Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ரெட் அலர்ட்
டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யும் என்பதால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் தலைமை இளைஞர்கள் கையிலா?
23 கோடியே 50 லட்சத்தைக் கடந்த கொரோனா
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,50,38,761 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 48,05,068 பேர் உயிரிழந்துள்ளனர். 21,17,86,327 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,84,47,366 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 80 காசுக்கு விற்பனை ஆகுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டுவிடும் என கூறப்படுகிறது. அதே போல, டீசல் இன்று லிட்டருக்கு 28 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 95 ரூபாய் 02 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உத்தராகண்ட் திர்சூல் பகுதியில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
பழைய முறைப்படியும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஆன்லைன் மூலமும் விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் எனது அன்புச் சகோதரருமான இராஜா மறைந்தார் என்றறிந்து துடித்துப் போனேன். அவரது குடும்பத்தினருக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்ல சொற்கள் இன்றி தவிக்கிறேன். கழக வரலாற்றில் வீரபாண்டியாரைப் போல் இராஜாவும் நிலைத்து நிற்பார்! என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்!
தமிழகத்தில் 1,578 மேலும் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 24 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையில் கணக்கில் காட்டப்படாத 13 லட்ச ரூபாய் பறிமுதல், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் பிடிபட்டன
கூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப் படுத்தல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எனவும், தற்போதைய சூழலில் புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விடுதலை இந்தியாவில் காங்கிரசுக்கு பணி இல்லை என காந்தி கூறியநிலை தற்போது ஏற்பட்டுள்ளது என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் சின்னத்தை உட்கட்சி மோதலால் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
நாக சைதன்யா, சமந்தா ஜோடி பிரிந்தது. இது குறித்து சமந்தா சமூக வலைதளப்பக்கத்தில், கணவன் – மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து விட்டோம் என பதிவிட்டுள்ளார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் செய்ததை விட கடந்த 2 ஆண்டுகளில் அதிக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ரூ. 1500 லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் ஆகியோர்’ “ஊழல்க் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துவிட்டது. லஞ்சம் பெறுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
காந்தி மதுரையில் மேலாடையை துறந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கூடலூரில் மனிதர்களை தாக்கும் புலியை தேடும் பணியில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. புலி அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றதால் அதன் நடமாட்டத்தைக் கண்டறிய ட்ரோன் இயக்கப்பட்டு வருகிறது.
கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, அரியலூர், மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 35,096க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 10:15 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 4.1 ரிக்டராக பதிவாகியுள்ளது.
சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் கல்யாணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளா மாநாடு தி்ரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 10 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,73,889 ஆக உள்ளது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.