Advertisment

Tamil News Today: 4வது நாளாக 4,000 ப்ளஸ்; சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா - முக்கியச் செய்திகள் ஹைலைட்ஸ்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
Jul 05, 2020 09:08 IST
Coronavirus updates in tamil nadu, chennai

Tamil News Today: தமிழகம் முழுதும், ஊரடங்கு நீடித்தாலும், நாளை முதல் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மதுரையில் மட்டும், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, 'மொபைல் ஆப்' எனப்படும் செயலிகளை உருவாக்க வேண்டும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை துவக்கியுள்ள, 'தற்சார்பு புதுமை சவால் இயக்கத்தில்' இணைந்து, இதை தகவல் தொழில்நுட்பத் துறையினர் சவாலாக ஏற்க வேண்டும். இதன் மூலம், உள்நாட்டு தேவையை நிறைவேற்றுவதோடு, உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.Highlights

  22:13 (IST)05 Jul 2020

  சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா - ஆய்வில் கண்டுபிடிப்பு

  சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபிளோரியானா நகரில் கழிவு நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்த போது இது தெரிய வந்துள்ளது. இதனை பெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரேசிலில் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில்தான் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  22:10 (IST)05 Jul 2020

  கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

  கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 117 பேர் வெளிநாடுகளிலிருந்தும் 57 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவிற்கு திரும்பியவர்கள் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 228 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று,126 பேர் குணமடைந்து வீடு திரும்பிதாகவும், இதுவரை 3 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  22:09 (IST)05 Jul 2020

  தகுதியற்றவர்களின் தகுதி தீர்மானிக்கப்படும்

  விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் தகுதியற்றவர்களின் தகுதி தீர்மானிக்கப்படும்

  என் தகுதி பற்றி அமைச்சர் உதயகுமார் பேசுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது

  - ஆ.ராசா

  20:52 (IST)05 Jul 2020

  பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக உயர்வு

  கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக உயர்வு

  * கொரோனா பாதிப்பில் இருந்து 9,847 பேர் குணமடைந்துள்ள நிலையில் 372 பேர் உயிரிழப்பு - மாநில சுகாதாரத்துறை

  20:38 (IST)05 Jul 2020

  2,244 பேருக்கு கொரோனா

  டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 99,444 ஆக உயர்வு

  * கொரோனா பாதிப்பில் இருந்து 71,339 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,067 பேர் உயிரிழப்பு - மாநில சுகாதாரத்துறை

  20:37 (IST)05 Jul 2020

  ஜூலை 8-ஆம் தேதி விசாரணை

  ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு- உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை.

  20:37 (IST)05 Jul 2020

  36 விமானங்கள் இயக்கப்படும்

  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வரும் 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இந்தியா - அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

  20:36 (IST)05 Jul 2020

  என்எல்சி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

  கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-வது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

  20:22 (IST)05 Jul 2020

  62,778 ஆக உயர்வு

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592 லிருந்து 62,778 ஆக உயர்வு

  - சுகாதாரத்துறை

  19:57 (IST)05 Jul 2020

  வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

  வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமிழர்களை, உடனடியாக அழைத்து வர விமானங்கள் ஏற்பாாடு செய்து தர வலியுறுத்தி, ஆர்ப்பாட்ட​த்தில் ஈடுபட்டார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் முழக்கமிட்டார்.

  19:20 (IST)05 Jul 2020

  4வது நாளாக இன்றும் 4,000+

  தமிழகத்தில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

  ஜூலை 1 - 3,882

  ஜூலை 2 - 4,270

  ஜூலை 3 - 4,389

  ஜூலை 4 - 4,280

  ஜூலை 5 - 4,150

  19:10 (IST)05 Jul 2020

  308 பேருக்கு கொரோனா

  மதுரையில் இன்று 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,085 ஆக உயர்ந்தது;

  மதுரையில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 54 பேர் குணமடைந்ததுள்ளனர்!

  இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

  18:55 (IST)05 Jul 2020

  மேலும் 60 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 60 பேர் உயிரிழப்பு

  கொரோனா பாதிப்பால் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்

  - சுகாதாரத்துறை

  18:44 (IST)05 Jul 2020

  சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா

  சென்னையில் ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா உறுதி

  பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக உயர்வு

  18:38 (IST)05 Jul 2020

  தமிழகத்தில் மேலும் 4150 பேருக்கு கொரோனா

  தமிழ்நாட்டில் இன்று 4150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

  தமிழகத்தில் 4ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது

  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,11,151ஆக உயர்வு

  18:13 (IST)05 Jul 2020

  திடீர் உயர் மின்னழுத்தம் - மின்சாதன பொருட்கள் சேதம்

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியில் திடீரென்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறி நாசமாயின. தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, அலங்கார மின் சாதன பொருட்கள், மின்விளக்குகள் போன்றவை உயர் அழுத்த மின்சாரத்தால் பழுதாகின.

  18:08 (IST)05 Jul 2020

  உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

  புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 வயதான அன்பழகன், கடந்த16ஆம் தேதி, கொரோனா மற்றும் மூச்சுத்திணறலால் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தினால், உடல் நிலை சீராகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர். இதனையடுத்து கடந்த வாரம் மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்தி உள்ளனர். அப்படி இருந்தும், நேற்று இரவு அன்பழகன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 20 நாட்களாக சிகிச்சை அளித்ததற்கு ஏழு லட்ச ரூபாய் மீதி பணம் கட்டினால் மட்டுமே உடலை தருவோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறுவழியில்லாமல், அன்பழகன் உடலை மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் மூலம் காசிமேடு மயானத்திற்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தது.

  18:08 (IST)05 Jul 2020

  1000 படுக்கைகளுடன் பிரம்மாண்ட மருத்துவமனை

  டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு சொந்தமான இடத்தில், 250 ஐசியூ படுக்கை வசதிகளுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்துடன் இணைந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த மருத்துவமனையை 11 நாட்களில் உருவாக்கியுள்ளது. டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதுவரை 15 ஆயிரத்து 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் 5 ஆயிரத்து 300 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  17:14 (IST)05 Jul 2020

  தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தது 1 லட்சம் பிசிஆர் கருவிகள்

  தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்து சேர்ந்தன. தமிழகத்தில் சோதனையை அதிகரிக்க 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

  16:37 (IST)05 Jul 2020

  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ராமநாதபுரம் எம்.பி ரூ.1 லட்சம் நிவாரணம்

  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கினார்.

  16:25 (IST)05 Jul 2020

  10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப் செண்ட்

  10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப் செண்ட் என பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்/முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  15:33 (IST)05 Jul 2020

  திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  திருவண்ணாமலை மாவட்டத்தில் 58 பெண்கள், 8 குழந்தைகள், 6 சுகாதார பணியாளர்கள் உட்பட இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது.

  14:57 (IST)05 Jul 2020

  மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வூதியக் குறைப்பாக இருந்தாலும், ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அது அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஒன்றாகத் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வூதியக் குறைப்பு செய்வது பாகுபாடானது. ஒவ்வொரு காலத்திலும் பணியாற்றிய மருத்துவர்கள் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்று நோய்களுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடியிருப்பர். அவர்களின் சேவைகளை போற்ற வேண்டிய அரசு, அவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது அழகல்ல. மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.”என்று கூறியுள்ளார்.

  14:46 (IST)05 Jul 2020

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,550 ஆக உயர்ந்துள்ளது.

  14:07 (IST)05 Jul 2020

  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கோவை, ஈரோடு, சேலம், தேனி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  14:05 (IST)05 Jul 2020

  முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை. தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

  13:52 (IST)05 Jul 2020

  ஜூன் 19ஆம் தேதி நடந்தது என்ன? பென்னிக்ஸ் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

  சாத்தான்குளம் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் சம்பவம் குறித்து விசாரித்துவரும் சிபிசிஐடி போலீசார், ஜூன் 19ம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து தூத்துக்குடியில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  13:30 (IST)05 Jul 2020

  சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

  மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம். மக்கள் விழிப்புணர்வோடு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்; ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  13:05 (IST)05 Jul 2020

  ஜனாதிபதி உடன் பிரதமர் சந்திப்பு

  ஜனாதிபதி மாளி்கையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

  12:16 (IST)05 Jul 2020

  ஊரடங்கால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது

  ஊரடங்கால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. முகக்கவசம் மூலமே நுண்கிருமி தொற்று பரவுவதை தடுக்க முடியும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மறைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  11:48 (IST)05 Jul 2020

  காணொலி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை

  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நாளை (ஜூலை 6) முதல் அனைத்துநீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி  உத்தரவிட்டுள்ளார்.

  11:44 (IST)05 Jul 2020

  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

  11:08 (IST)05 Jul 2020

  மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

  மதுரையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.

  11:05 (IST)05 Jul 2020

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கோவை, நீலகிரி, ஈரோடு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

  10:09 (IST)05 Jul 2020

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,165 ஆக அதிகரிப்பு

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 613 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது.  4,09,082 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  09:51 (IST)05 Jul 2020

  அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று

  கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  09:24 (IST)05 Jul 2020

  பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை

  விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  அதேபோல் திருச்சி சரகத்தில் உள்ள திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை விதித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

  09:19 (IST)05 Jul 2020

  பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  சென்னையில் இன்று (ஜூலை 05), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 7வது நாளாக இன்றும், விலையில் மாற்றமின்றி, அதே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகின்றன.

  09:11 (IST)05 Jul 2020

  அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

  தமிழகம் முழுவதும் முதல் முறையாக  முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைப்பு, முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகளும், இந்த மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Tamil nadu news today updates : நடிகர் கமல் ஆரம்பித்துள்ள, 'நாமே தீர்வு' இயக்கத்திற்கு, தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிக்கை:மக்கள் நீதி மையம் சார்பில், மக்களே, மக்களின் பிரச்னைக்கு உதவிடும் வகையில், 'நாமே தீர்வு' என்ற, புதிய இயக்கம் துவக்கப்பட்டது. அதில் இதுவரை, 5,700க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளும் வந்துள்ளன.

  'கொரோனா' வைரசுக்கான தடுப்பூசி, ஆக., 15க்குள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு குறித்து, 'ரொம்ப அவசரப்பட வேண்டாம்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  #Corona Virus #Narendra Modi #Tamil Nadu
  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment