Tamil nadu news today updates : 'கொரோனா' வைரஸ் தாக்கும் என்ற வதந்தியால், தமிழகத்தில், கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதை, மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், முட்டை விலை, 3 ரூபாயாகவும், கிலோ கோழி இறைச்சி, 60 ரூபாயாகவும் சரிவடைந்து, கோழி பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தைத் தெளிய வைக்கும் வகையில், 'கோழி இறைச்சி சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் வராது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலால், இந்த மாதத்தில், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளியூர், வெளிநாடுகள் செல்வதை, மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து ரயில்வேயில் 60 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய் யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.விமான பயணியரும் டிக்கெட்களை ரத்து செய்துள்ளதால், விமான நிறுவனங்களும், பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூடப்படும் என அறிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் என்ன அறிவிப்பார்?... 2-4 வார காலத்திற்கு குறைந்தபட்சம் அனைத்து நகரங்கள், மாநகரங்களையாவது மொத்தமாக மூடுவதை பிரதமர் அறிவிக்காவிட்டால் நான் ஏமாற்றமடைவேன். அதற்கு குறைவான எதுவும் இந்த நாட்டை வீழ்த்திவிடும்.” என்று டுவிட் செய்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில், ம.பி. சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு, முதியோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அவசரம், அத்தியாவசிய பணிகள் தவிர வீட்டிலேயே இருந்து பணியாற்ற வேண்டும். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மாணவர்கள் மற்றும் நோயாளிகளைத் தவிர மற்றவர்களுக்கான பயண சலுகைகள் ரத்து செய்யட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு
கொரோனா எதிரொலியால், பாஸ்போர்ட் முகவரி ஆய்வுக்கு செல்லும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று துணை ஆணையர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷய் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் மேல்முறையீடு முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலியாக 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும்; எஞ்சிய 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பல மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் அமல்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
#BREAKING: ஏப்.1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு | #TNAssembly https://t.co/SCHqTQpNfq
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 19, 2020
கொரோனா அச்சறுத்தலால், 27ம் தேதி துவங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமல்லாது நடைபெற்று வரும் 11,12ம் பொதுத்தேர்வுகளும் ஒத்திவைத்து புதிய தேர்வு அட்டவணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினராக நியமித்ததை அடுத்து, அவர் பதவியேற்க நாடாளுமன்றம் வருகை தந்தார். இவரின் இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த மாநில முதல்வரான அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக கூடக் கூடாது. மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
2019 தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை. நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி -கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் வரும் 31 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்கலை கழகங்களில் நடைபெற்று வரும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights