Tamil News Today : தமிழக சட்டசபை வரும், 14ம் தேதி கூடுகிறது. சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக, கோட்டைக்கு பதிலாக, சென்னை, கலைவாணர் அரங்கில், முதன் முதலாக சபை கூடுகிறது. இக்கூட்டத் தொடர், நான்கு நாட்கள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் பரவல் தொடர்பான பிரச்னைகளே, சபை விவாதங்களில், அதிகம் எதிரொலிக்கும் என, தெரிகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச், 24ல் நிறைவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே, சட்டசபை கூட்டம் முடிக்கப்பட்டது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியின் உடல், முழு அரசு மரியாதையுடன், டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததை அடுத்து, அவரது உடல், வீட்டில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டது. மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்திற்கு, முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி, தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் அணிவகுப்பு மற்றும் பட்டம் பெறுவதில், 28 பெண் ஐபிஎஸ் உள்பட மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் அணிவகுப்பு மற்றும் பட்டம் பெறுவதில், 28 பெண் ஐபிஎஸ் உள்பட மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,891 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது.
சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன்? சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியை கலைத்தது ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு அடுத்த வாரம் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக், பி.ஆர்க், எம்சிஏ படிப்புக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு. விண்ணப்பத்திற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், செப்.30 வரை நீட்டிப்பு
அண்மையில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில் முடக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றான போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர் அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை 4 ஆயிரத்து 916 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையானது கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 90 காசுக்கு விற்பனையாகிறது.
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெற்றார் துரைமுருகன். பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் கடந்த மார்ச் மாதம் மறைந்த நிலையில், அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. அந்தப் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தார் துரைமுருகன்.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் பொது மக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனைகள் மற்றும் தகவல்களை வழங்கவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் முகநூல் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள தொடர்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ஆம் தேதி கடைசி நாள் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
திமுக பொருளாளர் பதவிக்கான மனுவை, டி.ஆர்.பாலுவிற்காக தாம்பரம் எம்எல்ஏ ராஜா பெற்றார்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/JJUcVttLDW
— Greater Chennai Corporation (@chennaicorp) September 2, 2020
ஆன்லைன் பாடம் படிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருத்தமளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த, உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உரிமையை நில நிறுத்தியுள்ளோம்'என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights