) 23 Sep 2021
    திமுக அரசு பொறுப்பேற்று 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்குகிறது - முக ஸ்டாலின்

    கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக மொத்தமாக 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று சில மாதங்களிலேயே ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே மாதம் 7ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்றேன்; அன்று முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் போட்டி போட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



  • 10:07 (IST) 23 Sep 2021
    திருப்பதிக்கு செல்ல தடுப்பூசி சான்று கட்டாயம்

    2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி வழங்க முடியும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



  • 10:00 (IST) 23 Sep 2021
    இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

    நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 31, 923 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடவெளிக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.



  • 09:21 (IST) 23 Sep 2021
    கமலா ஹாரீஸ் - மோடி இன்று சந்திப்பு

    .நா. பொதுசபையில் பேசுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடின் இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை இன்று சந்திக்க முடிவு செய்துள்ளார்.



  • 09:15 (IST) 23 Sep 2021
    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள்

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,50,370ஆக உயர்ந்துள்ளது.



  • 09:09 (IST) 23 Sep 2021
    அதிக விலைக்கு மதுவிற்றால் நடவடிக்கை

    டாஸ்மாக்கில் உரிய ரசீது வழங்காமல் கூடுதல் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வாணிப கழக மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 09:07 (IST) 23 Sep 2021
    தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

    தமிழகத்தின் 26வது ஆளுநராக கடந்த சனிக்கிழமை அன்று பதவி ஏற்ற ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் அமித்ஷா ஆகியோரை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேச உள்ளார்.



Tamil Nadu Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment