Tamil nadu news today updates : வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய தென் மாவட்டத்தினர், 199 பேர், 'கொரோனா' கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மதுரையில், 48, திண்டுக்கல் - நான்கு, தேனி - 29, ராமநாதபுரம் - ஐந்து, சிவகங்கை - ஐந்து, திருநெல்வேலி - இரண்டு, கன்னியாகுமரி - ஐந்து, துாத்துக்குடி - 50, தென்காசி - 51 பேர் என, தென் மாவட்டங்களில், 199 பேர், 'கொரோனா' கண்காணிப்பில் உள்ளனர்.மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநிலத்தில், 1,088 பேரை கண்காணிக்கிறோம். அதிகபட்சமாக, சென்னையில், 388 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 'கொரோனா' பாதிப்புள்ள நாடுகள், மாநிலங்களுக்கு யாரும் பயணிக்க வேண்டாம்,'' என்றார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அ.தி.மு.க., கூட்டணி உடையும் என, நினைப்போரின் எண்ணம் ஈடேறாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., எப்போதும், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் இயக்கம். நாங்கள் அனைவரையும் மதிப்போம். கூட்டணி கட்சி களுக்கு, வாய்ப்பு வரும்போது, அவர்களுக்குரிய வாய்ப்பை வழங்குகிறோம். தே.மு.தி.க., உறுதியான நிலைப்பாடுடன், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ளது. கூட்டணி உடையும் என, நினைப்போரின் எண்ணம் ஈடேறாது. அ.தி.மு.க., வரலாற்றை எடுத்துக் கொண்டால், மகளிருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட்டை வைத்து, பெண்களை புறக்கணிப்பதாக கூற முடியாது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டர் கலந்துகொள்ள உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறினார். மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக் விஜய் சிங் கூறினார்.
தமிழ் திரையுலகில் பல முத்தான பாடல்களை கொடுத்து தனக்கென தனி பதித்தவர் கவிஞர் வைரமுத்து.
இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்கு அவர் எழுதிய பாடல்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது வருகிறது. படித்தவர் முதல் பாமரர் வரை ரசிக்கும் இசையில், வைரமுத்துவின் பாடல்கள் என்றும் மனதில் நின்று ரீங்காரம் பாடி வருகிறது.
இவருக்கு திரைத்துறையில் அறிமுகம் கொடுத்த படம், இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியான நிழல்கள் என்ற திரைப்படம். இந்த படத்தில், பொன்மாலைப்பொழுது பாடலை வைரமுத்து எழுதினார். இந்த பாடல் தான் திரையுலகில் வைரமுத்துவுக்கு ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த பாடல் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. விஷால் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தலை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கும் இடைக்கால தடை
நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம்.
விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
கணித மேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரிக்கு 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கருவிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது. அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இயற்பியல் துறை கூடத்திற்கு, ஓஎன்ஜிசி செயல் பொது மேலாளர் சியாம் மோகன் ஆய்வக கருவிகளை வழங்கினார்.
தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 728 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 216 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் 280 ரூபாய் அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேச துணை முதல்வர் பதவி வகித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு தன்னால், மக்களுக்கு எதுவும் நல்லது செய்ய முடியவில்லை, என அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவர் விரைவில், பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை போயஸ் தோட்டத்தில், நடிகர் ரஜினிகாந்தை, எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, குடும்ப விஷயமாக ரஜினியை சந்தித்தேன், அரசியல் குறித்து பேசவில்லை அரசியல் குறித்து ரஜினி யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச துணை முதல்வர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சிந்தியா, துணை முதல்வர் பதவி கிடைத்ததால் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அங்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதன்காரணமாக, கமல்நாத் தலைமையிலான மத்தியபிரதேச அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, ஹோலி பண்டிகையை, ராஜ்பவனில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் மலர்களை தூவி கொண்டாடினார்.
#WATCH Puducherry Governor Kiran Bedi plays #Holi with flowers at Raj Bhawan pic.twitter.com/pq6lcUVH2Y
— ANI (@ANI) March 10, 2020
தேனி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கும் தேனி அதிமுக எம்பி ஓ பி ரவீந்திரநாத் நன்றி தெரிவித்துள்ளார்.
My heartful thanks to Honorable Prime minister Shri.Narendra Modi Ji, the Honorable Minister of Health Dr. HarshavardhanJi for giving permission to allocate corona virus labotaory in theni government hospital after chennai in tamilnadu @OfficeOfOPS @narendramodi @drharshvardhan pic.twitter.com/CyfNpQWOwc
— OPRaveendranath (@OPRavindranath) March 10, 2020
மொபைல் போன்' வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து, அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என, அரசு அறிவித்து இருந்தது.'தொலைபேசி அழைப்புகள் மற்றும் 'மொபைல் டேட்டா'க்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதை தவிர, வேறு வழியில்லை' என, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட, 5 முதல் 10 மடங்கு விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரியார் ஈ.வெ.ராமசாமி குறித்து பேசிய, நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய, முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, சென்னை, எழும்பூர் நீதிமன்றம், இன்று(மார்ச் 10) உத்தரவிட உள்ளது.
நடிகர் ரஜினி, சென்னையில் நடந்த, 'துக்ளக்' இதழின், 50வது ஆண்டு விழாவில் பேசினார். அப்போது, 1971ல், தி.க., தலைவராக இருந்த, ஈ.வெ.ராமசாமி நடத்திய பேரணி குறித்து, சில கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து, ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகி, உமாபதி என்பவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி, ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய, முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, இன்று உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
ஹோலிப்பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த வண்ணமயமான ஹோலி நன்னாளில், அனைவருக்கும் உற்சாகம்,மகிழ்ச்சி பொங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
रंग, उमंग और आनंद के त्योहार होली की आप सभी को बहुत-बहुत बधाई। यह पर्व सभी देशवासियों के जीवन में खुशियों लेकर आए। pic.twitter.com/xfrfdNaduX
— Narendra Modi (@narendramodi) March 10, 2020
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பிரதமர் மோடி வங்கதேச பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் வரும் 13-ம் தேதி இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியானதையடுத்து மோடியின் பெல்ஜியம் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் வங்கதேச அந்நாட்டின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் 100-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பயணத் திட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights