Tamil Nadu News Today Updates : கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் கொரொனாவால் உயிரிழந்தது உறுதியானது. அதோடு இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80-ஐத் தாண்டியுள்ளது. கொரொனா தொற்றை தவிர்க்க தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று கொரொனா நோய்க்கு இரண்டாவதாக ஒரு வயதான பெண்மணியும் பலியானார். பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகிறது.
மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா
கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் மேலும் 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரொனா வைரஸ் பாஸிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதன் மூலம் திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்ந்து 16 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். கொரொனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். கனட நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோவின் மனைவி சோபி கிரிகேயருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
இன்றைய முக்கியச் செய்திகளை இந்த இணைப்பில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அம்மா வேடத்தில் நடிப்பதால் பிரபல நாயகர்கள் தம்முடன் நடிப்பதை தவிர்ப்பதாகவும், வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள LIFT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
Hope this #lift will lift all the souls who passionately worked for this film with a lot of dreams.. :) #Lift#FirstLook pic.twitter.com/oTx3ginqA6
— Kavin (@Kavin_m_0431) March 13, 2020
டெல்லியில் வரும் 17 ஆம் தேதி பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற நூலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், இதில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் 49 சதவீத ஈக்விட்டி பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்குகிறது என்றும், மற்ற முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உடனடி முதலீட்டு தேவைகளை சமாளிக்க ஆயிரத்து 100 கோடி ரூபாயாக இருந்த அதிகாரப்பூர்வ மூலதனம், 6 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட 3 தினங்களில், வங்கி மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், 7 தினங்களில் எஸ்பிஐ வங்கியின் இயக்குனர்கள் தலைமையிலான புதிய நிர்வாக குழு, வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
"ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, தான் முதல்வராகலாம் என நினைத்துள்ளதாகவும், 2021-ல் நான் தான் தமிழக முதல்வர் என்றும் நகைச்சுவையுடன் கூறினார்.
கொரோனா எச்சரிக்கை காரணமாக, ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6ஆம் தேதி சூளைமேட்டில், மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க 90 நாள் அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமம் கோரிய 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.
”ஆட்சிக்கு தமிழன் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கைக்கு பாராட்டுக்கள். ரஜினியின் அரசியல் கொள்கை அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு நன்மை தரக் கூடியது. ரஜினியின் நாணய அரசியலின் முதல் பக்கத்தில் தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பது அரசியலில் நல்விதை. ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும். ரஜினியின் அரசியல் சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்று" என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
”4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்.10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு" என பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்றும், சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனவும், உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேராவையில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தினார்
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகளில் இருந்து திரும்பி வரும் இந்தியர்களுக்கான மருத்துவ சோதனை குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழகம் வருபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
நாட்டின் பொருளாதாரத்திற்கு கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல், வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
I will keep repeating this.
The #coronavirus is a huge problem. Ignoring the problem is a non solution. The Indian economy will be destroyed if strong action is not taken. The government is in a stupor. https://t.co/SuEvqMFbQd
— Rahul Gandhi (@RahulGandhi) March 13, 2020
”இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கை குலுக்கியதில்லை, கை குலுக்காமல் இந்திய முறையில் வணக்கம் சொல்வது எளிதாக உள்ளது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி விளக்கமளித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights