Advertisment

Tamil Nadu news updates: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது: காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் பேட்டி

தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம், வானிலை அறிவுப்புகள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கைப் பின்தொடருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் , காவிரி ஒழுங்காற்று குழு உச்சநேதிமன்ர உத்தரவின் பேரில் மத்திய அரசு அமைத்தது. நவீன்குமாா் தலைமையில் நேற்று திருச்சியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது . தமிழகத்தில் நடக்கும் முதல் கூட்டமாகும். காவிரி நதி நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி எவ்வாறு பங்கிடுவது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது . கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமாா் , கர்நாடாக வால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று தெரிவித்தார்.

Advertisment

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக்-இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் பலரை பணியிட மாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவையில் லாரிபேட்டை, ஜி.எம். நகர் ஆகிய 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இன்று கோவையில் உள்ள் லாரிப்பேட்டையில் உள்ள சௌருதீன் வீட்டிலும், ஜி.எம்.நகரில் உள்ள நிஷார் வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இன்று தொடர்மழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம், வானிலை அறிவுப்புகள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கைப் பின்தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.



























Highlights

    22:06 (IST)31 Oct 2019

    மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

    மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூ.611 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மேட்டூரில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    20:42 (IST)31 Oct 2019

    தமிழக அமைச்சரவை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

    நவம்பர் 2 ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஆழ்துளை கிணறுகள் தெடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    20:07 (IST)31 Oct 2019

    283 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

    283 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, நாளை புதிதாக நியமிக்கப்படும் 188 மருத்துவர்களை கொண்டு பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் நிரப்பப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் 9.7% பேர் மட்டுமே பணிக்கு திரும்பவில்லை. 11 மாவட்டங்களில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

    19:36 (IST)31 Oct 2019

    சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

    சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை, கோவை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நவ.14 வரை கோவை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

    19:03 (IST)31 Oct 2019

    கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முறை சிறப்பு

    காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணைகட்ட முடியாது கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முறை சிறப்பாக உள்ளது என காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    18:03 (IST)31 Oct 2019

    போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை- ஸ்டாலின்

    அரசு மருத்துவர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதை விடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டியவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்

    17:25 (IST)31 Oct 2019

    தீவிர புயலாக மாறியது ‘மகா’ புயல்

    அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் எனவும் நான்காம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    16:57 (IST)31 Oct 2019

    நாளை விசாரணை!

    அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம் . நேற்று தாக்கல் செய்த கூடுதல் மனு பட்டியலிடப்படாததால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையீடு செய்திருந்தார்.  

    16:56 (IST)31 Oct 2019

    மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என உத்தரவு!

    ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும் என்று  உயர்நீதிமன்ற கிளை மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்கவும், வழக்கறிஞருக்கு மன்னிப்பு கடிதம் அளிக்கவும் தலைமை காவலர்கள் இருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து காவல்துறை தடுத்தால் உரிய அபராதத்தை செலுத்த வேண்டும் பணம் இல்லையெனில் ரசீதைப் பெற்றுக்கொண்டு பிறகு அபராதம் செலுத்தலாம்  என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

    16:16 (IST)31 Oct 2019

    சரிதா நாயருக்கு சிறை!

    காற்றாலை மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்  விதித்து  கோவை குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விவரத்தை வெளியிட்டுள்ளது. சுமார் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009 ஆம் ஆண்டு காற்றாலை மோசடி  வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில்  சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 

    15:25 (IST)31 Oct 2019

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கிய தமிழக அரசு

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐ.ஓ.சி.-க்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால், கூடுதலாக நிலம் ஒதுக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.

    14:59 (IST)31 Oct 2019

    மருத்துவர்கள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு!

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை சந்தித்து கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

    14:48 (IST)31 Oct 2019

    காற்றாலை மோசடி வழக்கு தீர்ப்பு!

    காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் தண்டனை விவரம் இன்று பிற்பகல் வெளியாகிறது. இவர்களுக்கான தண்டனை விவரத்தை கோவை 6வது குற்றவியல் நீதிமன்றம் வெளியிடுகிறது. 

    14:24 (IST)31 Oct 2019

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்ற கிரிஷ் சந்திர முர்மு

    இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.

    14:20 (IST)31 Oct 2019

    நான் செல்போன் பயன்படுத்தவில்லை; சிறை அதிகாரிகள் சதி செய்கிறார்கள் - முருகன் குற்றச்சாட்டு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் இன்று வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கூறுகையில்: நான் செல்போன் பயன்படுத்தவில்லை, சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே எனது விடுதலை & பரோலை தடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்கிறார்கள். எனக்கு சிறையில் சரிவர உணவு தருவதில்லை, எனது ஆன்மீக பயணத்தையும் தடுக்க நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    14:10 (IST)31 Oct 2019

    திருச்சி அரசு மருத்துவமனையில் நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் - மருத்துவர்கள் அறிவிப்பு

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து போராடிவரும் அரசு மருத்துவர்கள்.

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் நாளை முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று அறிவிப்பு

    13:40 (IST)31 Oct 2019

    முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சற்று முன்பு சந்தித்தார். அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட அரசு இன்று மாலை வரை கெடு விதித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    13:30 (IST)31 Oct 2019

    நாங்குனேரி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் முறையே ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ் செல்வன் ஆகியோர் நாளை (வெள்ளி) காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்கள். சென்னையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    13:03 (IST)31 Oct 2019

    மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் - அமைச்சர்

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 7வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: “சென்னை மருத்துவர்கள் போராடுவதற்கு அரசு மருத்துவமனை போராட்ட களம் அல்ல. அவர்கள் இன்று 2 மணிக்குள் பணிக்கு திரும்ப மருத்துவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை பாதிக்கப்படக் கூடாது. மருத்துவர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. 3500 பேர் போராட்டம் செய்தாலும் 50 பேருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

    12:50 (IST)31 Oct 2019

    மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை. பிரேக் இன் சர்வீஸ் மற்றும் நன்னடத்தை சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    12:46 (IST)31 Oct 2019

    நவம்பர் 4 -இல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வுமையம்

    வங்கக்கடலில் நவம்பர் 4ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    12:34 (IST)31 Oct 2019

    கோவை உக்கடம் பகுதியில் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

    கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் 2 இடங்களில் நடத்திய சோதனை நிறைவடைந்தது. சோதனையில், ஒரு லேப்டாப், செல்போன், மெமரி கார்டு, சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.

    12:18 (IST)31 Oct 2019

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரியை சேர்ந்த மாணவிக்கு ஜாமீன் - உயர் நீதிமன்றம்

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நேரத்தில், மாணவியின் தாயார் மைனாவதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    12:02 (IST)31 Oct 2019

    சிகிச்சைக்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரம்; டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிகிச்சை பெறுவதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 3 நாள் இடைக்கால ஜாமீன் கோரினார். அவரது கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

    11:43 (IST)31 Oct 2019

    தமிழகத்தில் கோவை, நாகூர், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    தமிழகத்தில் கோவையில் 2 இடம், நாகை, காயல்பட்டினம், திருச்சி இளையான்குடி என மொத்தம் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் ஆவனங்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் என தகவல் வெளியாகி உள்ளது.

    11:18 (IST)31 Oct 2019

    தேசிய தேர்வு முகமை, மருத்துவ கல்வி இயக்குனரகம் அளித்த பட்டியலுடன் ஒப்பிடும் பணி தீவிரம்

    நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கைரேகை அடங்கிய பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குனரகம் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அதில் மாணவர்கள் கொடுத்த கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    11:16 (IST)31 Oct 2019

    மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அவரது சகோதரி லட்சுமிக்கு அனுமதி - உயர் நீதிமன்றம்

    கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அவரது சகோதரி லட்சுமிக்கு அனுமதி வழங்க கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

    11:01 (IST)31 Oct 2019

    மருத்துவர்கள் போராட்டம்: பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது - முதல்வர் எச்சரிக்கை

    சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி: மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்துவருகிறார்கள். பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது; போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    10:46 (IST)31 Oct 2019

    சுஜித் மீட்பு பணியை ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது வருத்தமளிக்கிறது - முதல்வர் பழனிசாமி

    சேலம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி: குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது; மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர். தீபாவளி, மழையிலும் அயராது மீட்பு பணிகள் நடைபெற்றது. ஆனால், மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு மீது தவறாக குற்றம் சாட்டுகிறார்.

    10:36 (IST)31 Oct 2019

    "மஹா புயலால் பாதிப்பில்லை"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது; மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை. என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    10:33 (IST)31 Oct 2019

    ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

    சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் பனழிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    10:16 (IST)31 Oct 2019

    அரசு மருத்துவர்கள் காவல்துறை இடையே வாக்குவாதம்

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அரசு மருத்துவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கே அரசு மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    10:01 (IST)31 Oct 2019

    நாகூர், காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

    தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவையில் லாரிப்பேட்டை, எம்.ஜி.நகரில் சோதனை மேற்கொண்ட நிலையில், நாகூரில் உள்ள மியாந்த் தெருவில் முகமது அஜ்மல் என்பவர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். அதே போல, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.

    09:53 (IST)31 Oct 2019

    படேல் பிறந்தநாளில் அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

    சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி அகமதாபாத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    09:46 (IST)31 Oct 2019

    படேல் பிறந்த நாளில் ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்ற பிரதமர் மோடி

    சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்தநாளில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள கேவடியாவில் நிர்வாக ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்றார்.

    09:30 (IST)31 Oct 2019

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.

    09:24 (IST)31 Oct 2019

    இந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் மரியாதை செய்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் ம​ரியாதை செலுத்தினர்.

    09:12 (IST)31 Oct 2019

    தொடர் மழையால் கொடைக்கானல் தாலுக்காவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர் மழை பெய்துவருவதால் கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

    09:10 (IST)31 Oct 2019

    கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

    09:07 (IST)31 Oct 2019

    மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2வது நாளாக விடுமுறை

    அரபிக் கடலில் மஹா உருவாகியுள்ள மஹா புயல் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் உட்பட 3 பேரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மற்றும் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மணப்பாறை அருகே போர்வெல்லில் விழுந்து பலியான சுஜித் உடல் மற்றும் முகத்தை ஏன் காட்டவில்லை? என்பதற்கு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம் அளித்தார். உரிய விதிமுறைகளை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment