Advertisment

Tamil News Today : தனியார் பள்ளிகள் முழு கட்டணம் கேட்டால் புகார் அளிக்கலாம் - சென்னை ஆட்சியர்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : தனியார் பள்ளிகள் முழு கட்டணம் கேட்டால் புகார் அளிக்கலாம் - சென்னை ஆட்சியர்

Tamil News Today : தமிழக சட்டசபை வரும், 14ம் தேதி கூடுகிறது. சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக, கோட்டைக்கு பதிலாக, சென்னை, கலைவாணர் அரங்கில், முதன் முதலாக சபை கூடுகிறது. இக்கூட்டத் தொடர், நான்கு நாட்கள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் பரவல் தொடர்பான பிரச்னைகளே, சபை விவாதங்களில், அதிகம் எதிரொலிக்கும் என, தெரிகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச், 24ல் நிறைவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே, சட்டசபை கூட்டம் முடிக்கப்பட்டது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியின் உடல், முழு அரசு மரியாதையுடன், டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததை அடுத்து, அவரது உடல், வீட்டில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டது. மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்திற்கு, முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி, தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:48 (IST)02 Sep 2020

    தனியார் பள்ளிகள் முழு கட்டணம் கேட்டால் புகார் அளிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர்

    சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால் feescomplaintcell@gmail.com என்ற இமெயில் மூலமாக புகார் அளிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    22:00 (IST)02 Sep 2020

    ஐபிஎஸ் பயிற்சி அகாடெமி: தமிழகத்தைச் சேர்ந்த கிரண் ஸ்ருதி 2020 சிறந்த ஐபிஎஸ்-ஆக அறிவிப்பு

    ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் அணிவகுப்பு மற்றும் பட்டம் பெறுவதில், 28 பெண் ஐபிஎஸ் உள்பட மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.

    22:00 (IST)02 Sep 2020

    ஐபிஎஸ் பயிற்சி அகாடெமி: தமிழகத்தைச் சேர்ந்த கிரண் ஸ்ருதி 2020 சிறந்த ஐபிஎஸ்-ஆக அறிவிப்பு

    ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் அணிவகுப்பு மற்றும் பட்டம் பெறுவதில், 28 பெண் ஐபிஎஸ் உள்பட மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.

    21:53 (IST)02 Sep 2020

    தமிழகத்தைச் சேர்ந்த கிரண் ஸ்ருதி 2020 சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் ஆக அறிவிப்பு

    ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடேமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரண் 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.

    20:23 (IST)02 Sep 2020

    செப் 4ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

    செப்டம்பர் 4-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் திரு. சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    19:30 (IST)02 Sep 2020

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,891 பேர் டிஸ்சார்ஜ்

    அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,891 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது.

    18:22 (IST)02 Sep 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 96 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:26 (IST)02 Sep 2020

    பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

    இந்தியாவில் பப்ஜி விளையாட்டு, பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம்ஸ் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

    16:48 (IST)02 Sep 2020

    காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

    தமிழகத்தில் 14 துணை காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

    16:38 (IST)02 Sep 2020

    மத்திய அரசுக்கு சென்னை உயர நீதிமன்றம் கேள்வி

    சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன்? சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியை கலைத்தது ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு அடுத்த வாரம் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    16:07 (IST)02 Sep 2020

    அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக், பி.ஆர்க், எம்சிஏ படிப்புக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு. விண்ணப்பத்திற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், செப்.30 வரை நீட்டிப்பு

    16:05 (IST)02 Sep 2020

    சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ்

    அண்மையில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை  வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில்  முடக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றான போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர் அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். 

    15:59 (IST)02 Sep 2020

    ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்புர்வ மொழிகள் அறிவிப்பு

    ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உருது, காஷ்மீரி, டோக்ரி, இந்தி, ஆங்கிலம் ஆகிவற்றை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல்

    15:56 (IST)02 Sep 2020

    யூடியூப், பேஸ்புக் தணிக்கை

    யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவாகும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    15:03 (IST)02 Sep 2020

    முதல்வர் சுற்றுப்பயணம்

    திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி

    14:59 (IST)02 Sep 2020

    தங்கம் விலை குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை 4 ஆயிரத்து 916  ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையானது கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 90 காசுக்கு விற்பனையாகிறது.

    14:53 (IST)02 Sep 2020

    விஏஓ உதவியாளர் அடித்துக் கொலை

    பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டு, 4 பேர் கைது. கஞ்சா மதுபோதையில் இருந்தவர்கள் அடித்துக் கொலை செய்ததாக தகவல். முறைத்து பார்த்ததால் அடித்து கொன்றதாக கஞ்சா கும்பல் வாக்குமூலம்

    14:43 (IST)02 Sep 2020

    திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு பெற்ற துரைமுருகன்

    திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெற்றார் துரைமுருகன். பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் கடந்த மார்ச் மாதம் மறைந்த நிலையில், அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. அந்தப் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தார் துரைமுருகன். 

    14:06 (IST)02 Sep 2020

    செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து

    தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    13:28 (IST)02 Sep 2020

    உச்சநீதிமன்றம் தள்ளுபடி

    தவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது 

    13:24 (IST)02 Sep 2020

    சசிகலா வீட்டில் ஐடி நோட்டீஸ்

    சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டினர். சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் அண்மையில் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    12:33 (IST)02 Sep 2020

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

    செப்டம்பர் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமழிசை காய்கறி சந்தையை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    12:29 (IST)02 Sep 2020

    கனமழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    12:03 (IST)02 Sep 2020

    செப்.7 முதல் வழக்கு நேரடி விசாரணை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் செப்.7 முதல் வழக்கு நேரடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழுவில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    12:00 (IST)02 Sep 2020

    பேஸ்புக் பக்கம் துவக்கம்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் பொது மக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனைகள் மற்றும் தகவல்களை வழங்கவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் முகநூல் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள தொடர்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்  தொடங்கி வைத்தார்

    11:43 (IST)02 Sep 2020

    புதுச்சேரியில் 397 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் மேலும் 397 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அங்கு  மொத்த பாதிப்பு 15,157ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 9,968 பேர் குணமடைந்துள்ள நிலையில் 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

    11:16 (IST)02 Sep 2020

    மனு விநியோகம் துவக்கம்

    திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ஆம் தேதி கடைசி நாள் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

    திமுக பொருளாளர் பதவிக்கான மனுவை, டி.ஆர்.பாலுவிற்காக தாம்பரம் எம்எல்ஏ ராஜா பெற்றார்.

    publive-image

    11:09 (IST)02 Sep 2020

    சவரனுக்கு ரூ.384 குறைவு

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. ஒரு சவரன் 39 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,916-க்கு விற்பனையாகி வருகிறது.

    11:07 (IST)02 Sep 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு பட்டியல்

    10:59 (IST)02 Sep 2020

    ரஷ்யா புறப்பட்டார் ராஜ்நாத் சிங்

    ராணுவ தளவாட கொள்முதல் குறித்து ரஷ்ய நாட்டுடன் பேச்சுவார்த்தை மற்றும் அங்கு நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா புறப்பட்டுச்சென்றார்.

    publive-image

    10:54 (IST)02 Sep 2020

    கண்ணூரில் வெடிகுண்டு வீச்சு

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2 மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கண்ணூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

    10:29 (IST)02 Sep 2020

    ஸ்டாலின் இரங்கல்

    ஆன்லைன் பாடம் படிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருத்தமளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    10:24 (IST)02 Sep 2020

    110 பேருக்கு கொரோனா

    மதுரை மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 14,389ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 13,021 பேர் குணமடைந்துள்ள நிலையில் 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Tamil nadu news today updates தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம், கோயில்கள், வணிக வளாகங்கள் திறப்பு என புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த, உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உரிமையை நில நிறுத்தியுள்ளோம்'என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    Tamilnadu Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment