Tamil News Today: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்த பணி மேற்கொள்ள, அ.தி.மு.க.,வினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில், அ.தி.மு.க.,வினருடன் ஆலோசனை நடத்தினார். தொகுதி வாரியாக, ஒன்றிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்தது.கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, வரும் சட்டசபை தேர்தலில், வெற்றிக்கான வியூகம், அதற்கேற்ப பணி மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வில் அசத்தும் சென்னை : ஹேப்பி தானேங்க!
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தலைநகர் டெல்லியில், போலீசார் நடத்திய, 'என்கவுன்டரில்' ஐ.எஸ்., பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். அவரிடமிருந்து, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அவர், டில்லியில் பயங்கர தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கோவை: ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார்
ஊராட்சி தலைவர் சரிதாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; சரிதாவை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்!
இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா?
சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 23, 2020
எம்.எஸ்.தோனி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனுஷ்காவும் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர், வெற்றிக்கு பின்னரும் மற்றொரு வெற்றி என்பது சாத்தியம் என்ற நம்பிக்கையை தோனி உணர்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் கனவையும் தோனி நினைவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது ஓய்வு மூலம் எதார்த்தத்தை அனைவருக்கும் உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், வெற்றி என்பது தோனியின் தனித்துவமான பழக்கம், ஓய்வு முடிவு வருத்தம் தந்தாலும், இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தோனி விதைத்திருக்கும் உத்வேகம், அவர்களை சாம்பியன்களாக உயர்த்தும் என நம்புகிறோம். தோனியின் வாழ்கையின் அடுத்து இன்னிங்ஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
தனது மகன்களுடன் தனுஷ் பொழுதை கழிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramWhen your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga
A post shared by Dhanush (@dhanushkraja) on
சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும்.கோடிக்கணக்கான இந்திய மக்களும்,காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிரார்கள்
— KS_Alagiri (@KS_Alagiri) August 23, 2020
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு 24 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே சொத்தை பிரித்து கொடுப்பதில் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளுக்கும், மணிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சொத்து விவகாரத்தில் ஆத்தரமடைந்த முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மணியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறை உதவி ஆணையர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். பின்பு தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 மாதங்களுக்குப் பிறகு திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது போன்ற வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: “கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் தெரிவிக்க இன்னும் ஓரிரு வாரங்களில் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம். அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சித்தா மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வேலையின்மை தேசிய சராசரியை விட இரட்டிப்பாகியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழக அரசின் வெற்று அறிவிப்புகள் இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்துவிட்டது என்று விமர்சித்துள்ளார். தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 151 நாளில் 8,90, 812 வழக்குகள் பதிவு செய்து 9,85,415 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6,88,660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்கொலை படை தாக்குதல் நடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அனுசரிக்கப்படுவதால், நேற்று ஒரேநாளில், ரூ. 250 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக, மதுரையில் ரூ.52.45 கோடி, திருச்சி-ரூ. 51.27 கோடி, சென்னை-ரூ.50.65 கோட, சேலம்-ரூ.49.3 கோடி, கோவை-ரூ.46.58 கோடி அளவிற்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகளுக்கு முரணானது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்த நிலையில், புதுச்சேரி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வரும் 31-ம் தேதி வரை ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சிலாவட்டத்தில், வழக்கறிஞர் செந்தில்நாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் செந்தில்நாதன் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், இன்று (ஆக., 23), பெட்ரோல் லிட்டருக்கு 84.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 84.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில், கடந்த சில நாட்களைக் காட்டிலும், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights