Tamil News : 5 மாதங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் விரைவு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. மக்கள் மாவட்ட்ம் விட்டு மாவட்டம் செல்ல தயாராகியுள்ளனர்.
தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.
அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அனைத்து விதமான தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், 8ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
வாத்தி கமிங் – தோனி வெர்சனை வெளியிட்டு சிஎஸ்கே கவுரவம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
'எல்லையில் சீன படைகள் தான் அத்துமீறுகின்றன. இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. எல்லையில் தற்போது நிலவும் சூழலை மாற்றி, தன்னிச்சையாக செயல்படும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்,' என, சீன ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்க திட்டமிட்டு வேலை பார்க்கிறது பாஜக - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TNPolice #HRaja #EdapadiPalaniSami More: https://t.co/qjdsYw4a1B @kbcpim @CMOTamilNadu @HRajaBJP pic.twitter.com/TL5yPmYj0J
— CPIM Tamilnadu (@tncpim) September 6, 2020
தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்க பாஜக திட்டமிட்டு வேலை பார்க்கிறது என்று சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
A spark is enough to ignite a sentiment.When we printed Tshirts, in the era of blatant Hindi imposition,we didn't know that the youngsters would respond passionately like our forefathers in fighting discriminatory practices. Thank you.#ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition pic.twitter.com/44HHjXuS3d
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 6, 2020
ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று கனிமொழி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
முன்னதாக, கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி- ஷர்ட் போட்டோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” டி- சர்ட்களை அணிந்த போட்டோவை வெளியிட்டனர். மேலும், இயக்குனர் வெற்றிமாறனும் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இயந்திரத் தயாரிப்பை மேம்படுத்தவும், பொருள்களில் புதுமைகளைப் புகுத்துவதை ஊக்குவிக்கவும் இரண்டு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கையால் ஊதுபத்தித் தயாரிக்கும் கலைஞர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ரூபாய் 2.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருந்த திட்டத்தின் மொத்த மதிப்பு தற்போது ரூபாய் 55 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊதுவத்தித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஊதுவத்தித் தொழிலுக்குமான ஆதரவை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. 200 தானியங்கி ஊதுவத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க ஏற்கனவே முடிவெடுத்திருந்த நிலையில் 400 தானியங்கி அகர்பத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பூர்த்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 கோடி செலவில் 10 குழுமங்கள்அமைக்கப்படும். இதன் மூலம் 5 ஆயிரம் கலைஞர்கள் பலன் அடைவார்கள்.
விமானிகள் மற்றும் பிற விமான ஊழியர்கள், பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, ப்ரீத் அனலைசர் பரிசோதனைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று பரவல் அச்சம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல், இதுபோன்ற சோதனைகளைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,820-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,458 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாஜக தமிழ்மாநில தலைவர் எல்.முருகன், “பிரதமரின் கிசான் திட்டமுறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக் குழு தேவை என்று வலியுறுத்தியுள்ளார். உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டன வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லிக்கு தினசரி சிறப்பு ரயில் சேவை வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 10-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி தலைவர், “2021 தேர்தலில் ரஜினி தலைமையில் 234 தொகுதிகளிலும் ஆன்மீக அரசியல்வாதிகள் இருப்பார்கள். ஒன்று ரஜினி தலைமையிலான ஆன்மீக அரசியல், இன்னொன்று திராவிடம் இருக்கும் என்று கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஆர்.டி.ஐ. தகவல்களை தவறாக சித்தரித்து இறப்புகளின் எண்ணிக்கையை இம்மருத்துவமனை மறைத்து வருவதாக தவறாக கூறியுள்ளார்கள். எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பையும் துச்சமென நினைத்து பணி செய்து வரும்போது, இதுபோன்ற தவறான தகவல்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மன வேதனையடையச் செய்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரேநாளில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 41,13,811 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக அதிகரித்துள்ளது. 70,626 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருந்த முழு பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து, இறைச்சி, மீன்கள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். காசிமேட்டில் கொரோனா விதிமுறைகளையும் மீறி மக்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், இன்று (செப்.,06), பெட்ரோல் லிட்டருக்கு 85.04 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.58 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனையாகிறது.
''புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால், படித்தவற்றை, தேர்வறையில் வாந்தி எடுக்கும் சூழல் இருக்காது,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights