Advertisment

Tamil Nadu updates : தமிழகத்தில் மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil Nadu updates : தமிழகத்தில் மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Nadu news live updates : சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளாது. பொதுமக்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை. நேரடியாக சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

மத்திய அமைச்சரவை

07/07/2021 அன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவை பட்டியலில் முக்கிய நபர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வயது மூப்பு மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக 12 பேர் தங்களின் அமைச்சரவை பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். நேற்று மாலை 43 நபர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

இலங்கை தமிழ் அகதிகள் நலன் குறித்து ஆலோசனை

அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் இலங்கை தமிழ் அகதிகள் நலன் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முக்கியமான விசயத்தில் தமிழகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் ஆஸ்திரேலியா பெருமிதம் கொள்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:52 (IST) 08 Jul 2021
    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமனம்

    தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.


  • 21:51 (IST) 08 Jul 2021
    தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று * தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 57 பேர் உயிரிழப்பு


  • 19:38 (IST) 08 Jul 2021
    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமனம்

    தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.


  • 19:32 (IST) 08 Jul 2021
    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்ககைக்காக நிதி அளிக்கலாம் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் நிதி அளித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளனர்.


  • 19:32 (IST) 08 Jul 2021
    பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர்

    சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பேருந்து நிறுத்தம் , நிழற்கூடைகள், அரசு அறிவிப்புகள் உள்ள சுவரில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவித்துள்ளார்.


  • 19:32 (IST) 08 Jul 2021
    பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர்

    சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பேருந்து நிறுத்தம் , நிழற்கூடைகள், அரசு அறிவிப்புகள் உள்ள சுவரில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவித்துள்ளார்.


  • 19:25 (IST) 08 Jul 2021
    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்ககைக்காக நிதி அளிக்கலாம் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் நிதி அளித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளனர்.


  • 18:48 (IST) 08 Jul 2021
    கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக இருக்கும் - இயக்குநர் செல்வமணி

    மத்திய அரசு மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது என்றும், இயக்குநர் நினைக்கும் படைப்புகளை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ள ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒளிப்பதிவு சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


  • 18:46 (IST) 08 Jul 2021
    ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - ஸ்டாலின்

    ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேம்படுத்திட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


  • 18:43 (IST) 08 Jul 2021
    திமுகவில் இணைந்தார் மகேந்தரன்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்தார்.


  • 17:12 (IST) 08 Jul 2021
    தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம்

    உயர்கல்வி மன்ற தலைவராக அமைச்சர் பொன்முடி செயல்படுவார்; துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 16:46 (IST) 08 Jul 2021
    மேகேதாட்டுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசின் உறுதியான நடவடிக்கை தேவை - விஜயகாந்த்

    கர்நாடகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


  • 15:53 (IST) 08 Jul 2021
    பொது இடங்களில் சுவரோட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; மீறி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 15:50 (IST) 08 Jul 2021
    பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22ல் ஓடிடியில் வெளியீடு

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஜூலை 22ல் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


  • 14:59 (IST) 08 Jul 2021
    பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு

    தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற பெயர் 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும் என சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.


  • 14:37 (IST) 08 Jul 2021
    கர்நாடக அரசை கண்டித்து 15ஆம் தேதி போராட்டம்

    மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் வரும் 15ஆம் தேதி விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


  • 14:34 (IST) 08 Jul 2021
    தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை பெறும் வகையில் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


  • 14:01 (IST) 08 Jul 2021
    8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


  • 13:29 (IST) 08 Jul 2021
    பாஜக குறித்து நான் கூறியது எனது சொந்த கருத்து

    பாஜக குறித்து நான் கூறியது எனது சொந்த கருத்து என்றும் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.


  • 13:15 (IST) 08 Jul 2021
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


  • 12:33 (IST) 08 Jul 2021
    மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது - எல்.முருகன்

    2014-க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது என்றும் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


  • 12:26 (IST) 08 Jul 2021
    எல்.முருகனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

    மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  • 12:24 (IST) 08 Jul 2021
    ரூ.133 கோடி எப்படி வழங்கப்பட்டது? - உயர்நீதிமன்றம் கேள்வி

    மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடி எப்படி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:35 (IST) 08 Jul 2021
    மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது

    நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.


  • 11:13 (IST) 08 Jul 2021
    எல். முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள்

    மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


  • 11:06 (IST) 08 Jul 2021
    காங்கிரஸார் சென்னையில் போராட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறிக்கும் வகையில் மாட்டுவண்டியில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை வைத்து இழுத்து சென்றனர்.


  • 10:53 (IST) 08 Jul 2021
    தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

    தமிழ்நாடு மிகச்சிறந்த சுகாதார உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்று வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.


  • 10:34 (IST) 08 Jul 2021
    ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை

    தமிழகத்திற்கு ஆக்ஸிஜம் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறையின் புதிய அமைச்சர் நேரம் தந்ததும் இது தொடர்பாக அவரை சந்தித்து பேசுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 10:24 (IST) 08 Jul 2021
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,892 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 817 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.


  • 10:03 (IST) 08 Jul 2021
    மேகதாது அணை ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் கூறியது கண்டனத்திற்குரியது. மேகதாது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.


  • 09:23 (IST) 08 Jul 2021
    காவல்துறையின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா? Feedback கேட்கும் உயர் அதிகாரிகள்

    புகார் பதிவு செய்யப்பட்ட பின்பு, காவல்துறை விசாரணை அதிகாரிகளின் போக்கு குறித்து பொதுமக்களிடம் Feedback Cell மூலம் கருத்து கேட்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் அறிவித்துள்ளார்.


  • 09:05 (IST) 08 Jul 2021
    கடைசி விம்பிள்டன் தொடர் - தோல்வியுடன் வெளியேறிய நட்சத்திர வீரர் ஃபெடரர்

    39 வயதாகும் ரோஜர் ஃபெடரருக்கு இது கடைசி விம்பிள்டன் தொடர். காலிறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் போலாந்து நாட்டின் ஹர்காஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி வழி அனுப்பி வைத்தனர்.


  • 09:02 (IST) 08 Jul 2021
    அமைச்சர்களுக்கு தமிழிசை வாழ்த்து

    புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிரை உள்ளடக்கிய அமைச்சரவை வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள் என்று தமிழிசை கூறியுள்ளார்.


  • 08:39 (IST) 08 Jul 2021
    சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை

    இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.37க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ. 94.15க்கு விற்பனையாகிறது.


  • 08:35 (IST) 08 Jul 2021
    இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் மரணம்

    வயது மூப்பின் காரணமாக இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார். அவருக்கு வயது 87.


Live Updates Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment