வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில் அறிமுகம் | Indian Express Tamil

வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

Tamil Nadu News: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கவிருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்
வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில் (Image: Representational-PTI/file)

Tamil Nadu News: வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி (திங்கட்கிழமை) வேளாங்கண்ணி திருவிழா நடைபெறவுள்ளதால், பக்தர்களின் வருகை அதிகரிக்கவுள்ளது. 

இதனால் போக்குவரத்திற்கு போதிய ரயில்கள் இல்லாமல் போகும் வாய்ப்பு இருப்பதால், இந்தியன் ரயில்வே அவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த திருவிழாவை முன்னிட்டு, தென்மேற்கு ரயில்வே வாஸ்கோடகாமா (கோவாவிலிருந்து)  மற்றும் வேளாங்கண்ணி (தமிழ்நாடு) வரை பயணிக்கும் மக்களுக்காக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 9 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

பின்னர், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் (07358) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 11:45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

மட்கான், சன்வோர்டெம் சர்ச், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வார், ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், தாவங்கிரீ, பிரூர், அரசிகெரே, திப்தூர், தும்கூர், சிக் பனாவர், பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களின் வழியாக இந்த சிறப்பு ரயில் செல்லும் என்று கூறுகின்றனர்.

மற்றொரு ரயில் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (07359) வாஸ்கோடகாமாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

திரும்பி செல்லும்போது, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா (07360) சிறப்பு ரயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9:15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

மட்கான், சன்வெர்டாம் க்ரூச், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வார், ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவங்கிரீ, பிரூர், அர்சிகெரே, திப்தூர், தும்கூர், சிக் பனாவர், பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காரா ஆகிய ரயில் நிலையங்கள் நிறுத்தப்படும். ,ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களின் வழியாக இந்த சிறப்பு ரயில் செல்லும் என்று கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news special trains introduced for velankanni festival