Advertisment

என்.பி.ஆர்-ல் யாரையும் சந்தேகப்படும் நபராக குறிக்க மாட்டோம்: அமித்ஷா உறுதி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்.பி.ஆர்-ல் யாரையும் சந்தேகப்படும் நபராக குறிக்க மாட்டோம்: அமித்ஷா உறுதி

Tamil nadu news today updates : கொரோனா வைரஸ் தொற்று, பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவிற்கு வர வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் நாளை (மார்ச் 13) முதல் ஏப்.,15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி 'கொரோனா வைரஸ்' பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ், ஒரு தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

டில்லி கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது. அவர்கள், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதி, மத பாகுபாடின்றி, நடவடிக்கை பாயும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, மக்களவையில் தெரிவித்தார். டில்லி கலவரத்தை கட்டுப்படுத்த, டில்லி போலீசார் திறம்பட செயலாற்றினர். இதுவரை, கலவரத்தில் ஈடுபட்ட 2,647 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாசவேலையில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது. அவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஜாதி, மத பாகுபாடின்றி, கடுமையான நடவடிக்கை பாயும். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், கலவர இடத்துக்கு நேரில் சென்றார்.ஹோலி பண்டிகை நேரத்தில், மத ரீதியிலான பிரச்னைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், டில்லி கலவரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அமித் ஷா பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    19:55 (IST)12 Mar 2020

    கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி - முதல்வர் பினராயி விஜயன்

    கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் மேலும் 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரொனா வைரஸ் பாஸிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதன் மூலம் திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்ந்து 16 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    19:46 (IST)12 Mar 2020

    மக்கள் தொகை கணக்கெடுப்பில் யாரையும் சந்தேகப்படும் நபராக குறிப்பிடமாட்டோம் - அமித்ஷா

    மாநிலங்களவையில் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, யாரையும் சந்தேகப்படும் நபர் என குறிப்பிடமாட்டோம். என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

    19:41 (IST)12 Mar 2020

    கொரோனா: உடல்நலம் பாதித்த பக்தர்கள் வருவதை தவிர்க்கவும் - பழனி கோயில் நிர்வாகம்

    பழனி முருகன் கோயிலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என்று கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    18:57 (IST)12 Mar 2020

    கொரொனா தொற்று தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை

    கொரோனா தொற்று தடுப்பு முறை குறித்து சென்னையில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை செய்துவருகிறார்.

    18:41 (IST)12 Mar 2020

    கொரொனா எதிரொலி: மார்ச் 14-ல் சென்னை - கொல்கத்தா ஐபிஎல் போட்டிக்கு பார்வைகளுக்கு அனுமதி இல்லை

    கொரொனா எதிரொலியாக மார்ச் 14-ம் தேதி கோவாவில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    17:43 (IST)12 Mar 2020

    ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு பாஜகவில் மரியாதை கிடைக்காது - ராகுல் காந்தி

    ஜோதிராதித்ய சிந்தியா குறித்து ராகுல் காந்தி: “உண்மை என்னவென்றால், அவருக்கு அங்கு மரியாதை கிடைக்காது (பாஜக), அவர் திருப்தி அடைய மாட்டார். அவர் இதை உணர்ந்து கொள்வார். ஏனென்றால், நான் அவருடன் நீண்ட காலமாக நட்பு கொண்டிருந்தவன். அவர் இதயத்தில் இருப்பது வேறு அவர் பேசுவது வேறு” என்று கூறினார்.

    17:40 (IST)12 Mar 2020

    நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ல - ராகுல் காந்தி

    செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் அவரது முக்கிய குழு உறுப்பினர்களை ஏன் மாநிலங்களவைக்கு அனுப்பவில்லை என்று கேட்கப்பட்டதற்கு: நான் காங்கிரஸ் தலைவர் அல்ல, ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்து நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் இளைஞர்களுக்கு பொருளாதாரம் குறித்து அறிவித்து வருகிறேன். எனது அணியில் யார் இருக்கிறார்கள், எனது அணியில் இல்லாதவர்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.

    17:40 (IST)12 Mar 2020

    இது காங்கிரஸ் - பாஜக, ஆர்.எஸ்.எஸ் இடையேயான சித்தாந்த மோதல் - ராகுல் காந்தி

    ராகுல் காந்தி: இது சித்தாந்தத்தின் மோதல்; ஒருபுறம் காங்கிரஸ் மறுபுறம் பாஜக-ஆர்.எஸ்.எஸ். எனக்கு ஜோதிராதித்யா சிந்தியாவின் சித்தாந்தம் தெரியும். அவர் என்னுடன் கல்லூரியில் இருந்தார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ். உடன் போய்விட்டார்.

    17:33 (IST)12 Mar 2020

    கொரொனா எதிரொலி; டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்படும்

    கொரொனா எதிரொலியாக டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    17:29 (IST)12 Mar 2020

    கொரோனாவால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படபோகிறார்கள் - ராகுல் காந்தி

    செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரொனாவால் மக்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் பாதிக்கப்படப்போகிறார்கள். கொரோனாவைத் தடுக்க அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    17:05 (IST)12 Mar 2020

    சென்னையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸார் தீவிர சோதனை

    சென்னையில் விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    17:03 (IST)12 Mar 2020

    மத்தியப் பிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு

    மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் நாளைக்குள் நேரில் ஆஜராக அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    16:03 (IST)12 Mar 2020

    ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை; கட்சி தொடங்கப் போவதில்லை - திருமாவளவன் விமர்சனம்

    ரஜினி அறிவித்த அரசியல் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: “ரஜினி பொது வாழ்க்கைக்கு வரப்போவதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதையாக இருக்கிறது. ச‌ரிசெய்து விட்டு வருவது என்றால் எந்தக் காலத்திலும் வர முடியாது. அரசியலில் இறங்கித் தான் சீரமைக்க முடியும்.” என்று கூறினார்.

    15:46 (IST)12 Mar 2020

    இந்திய பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு

    இந்திய பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று கடும் சரிவைக் கண்டுள்ளது.

    இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் குறைந்து 32,778 புள்ளிகளுடன் வணிகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 868 புள்ளிகள் குறைந்து 9,590 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    15:31 (IST)12 Mar 2020

    பதவிக்காக தனது பைக்கைக் தீவைத்து எரித்து நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது

    திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்தக்காரர் பணி செய்து வருகிறார்.

    இவர் கட்சியில் பதவிக்காக தனது பைக்க நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு போலீஸில் புகார் அளித்தது தெரியவந்தது.

    சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் தனது பைக்கை தானே கொளுத்திவிட்டு நாடகமாடிய சக்திவேலை போலீஸார் கைது செய்தனர்.

    14:56 (IST)12 Mar 2020

    கொரொனா பற்றி சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி; முதல்வர் அளித்த நகைச்சுவை பதில்

    தமிழக சட்டப் பேரவையில், திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், “கொரொனா குறித்து அரசுதான் பீதியைக் கிளப்புகிறது. போன் செய்தால் இருமுகிறார்கள். சட்டமன்றம் வந்தால் 10 நர்ஸ்கள் கையை இப்படி கழுவு, அப்படி கழுவு என பயமுறுத்துகிறார்கள்” என்று கொரோனா அச்சம் பற்றி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, “70 வயதை தாண்டியவர் என்பதால் துரைமுருகன் அச்சம் கொள்கிறார்” என்று கூறினார். இதனால், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் சிரிப்பலை ஏற்பட்டது.

    14:22 (IST)12 Mar 2020

    மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்பு

    சென்னை எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    13:17 (IST)12 Mar 2020

    5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தவறில்லை – முதல்வர் பழனிசாமி

    5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததில் எவ்வித தவறுமில்லை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பயம் இருக்கக்கூடாது என்பதனடிப்படையிலேயே, 5.8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    12:52 (IST)12 Mar 2020

    புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    தீவிர பாதுகாப்பு நடவடிக்கையினால் தமிழகத்தின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    12:38 (IST)12 Mar 2020

    இது ரெய்டு இல்லை - வருமான வரித்துறை விளக்கம்

    நடிகர் விஜய் வீட்டில் தற்போது நடைபெற்று வருவது ரெய்டு இல்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது, பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ரெய்டு நடைபெற்றுள்ளது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ஆய்வே, தற்போதுே நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    12:13 (IST)12 Mar 2020

    நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு

    பிகில் பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்டோரது வீடுகளில் ஐடி ரெய்டு நடந்த நிலையில், தற்போது அவரின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரின் வீட்டில் சமீபத்தில் ஐடி ரெய்டு நடந்திருந்த நிலையில், தற்போது விஜய் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    11:58 (IST)12 Mar 2020

    கே.பி. முனுசாமி, வாசன் வேட்புமனு தாக்கல்

    மாநிலங்களவை தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ள கே.பி. முனுசாமி, ஜி கே வாசன் உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    11:30 (IST)12 Mar 2020

    தமிழகத்தில் தரமான மீன்களே விற்பனை – அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழகத்தில் தரமான மீன்களே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மீன் சாப்பிடுபவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    10:55 (IST)12 Mar 2020

    அமெரிக்கா வர அதிபர் டிரம்ப் அதிரடி தடை

    கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ; நாளை இரவு முதல் அடுத்த 30 நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    10:46 (IST)12 Mar 2020

    மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் - அமைச்சர் அன்பழகன்

    "69% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டு தரமுடியாது; உரிமைகளை விட்டு தந்தால்தான் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்றால் தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    10:32 (IST)12 Mar 2020

    கொரோனா வைரஸ் – தமிழக அரசு சார்பில் குறும்படம் வெளியீடு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் ( COVID19 ) தாக்கத்தை தடுக்க தமிழக அரசின்  மக்கள் நல்வாழ்வு & சுகாதாரத்துறை சார்பாக குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு, நிரோஷா உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர்.

    10:17 (IST)12 Mar 2020

    கொரோனா பீதி - ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

    வங்கதேசத்தில் மார்ச் 18ம் தேதி நடைபெற இருந்த ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    10:04 (IST)12 Mar 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.86ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.35ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    10:03 (IST)12 Mar 2020

    கடைகளின் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் – அரசு உத்தரவு

    தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற மொழிகள் பெயர் பலகையில் பயன்படுத்தப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற பிற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

    Tamil nadu news today updates : புதிதாக எந்த திட்டத்தையும், டெல்டா மாவட்டங்களில் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க.,வினரின் நாடகம், தமிழக மக்களிடம் எடுபடாது,'' என, முதல்வர், பழனிசாமி கூறியுள்ளார்.

    பா.ஜ., தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக, பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எல்.முருகன், 45, தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். முருகனின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம். இவர், தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர், முதுநிலை சட்டப்படிப்பு படித்துள்ளார். மனித உரிமைகள் சட்டத்தில், பி.எச்.டி., பெற்றுள்ளார். 15 ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

    Tamil Nadu Coronavirus Rajinikanth
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment