Advertisment

இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின்

Tamil nadu news today updates : தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர், டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பில், சில தகவல்களை பெறுவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்துள்ளன.'இந்த சட்டங்களால், சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சீனா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது. டில்லியில் இருந்து இத்தாலி சென்று திரும்பிய ஒருவர், துபாயில் இருந்து தெலுங்கானா திரும்பியவர் மற்றும் ராஜஸ்தான் வந்த இத்தாலி நாட்டு பயணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோழி சாப்பிடுவதால் 'கொரோனா வைரஸ்' பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதானல் கோழி விற்பனை சரிந்தது. இதையடுத்து கோழிப் பண்ணை தொழிலில் ரூ.1,750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:30 (IST)03 Mar 2020

    சிவகாசியில் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்

    தனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி

    இன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    21:47 (IST)03 Mar 2020

    நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரின் செல்போன் பறிப்பு

    புதுச்சேரியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    கடற்கரைச் சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இரவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு கமலக்கண்ணன் தனது வீடு நோக்கித் திரும்பியுள்ளார்.

    அப்போது, பாதுகாப்பு அதிகாரி கையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, அவ்வழியே பைக்கில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    21:08 (IST)03 Mar 2020

    நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன்

    பல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்; நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன்

    வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும்

    எதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும்

    - ராதாரவி

    21:07 (IST)03 Mar 2020

    அஜித்தின் 'வலிமை' பட அப்டேட் 

    #Valimai Updates:

    - படத்தில் மூன்று வில்லன்கள்

    - 65% ஷூட்டிங் நிறைவு

    - அடுத்தக்கட்ட ஷூட்டிங் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது

    20:48 (IST)03 Mar 2020

    கடல் வாழ் உயிரினங்களை இணையத்தில் விற்பனை - 2 கைது

    ஈரோடு : பாசூர் அருகே கணபதிபாளையத்தில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை இணையத்தில் விற்பனை செய்ததாக வீரராஜ்குமார்(24 ), நகுலேஷன்(24) ஆகியோர் கைது.

    20:46 (IST)03 Mar 2020

    சபாநாயகர் ஓம்.பிர்லா எச்சரிக்கை

    மக்களவையில் எதிர்வரிசைக்குச் செல்லும் எம்.பி.க்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என சபாநாயகர் ஓம்.பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்

    20:26 (IST)03 Mar 2020

    ஸ்டாலினுக்கு மனம் இல்லை

    சிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை

    - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    20:26 (IST)03 Mar 2020

    அதிமுக தான் வெற்றிபெறும்

    இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும்

    சிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை

    எளிய முதல்வர் என கூகுளில் தேடிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும்

    - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    20:25 (IST)03 Mar 2020

    உண்மை நிலை மெதுவாக தெரியவரும்

    என்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவதாக முதல்வரிடம் கூறினோம்

    சிறுபான்மையின மக்களை இந்த அரசு பாதிக்கப்பட விடாது, உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார்

    - கோவை மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார்

    20:24 (IST)03 Mar 2020

    ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு

    குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்

    என்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்த மாட்டோம் என தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு

    20:23 (IST)03 Mar 2020

    மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி

    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது

    சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் ரஜினிகாந்த்

    19:18 (IST)03 Mar 2020

    முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழர் நாகரிகத்தைச் சிதைக்கும் கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

    - மு.க.ஸ்டாலின்

    18:42 (IST)03 Mar 2020

    என்பிஆர்-ல் திருத்தம் - தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு

    என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு

    * என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

    18:39 (IST)03 Mar 2020

    சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மார்ச் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்

    கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களுக்கு தனிப்பிரிவை ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவு எனத் தகவல் 

    18:30 (IST)03 Mar 2020

    13 ஆவின் இயக்குநர்களில் 11 பேரின் தேர்வுக்கு தடை

    மதுரையில் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்ட 13 ஆவின் இயக்குநர்களில் 11 பேரின் தேர்வுக்கு தடை

    முழுமையான வீடியோ பதிவு தாக்கல் செய்யப்படவில்லை; எடிட் செய்தது போல தெரிகிறது; பழனியப்பன், தங்கராஜ் ஆகியோரைத் தவிர பிறர் தேர்வு செய்யப்பட்டதற்கு தடை

    - உயர்நீதிமன்ற கிளை

    18:29 (IST)03 Mar 2020

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

    உணவு பொருட்களை அடைக்கபயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தரப்பட்ட விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை.

    பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    18:15 (IST)03 Mar 2020

    ரூ16,712 கோடி

    ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    18:05 (IST)03 Mar 2020

    தாய், தாத்தா மற்றும் பாட்டியே கொன்ற கொடூரம்

    கும்பகோணத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததாக பெற்ற குழந்தையை தாய், தாத்தா மற்றும் பாட்டியே இணைந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    17:53 (IST)03 Mar 2020

    ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய கூடாது

    உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய கூடாது. வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    - உச்சநீதிமன்றம்

    17:51 (IST)03 Mar 2020

    திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

    தமிழர்களின் நாகரிகம், கலாசாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தால் தமிழக மக்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

    பண்பாட்டுக் களஞ்சியங்களான கோயில்களை பறித்துக்கொள்ள பரம்பரை எதிரிகள் துடிக்கிறார்கள்

    - மு.க.ஸ்டாலின்

    17:47 (IST)03 Mar 2020

    தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே நாட்டு வெடிகுண்டு

    சென்னை தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், கார் ஷோரூம் ஒன்று சேதமடைந்தது. தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் கோவிந்தராஜ், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவிலரில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேக நபர்களை இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    16:58 (IST)03 Mar 2020

    ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

    ஈரானில் கோரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    16:47 (IST)03 Mar 2020

    திருப்பூர் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் நூல் மூட்டைகள் எரிந்து சேதம்

    திருப்பூர் மாவட்டம், பூமலூரில் உள்ள நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

    தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல் மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்

    தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயை அணைத்தனர்

    பஞ்சு அரவை இயந்திரத்தில் புகை வருவதை கண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    16:25 (IST)03 Mar 2020

    கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க பிரதமர் யோசிக்க வேண்டும்; ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, “கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும்; சமூக வலைதளங்களில் நேரம் விரயம் செய்ய வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

    15:47 (IST)03 Mar 2020

    தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பு பற்றி சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்பட்டதா என்றும் சிபிஐ இணை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    15:34 (IST)03 Mar 2020

    புதுச்சேரி அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற பைக் ஆசாமி; போலீஸ் விசாரணை

    புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய செல்போனை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை.

    15:22 (IST)03 Mar 2020

    கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் - உயர் நீதிமன்றம்

    கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என்றும் தேர்தல் முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    14:55 (IST)03 Mar 2020

    கொரோனாவை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் - பிரதமர் மோடி

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து பல்வேறு துறைகளும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

    14:17 (IST)03 Mar 2020

    சிஏஏ விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

    சிஏஏ விவகாரத்தில் நீதிமன்றத்தில் உதவ எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    13:39 (IST)03 Mar 2020

    மகளிர் தினத்தில், சமூக ஊடகக் கணக்கை சாதனையாளர்களுக்கு தரும் பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த மகளிர் தினத்தில் எனது சமூக ஊடக கணக்குகளை தங்கள் வாழ்க்கை மற்றும் வேலைகள் மூலம் நமக்கு ஊக்கமளிக்கும் பெண்களுக்கு தருகிறேன். மில்லியன் கணக்கானவர்களுக்கு உந்துதலை அளிக்க இது அவர்களுக்கு உதவும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? போன்ற கதைகளைப் பயன்படுத்தி பகிரவும் என்று குறிபிட்டுள்ளார்.

    13:33 (IST)03 Mar 2020

    அய்யா வைகுண்டர் அவதார தினவிழா; பக்தர்கள் சாமி தரிசனம்

    அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    12:54 (IST)03 Mar 2020

    டாக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, தமிழக டாக்டர்கள், விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    12:50 (IST)03 Mar 2020

    டெல்லி வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் கைது

    டெல்லி வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக்கை, டெல்லி போலீசார், உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.

    publive-image

    12:03 (IST)03 Mar 2020

    தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் – முதல்வர் துவக்கிவைப்பு

    உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

    11:59 (IST)03 Mar 2020

    சீருடை பணியாளர் தேர்வு - நீதிமன்றம் உத்தரவு

    டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் 8,888 பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    11:39 (IST)03 Mar 2020

    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தமிழக கோயில்கள் – ராமதாஸ் கண்டனம்

    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தமிழக கோயில்கள் கொண்டு வரும் முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக கோயில்களை, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், தமிழக அரசு அதை முறியடிக்க வேண்டும் என்று அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    11:33 (IST)03 Mar 2020

    வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

    வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, வெங்காய விலைவிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும்15-ம் தேதியில் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    11:29 (IST)03 Mar 2020

    சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது

    சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை காட்டி இரண்டு இளைஞர்கள் விரட்டிய வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    11:18 (IST)03 Mar 2020

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி - அவைகள் ஒத்திவைப்பு

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, மக்களவை நண்பகல் 12 மணிவரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    10:47 (IST)03 Mar 2020

    யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

    யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சி கலைப்பு என்பதை கருக்கலைப்பு என்று நினைத்துவிட்டார்களோ என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மிரட்டியிருந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

    10:14 (IST)03 Mar 2020

    இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – கமல்ஹாசனிடம் இன்று விசாரணை

    இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், துணை இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை, மத்திய குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கமலிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

    10:05 (IST)03 Mar 2020

    கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் – வைரமுத்து

    கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்; அந்த ரோஜா வேறு, இந்த ரோஜா வேறு என, கவிஞர் வைரமுத்து  தெரிவித்துள்ளார்.

    தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடக் கூடாது. ரோஜா மலரை மற்றொரு ரோஜா மலருடன் கூட ஒப்பிடக் கூடாது. அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. தலைவர் கருணாநிதி  வேறு உயரம். ஸ்டாலின்  வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    09:47 (IST)03 Mar 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    09:44 (IST)03 Mar 2020

    சென்னையில் குடிநீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு?

    கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் மூலம் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.   உயர்நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கேன் உரிமையாளர்கள் அவர்களது பணிகளை தொடர முடியாத நிலை உருவானது. ஆகவே கேன் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக கேன் உரிமையாளர்கள் முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Tamil nadu news today updates : பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கட் - அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    நாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Coronavirus Amit Shah Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment