Advertisment

கொரொனோ-வுக்கு இந்தியாவில் இரண்டாவது பலி டெல்லியில் 69 வயது மூதாட்டி மரணம்

பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.72.71-க்கும், டீசல் 16 காசுகள் குறைந்து ரூ.66.19-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரொனோ-வுக்கு இந்தியாவில் இரண்டாவது பலி டெல்லியில் 69 வயது மூதாட்டி மரணம்

Tamil Nadu News Today Updates : கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் கொரொனாவால் உயிரிழந்தது உறுதியானது. அதோடு இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80-ஐத் தாண்டியுள்ளது. கொரொனா தொற்றை தவிர்க்க தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று கொரொனா நோய்க்கு இரண்டாவதாக ஒரு வயதான பெண்மணியும் பலியானார். பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா

கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் மேலும் 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரொனா வைரஸ் பாஸிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதன் மூலம் திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்ந்து 16 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். கொரொனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். கனட நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோவின் மனைவி சோபி கிரிகேயருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

இன்றைய முக்கியச் செய்திகளை இந்த இணைப்பில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    22:37 (IST)13 Mar 2020

    இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி

    கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 69 வயது பெண் டெல்லியில் மரணமடைந்தார். அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இது இரண்டாவது பலியாகும்

    22:16 (IST)13 Mar 2020

    பிரீத்திங் அனலைசர் கருவியை தவிர்க்க உத்தரவு

    கொரோனா அச்சம் காரணமாக வாகன ஓட்டிகளை வாயால் ஊதுமாறு கேட்டு பிரீத்திங் அனலைசர் கருவி மூலம் பரிசோதிப்பதை தவிர்க்க உத்தரவு.

    மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை மிக கவனமாக கையாள வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு அறிவுரை

    21:52 (IST)13 Mar 2020

    பி.வி.சிந்து தோல்வி...

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி...

    ஜப்பான் வீராங்கனை நசோமி ஓகுஹராவிடம் 21-12, 15-21,13-21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வி

    21:42 (IST)13 Mar 2020

    இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

    இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அம்மா வேடத்தில் நடிப்பதால் பிரபல நாயகர்கள் தம்முடன் நடிப்பதை தவிர்ப்பதாகவும், வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    21:19 (IST)13 Mar 2020

    சேப்பாக் கேலரிகள் திறப்பு

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், 8 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த I , J மற்றும் K ஆகிய மூன்று கேலரிகளும் திறக்கப்பட்டது.

    20:37 (IST)13 Mar 2020

    அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில்...

    கை கழுவும் திரவம், முகக்கவசம் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு

    20:28 (IST)13 Mar 2020

    கவின் நடித்துள்ள LIFT ஃபர்ஸ்ட் லுக்

    நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள LIFT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

    20:25 (IST)13 Mar 2020

    மார்ச் 17- ல் பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டம்

    டெல்லியில் வரும் 17 ஆம் தேதி பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற நூலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், இதில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

    19:55 (IST)13 Mar 2020

    மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

    19:07 (IST)13 Mar 2020

    யெஸ் வங்கி மறுகட்டமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் 49 சதவீத ஈக்விட்டி பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்குகிறது என்றும், மற்ற முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உடனடி முதலீட்டு தேவைகளை சமாளிக்க ஆயிரத்து 100 கோடி ரூபாயாக இருந்த அதிகாரப்பூர்வ மூலதனம், 6 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட 3 தினங்களில், வங்கி மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், 7 தினங்களில் எஸ்பிஐ வங்கியின் இயக்குனர்கள் தலைமையிலான புதிய நிர்வாக குழு, வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

    19:07 (IST)13 Mar 2020

    பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

    கொரோனா குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

    18:27 (IST)13 Mar 2020

    நான் யாரிடமும் கைக்குலுக்குவது இல்லை

    ”இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய பின் நான் யாரிடமும் கைக்குலுக்குவது இல்லை...

    இருகைகளை கூப்பி வணக்கமே செலுத்தி வருகிறேன்” - டொனால்ட் ட்ரம்ப்

    18:19 (IST)13 Mar 2020

    சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறைவு?

    ஐபிஎல் தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    18:00 (IST)13 Mar 2020

    ஒருநாள் தொடர் ரத்து

    கொரோனா எச்சரிக்கை காரணமாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது மற்றும் 3வது போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    17:43 (IST)13 Mar 2020

    இத்தாலி விரையும் ஏர் இந்தியா

    கொரோனா பாதித்த இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை அந்நாட்டிற்கு விரைகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    17:36 (IST)13 Mar 2020

    இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா உறுதி

    இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்- மத்திய சுகாதாரத்துறை

    16:58 (IST)13 Mar 2020

    ரூ.1000 கோடி முதலீடு

    யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. 

    16:42 (IST)13 Mar 2020

    தானே பந்தை எடுத்து வந்த கிரிக்கெட் வீரர்

    கொரோனா வைரஸ்: ரசிகர்களின்றி நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் தானே சென்று பந்தை எடுத்து வந்த நியூசிலாந்து அணி வீரர் ஃபெர்கியூசன்

    16:38 (IST)13 Mar 2020

    மேலும் 2 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    16:07 (IST)13 Mar 2020

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    16:02 (IST)13 Mar 2020

    நான் தான் முதல்வர் - வடிவேலு

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

    "ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம்" என தெரிவித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, தான் முதல்வராகலாம் என நினைத்துள்ளதாகவும், 2021-ல் நான் தான் தமிழக முதல்வர் என்றும் நகைச்சுவையுடன் கூறினார்.

    15:57 (IST)13 Mar 2020

    காலவரம்பின்றி பள்ளிகள் மூடல்

    கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    15:39 (IST)13 Mar 2020

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்வு

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.  

    15:35 (IST)13 Mar 2020

    பல்கலைக்கழகங்கள் ஒருவாரத்திற்கு மூடல்

    கொரோனா பாதிப்பு எதிரொலியாக, கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒருவாரத்திற்கு மூடப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு.

    15:21 (IST)13 Mar 2020

    மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூடல்

    கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூடல்

    - முதல்வர் எடியூரப்பா உத்தரவு

    15:09 (IST)13 Mar 2020

    பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    கொரோனா எச்சரிக்கை காரணமாக, ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    முன்னதாக, இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    14:45 (IST)13 Mar 2020

    IPL போட்டிகள் ஒத்திவைப்பு

    கொரொனா வைரஸ் அச்சத்தால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 

    14:38 (IST)13 Mar 2020

    பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

    கடந்த 6ஆம் தேதி சூளைமேட்டில், மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

    14:25 (IST)13 Mar 2020

    கொரொனா அச்சம்

    கேரள மாநிலம் மூணாறில் மாட்டுப்பட்டி, குண்டளை, எக்கோ பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல  விடுதிகள் மூடப்பட்டு, அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

    13:45 (IST)13 Mar 2020

    கொரொனா விழிப்புணர்வை ஐயா படத்திலேயே ஏற்படுத்திவிட்டேன் - வடிவேலு

    ”கொரோனா விழிப்புணர்வை 'ஐயா' படத்திலேயே நான் ஏற்படுத்தி விட்டேன். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது" என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். 

    13:02 (IST)13 Mar 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க 90 நாள் அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமம் கோரிய 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. 

    12:38 (IST)13 Mar 2020

    ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும் - பாரதி ராஜா

    ”ஆட்சிக்கு தமிழன் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கைக்கு பாராட்டுக்கள். ரஜினியின் அரசியல் கொள்கை அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு நன்மை தரக் கூடியது. ரஜினியின் நாணய அரசியலின் முதல் பக்கத்தில் தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பது அரசியலில் நல்விதை. ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும். ரஜினியின் அரசியல் சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்று" என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

    12:15 (IST)13 Mar 2020

    முதல்வர் அறிவிப்பு

    ”4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்.10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு" என பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    12:03 (IST)13 Mar 2020

    உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

    என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்றும், சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனவும், உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேராவையில் தெரிவித்தார். 

    11:57 (IST)13 Mar 2020

    ஸ்டாலின் வலியுறுத்தல்

    தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தினார்

    11:45 (IST)13 Mar 2020

    கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரம்

    தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.  கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகளில் இருந்து திரும்பி வரும் இந்தியர்களுக்கான மருத்துவ சோதனை குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழகம் வருபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை குறித்து ஆலோசனை. 

    11:40 (IST)13 Mar 2020

    உன்னாவ் பாலியல் வழக்கு

    உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    11:39 (IST)13 Mar 2020

    நாட்டின் பொருளாதாரத்திற்கு கொரொனா மிகப்பெரிய அச்சுறுத்தல் - ராகுல் காந்தி

    நாட்டின் பொருளாதாரத்திற்கு கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல், வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். 

    11:06 (IST)13 Mar 2020

    தங்கம் விலை சரிவு

    இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 குறைந்தது. கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது. ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று ரூ.32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    10:45 (IST)13 Mar 2020

    கொரொனா அலெர்ட்

    இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

    10:38 (IST)13 Mar 2020

    ரஜினி கட்சி தொடங்கினால் தான் கருத்து கூற முடியும் - ஜெயக்குமார்

    நடிகர் ரஜினிகாந்த் தனது லட்சியங்களையும், கொள்கைகளையும் கூறியுள்ளார். அவர் கட்சி தொடங்கினால்தான் அது குறித்து கருத்துக் கூற முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    10:19 (IST)13 Mar 2020

    வணக்கம் சொல்வது எளிதாக உள்ளது - ட்ரம்ப்

    ”இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கை குலுக்கியதில்லை, கை குலுக்காமல் இந்திய முறையில் வணக்கம் சொல்வது எளிதாக உள்ளது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி விளக்கமளித்துள்ளார். 

    10:16 (IST)13 Mar 2020

    கொரொனா எதிரொலி

    இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து 29,600 புள்ளிகளில் வணிகம், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளில் வர்த்தகம் சரிந்துள்ளது

    10:09 (IST)13 Mar 2020

    அரண்மனைக்கு செல்ல தடை

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்னியாகுமரி பத்மனாபபுரம் அரண்மனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    10:01 (IST)13 Mar 2020

    கனட அதிபரின் மனைவிக்கு கொரோனா தொற்று

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

    மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளிகள் வரை விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளின் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார். இதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment