Advertisment

Tamil News Highlights : மாவட்டங்கள் இடையே இன்று முதல் பஸ், ரயில் போக்குவரத்து!

Tamil News updates : இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Live updates

Tamil News Live updates

Tamil News : 5 மாதங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் விரைவு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. மக்கள் மாவட்ட்ம் விட்டு மாவட்டம் செல்ல தயாராகியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அனைத்து விதமான தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், 8ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

வாத்தி கமிங் – தோனி வெர்சனை வெளியிட்டு சிஎஸ்கே கவுரவம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

'எல்லையில் சீன படைகள் தான் அத்துமீறுகின்றன. இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. எல்லையில் தற்போது நிலவும் சூழலை மாற்றி, தன்னிச்சையாக செயல்படும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்,' என, சீன ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:56 (IST)06 Sep 2020

    தமிழகத்தில் சுற்றுலா தலங்களை திறப்பு எப்போது - அமைச்சர் விளக்கம்

    தமிழகத்தில் சுற்றுலா தலங்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் தெரிவித்தார்.

    21:17 (IST)06 Sep 2020

    தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்க பாஜக   திட்டமிட்டு வேலை - கே.பாலகிருஷ்ணன்

    தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்க பாஜக   திட்டமிட்டு வேலை பார்க்கிறது என்று சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

    21:14 (IST)06 Sep 2020

    டெண்டரை ரத்துசெய்து நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திடுக - முக ஸ்டாலின்

    டெண்டரை ரத்துசெய்து நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திடுக என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார். 

     

    20:38 (IST)06 Sep 2020

    இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல- கனிமொழி ட்வீட்

    ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று கனிமொழி தனது ட்விட்டரில் தெரிவித்தார். 

    முன்னதாக, கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி- ஷர்ட் போட்டோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” டி- சர்ட்களை அணிந்த போட்டோவை வெளியிட்டனர். மேலும், இயக்குனர் வெற்றிமாறனும் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

    19:38 (IST)06 Sep 2020

    செப் 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது - உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

    செப். 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று  ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   

    19:27 (IST)06 Sep 2020

    ஊதுவத்தித் தயாரிப்புக்கு மேலும் ஆதரவு - மத்திய அரசு அறிவிப்பு (2/2)

    இயந்திரத் தயாரிப்பை மேம்படுத்தவும், பொருள்களில் புதுமைகளைப் புகுத்துவதை ஊக்குவிக்கவும் இரண்டு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கையால் ஊதுபத்தித் தயாரிக்கும் கலைஞர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ரூபாய் 2.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருந்த திட்டத்தின் மொத்த மதிப்பு தற்போது ரூபாய் 55 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    19:27 (IST)06 Sep 2020

    ஊதுவத்தித் தயாரிப்புக்கு மேலும் ஆதரவு - மத்திய அரசு அறிவிப்பு

    ஊதுவத்தித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஊதுவத்தித் தொழிலுக்குமான ஆதரவை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.  200 தானியங்கி ஊதுவத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க ஏற்கனவே முடிவெடுத்திருந்த நிலையில் 400 தானியங்கி அகர்பத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பூர்த்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 கோடி செலவில் 10 குழுமங்கள்அமைக்கப்படும். இதன் மூலம் 5 ஆயிரம் கலைஞர்கள் பலன் அடைவார்கள்.

    19:19 (IST)06 Sep 2020

    விமான ஊழியர்களுக்கு மீண்டும் ப்ரீத் அனலைசர் சோதனைகளை

    விமானிகள் மற்றும் பிற விமான ஊழியர்கள், பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, ப்ரீத் அனலைசர் பரிசோதனைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று பரவல் அச்சம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல், இதுபோன்ற சோதனைகளைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

    19:16 (IST)06 Sep 2020

    செப். 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது

    செப். 30 வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்போவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.   

    19:14 (IST)06 Sep 2020

    சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,458 ஆக உள்ளது

    குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,820-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக உயர்ந்துள்ளது.

    இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,458 ஆக உள்ளது.

    18:51 (IST)06 Sep 2020

    இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால்  82 பேர் உயிரிழந்தனர்

    இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால்  82 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 52 பெரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,836-ஆக அதிகரித்துள்ளது. 

    18:19 (IST)06 Sep 2020

    தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று - 88 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    16:41 (IST)06 Sep 2020

    ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

    துபாயில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே செப்டம்பர் 19ம் தேதி தொடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:22 (IST)06 Sep 2020

    பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு: சிறப்பு விசாரணைக் குழு தேவை- எல்.முருகன்

    பாஜக தமிழ்மாநில தலைவர் எல்.முருகன், “பிரதமரின் கிசான் திட்டமுறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக் குழு தேவை என்று வலியுறுத்தியுள்ளார். உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டன வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    15:16 (IST)06 Sep 2020

    பைலட்டுகளுக்கு மது பரிசோதனையை தொடர விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவு

    விமானத்தில் ஏறும் முன் பைலட்டுகள் மற்றும் கேபின் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் மது பரிசோதனையை, மீண்டும் தொடரும்படி விமான நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    15:14 (IST)06 Sep 2020

    செப். 12 முதல் சென்னை சென்ட்ரலிலிருந்து புதுடெல்லிக்கு தினசரி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

    சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லிக்கு தினசரி சிறப்பு ரயில் சேவை வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 10-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:49 (IST)06 Sep 2020

    2021 தேர்தலில் ரஜினி தலைமையில் 234 தொகுதிகளிலும் ஆன்மீக அரசியல்வாதிகள் - அர்ஜுன் சம்பத்

    இந்து மக்கள் கட்சி தலைவர், “2021 தேர்தலில் ரஜினி தலைமையில் 234 தொகுதிகளிலும் ஆன்மீக அரசியல்வாதிகள் இருப்பார்கள். ஒன்று ரஜினி தலைமையிலான ஆன்மீக அரசியல், இன்னொன்று திராவிடம் இருக்கும் என்று கூறினார்.

    14:17 (IST)06 Sep 2020

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார்.

    14:15 (IST)06 Sep 2020

    டெல்லி ஐஐடி வெளியிட்ட விளம்பரம்; நாயமை பராமரிக்க பட்டதாரிகள் தேவை

    நாயை பராமரிக்க இ.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.டெக் முடித்தவர்கள் தேவை என என டெல்லி ஐஐடி வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    13:29 (IST)06 Sep 2020

    அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

    ஊரடங்கு தளர்வுகள் வாழ்வாதாரத்துக்கானது, சமூக இடைவெளி, முக கவசம் அணிவதற்கு தளர்வு கூடாது. பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    13:07 (IST)06 Sep 2020

    மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    13:03 (IST)06 Sep 2020

    போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

    நாளை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், பேருந்துகளை கவனமாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    12:32 (IST)06 Sep 2020

    செயலாளர் உத்தரவு

    செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    12:32 (IST)06 Sep 2020

    செயலாளர் உத்தரவு

    செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    11:54 (IST)06 Sep 2020

    ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல

    பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    11:34 (IST)06 Sep 2020

    ரூ.5.6 கோடி பறிமுதல்

    கடலூரில் கிசான் திட்ட மோசடியில் போலி பயனாளர்களிடம் இருந்து மேலும் ரூ.1.14 கோடி மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.5.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:24 (IST)06 Sep 2020

    மாநில அரசு தோல்வி – ஸ்டாலின்

    தேசிய குற்ற ஆவண அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாரமரிப்பதில் மாநில அரசு தோல்வியடைந்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    10:51 (IST)06 Sep 2020

    முதல்வர் நிதியுதவி

    உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    10:33 (IST)06 Sep 2020

    80 சிறப்பு ரயில்கள்

    நாடு முழுக்க வரும் 12-ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    10:24 (IST)06 Sep 2020

    கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதா?

    நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஆர்.டி.ஐ. தகவல்களை தவறாக சித்தரித்து இறப்புகளின் எண்ணிக்கையை இம்மருத்துவமனை மறைத்து வருவதாக தவறாக கூறியுள்ளார்கள். எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பையும் துச்சமென நினைத்து பணி செய்து வரும்போது, இதுபோன்ற தவறான தகவல்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மன வேதனையடையச் செய்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    09:58 (IST)06 Sep 2020

    ஒரேநாளில் 90,632 பேருக்கு கொரோனா

    கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரேநாளில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 41,13,811 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக அதிகரித்துள்ளது. 70,626 பேர் உயிரிழந்துள்ளனர்.

    09:43 (IST)06 Sep 2020

    காசிமேட்டில் குவிந்த மக்கள்

    கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருந்த முழு பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து, இறைச்சி, மீன்கள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். காசிமேட்டில் கொரோனா விதிமுறைகளையும் மீறி மக்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    09:40 (IST)06 Sep 2020

    நீர்வரத்து குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,735 கன அடியாக குறைந்த‌து. அணை நீர்மட்டம் 91.2 அடி, நீர் இருப்பு 54.1 டிஎம்சி, நீர் வெளியேற்றம் - 6,700 கனஅடியாக உள்ளது.

    09:26 (IST)06 Sep 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    தமிழகத்தில், இன்று (செப்.,06), பெட்ரோல் லிட்டருக்கு 85.04 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.58 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனையாகிறது.

    09:16 (IST)06 Sep 2020

    105 பேருக்கு கொரோனா

    மதுரையில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்,மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,779 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியா - சீனா இடையேயான பிரச்னை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண அழைப்பு விடுத்தால், உதவ தயாராக உள்ளோம்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    ''புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால், படித்தவற்றை, தேர்வறையில் வாந்தி எடுக்கும் சூழல் இருக்காது,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

    Tamilnadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment