Tamil News Today: அதிகரிக்கும் கொரோனா மரணம்; விதிகளை மீறினால் கடும் தண்டனை – டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Aug 25, 2020, 10:37:32 PM

Tamil News Today: மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில், ‘இ- – பாஸ்’ நடைமுறை ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் சண்முகம் அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் பா.ஜ., கட்சி எழுச்சி பெற்று வருகிறது – தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கட்சிக்கு நிரந்தரமான, பொறுப்புகளை ஏற்கக் கூடிய தலைவர் தேவை’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 23 பேர் போர்க் கொடி துாக்கியதால் நடந்த, கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ‘தற்காலிக தலைவராக, சோனியா தொடருவார்’ என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏழு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், பா.ஜ., துாண்டுதலால் செயல்படுவதாக, மூத்த தலைவர்கள் மீது, ராகுல் குற்றஞ்சாட்டினார். அதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:24 (IST)25 Aug 2020
பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 15 வயதான பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்.

பள்ளி மாணவி அளித்த புகாரையடுத்து புதுமாப்பிள்ளை, உறவினர் உட்பட இருவர் கைது!

21:58 (IST)25 Aug 2020
'மாஸ்டர்' பட ரிலீஸ் - முற்றுப்புள்ளி வைக்குமா படக்குழு?

சூர்யா நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்பில் உள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் சினிமா ரசிகர்களின் பார்வை தற்போது மாஸ்டர் படத்தின் மீதும் திரும்பியுள்ளது. சூரரைப்போற்று போன்று பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள விஜய்யின் மாஸ்டர் படமும் ஒடிடியில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழுவினர் சிலர் படம் கண்டிப்பாகதியேட்டர்களில் தான் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இருப்பினும் சமூக வலைதளங்களில் சிலர், மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாவது போன்று, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், மாஸ்டர் வெளியிடு குழப்பத்துக்கு தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைக்கவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21:34 (IST)25 Aug 2020
ஜேம்ஸ் ஆண்டர்சன் 600

டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் இங்கிலாந்து வீர‌ர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

21:31 (IST)25 Aug 2020
திமுக எம்பி கனிமொழி நேரில் ஆறுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார். சுப்ரமணியன் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

21:13 (IST)25 Aug 2020
மின்கசிவு காரணமாக தீ விபத்து

கேரள தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

* தங்கக்கடத்தல் ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி தலைமைச் செயலகம் முன் எதிர்க் கட்சியினர் போராட்டம்

20:54 (IST)25 Aug 2020
விஜய் ரசிகர்களால் பரபரப்பு

புரட்சி தலைவர் விஜய் , புரட்சி தலைவி சங்கீதா என ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20:33 (IST)25 Aug 2020
ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை மாலை 4 மணிக்கு வெளியீடு

* பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என மாணவர் சேர்க்கை செயலர் தகவல்

19:52 (IST)25 Aug 2020
எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

மகாராஷ்ட்ரா : ராய்காட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.

19:32 (IST)25 Aug 2020
இப்படி ஒரு சோதனையா!!

2019-20 நிதியாண்டில் புதிதாக ஒரேயொரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

18:57 (IST)25 Aug 2020
உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால்... சூர்யாவுக்கு ஹரி கோரிக்கை

சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என்று சூர்யா சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

இந்நிலையில் சூர்யாவின் ‘அருவா’படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் ஹரி, சூர்யாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், 

ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

18:38 (IST)25 Aug 2020
கொரோனா - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு

அரியலூர் - 54
செங்கல்பட்டு -321
சென்னை - 1270
கோவை - 322
கடலூர் - 370
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 126
ஈரோடு - 143
க.குறிச்சி - 51
காஞ்சிபுரம் - 214
குமரி - 155
கரூர் - 34
கிருஷ்ணகிரி - 44
மதுரை - 80
நாகை - 149
நாமக்கல் - 57

நீலகிரி-79
பெரம்பலூர்-22
புதுக்கோட்டை-116
ராமநாதபுரம்-69
ராணிப்பேட்டை-196
சேலம்-297
சிவகங்கை-43
தென்காசி-86
தஞ்சை-74
தேனி-226
திருப்பத்தூர்-40
திருவள்ளூர்-305
தி.மலை-102
திருவாரூர்-59
தூத்துக்குடி-60
நெல்லை-204
திருப்பூர்-44
திருச்சி-106
வேலூர்-136
விழுப்புரம்-185
விருதுநகர் -97

18:19 (IST)25 Aug 2020
6,998 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்தது.

இன்று ஒரே நாளில் 6,998 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

18:13 (IST)25 Aug 2020
107 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 107 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

* அதிகபட்சமாக சென்னையில் 20, கோவையில் 8, நெல்லையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

* மாநிலம் முழுவதும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்தது.

18:10 (IST)25 Aug 2020
சென்னையில் 1,270

சென்னையில் மேலும் 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கொரோனா

18:09 (IST)25 Aug 2020
புதிதாக 5,951 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு 3,91,303 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழப்பு

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 6,721

17:55 (IST)25 Aug 2020
பொறுப்பற்று செயல்படுவோரே காரணம்

‘பொறுப்பற்று செயல்படுவோரால் கொரோனா பரவல்: ஐசிஎம்ஆர்’

முகக்கவசம் போன்ற விதிகளை பின்பற்றாமல் பொறுப்பற்று செயல்படுவோரே கொரோனா பரவலுக்கு காரணம்

17:54 (IST)25 Aug 2020
சாகுபடிக்கு நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

* ஆக.28 முதல் நவ.25 வரை சாகுபடிக்கு நீர்திறக்கப்படும்

* நீர் திறப்பால் நாங்குனேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் - முதல்வர்

17:54 (IST)25 Aug 2020
அது திமுகவின் பிரச்னை

திமுகவில் இருக்கும் இந்துக்கள் யாரும் விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடவில்லை என்று திமுக தலைமையிடம் கேட்டதில்லை; அது திமுகவின் பிரச்னை; பாஜகவின் பிரச்னை அல்ல- சுப.வீரபாண்டியன்

17:53 (IST)25 Aug 2020
‘நாளை பிற்பகல் 3 மணி முதல் +1 விடைத்தாள் நகல்’

+1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்

17:28 (IST)25 Aug 2020
எஸ்.பி.பி உடல்நிலை மத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது - சரண் வீடியோ

பாடகர் எஸ்.பி.பி-யின் உடல்நிலை மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது என்று எஸ்.பி.பி-யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், எஸ்.பி.பி 90% மயக்க நிலையில் இருந்து மீண்டு வந்துவிட்டார் என்றும் பல்லாயிரக் கணக்கான மக்களின் பிரார்த்தனையால் தனது தந்தை எஸ்.பி.பி மீண்டு வருகிறார் என்று சரண் தெரிவித்துள்ளார்.

16:29 (IST)25 Aug 2020
முதல்வர் பழனிசாமி சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் ஆகஸ்ட் 29ம் தேதி ஆலோசனை

முதல்வர் பழனிசாமி ஊரடங்கு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க ஆகஸ்ட் 29ம் தேதி காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதே போல, அன்று மாலை சிறப்பு மருத்துவர் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

16:00 (IST)25 Aug 2020
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஜெயராஜ் உடலில் 17 இடங்களில் காயம் - சிபிஐ தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிபதி பாரதிதாசன் முன்பு நடைபெற்ற விசாரணையில், போலீசார் தாக்குதலில் உயிரிழந்த தந்தை ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்ததாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

15:53 (IST)25 Aug 2020
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு நடைமுறையில் தலையிட முடியாது - ஐகோர்ட்

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க கோரி 8 மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது மனுவை தள்ளுபடி செய்தது.

15:38 (IST)25 Aug 2020
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு; மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், சூதாட்ட விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

14:35 (IST)25 Aug 2020
ஓ.டி.டி.யில் திரைப்படம் வெளியிடப்படுவது ஆரோக்கியமானது அல்ல அமைச்ச கடம்பூர் ராஜு

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை. ஓ.டி.டி.யில் திரைப்படம் வெளியிடப்படுவது ஆரோக்கியமானது அல்ல. இது குறித்து திரைப்படத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த அரசு உதவி செய்யும் என்று கூறினார்.

14:12 (IST)25 Aug 2020
பாஜக காலூன்றுவதற்கு தெற்கும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல - முரளிதர ராவ்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், “பாஜக காலூன்றுவதற்கு தெற்கும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் முக்கிய நபர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். திமுக அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் பலர் பாஜகவில் இணைகின்றனர். பிரதமர் மோடியின் பணியால் அண்ணாமலை ஈர்க்கப்பட்டுள்ளார்.

14:05 (IST)25 Aug 2020
எதையும் எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை - அண்ணாமலை ஐபிஎஸ் பேட்டி

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பேட்டி: எதையும் எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை. பாஜகவின் விசுவாசமிக்க தொண்டனாக இருப்பேன். பாஜகவில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் தீவிர ரசிகன் நான் என்று கூறினார்.

14:01 (IST)25 Aug 2020
பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை ஐபிஎஸ்

பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

13:18 (IST)25 Aug 2020
அரசு பள்ளிகளில் இதுவரை 1 முதல் 11-ம் வகுப்பு வரை 5.5 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை 5.5 லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12:47 (IST)25 Aug 2020
2வது கட்ட மனித சோதனை

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டை சென்னையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்  பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

12:18 (IST)25 Aug 2020
ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபையை கூட்டி, நீட் தேர்வை நடத்த முடியாது என பிரகடனப்படுத்த வேண்டும் என அவர் அதிமுக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

11:45 (IST)25 Aug 2020
ஸ்டாலின் ஆலோசனை

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து மற்றும் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கொறடா சக்ரபாணி உள்ளிட்டோருடன் திமுக தலைவ் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

11:26 (IST)25 Aug 2020
ரவிக்குமார் எம்.பி. வரவேற்பு

தமிழ்நாட்டில் குட்கா தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக சட்டப்பேரவைக்குள் குட்காவை எடுத்து வந்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ களுக்கு எதிராக சபாநாயகரால் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று ரவிக்குமார் எம்.பி, பேஸபுக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

11:08 (IST)25 Aug 2020
உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து

திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017ல் குட்காவை சட்டசபைக்கு கொண்டு சென்றதால் உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது .

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:02 (IST)25 Aug 2020
சென்னையில் கொரோனா பாதிப்பு பட்டியல்

10:32 (IST)25 Aug 2020
தமிழிசை வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10:18 (IST)25 Aug 2020
பா.ஜ.வில் முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை

கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில், அவர் மதியம் 1 மணியளவில்,  டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைய உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பாஜகவால் மட்டுமே அதனை கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

10:11 (IST)25 Aug 2020
முதல்வர் விரைவில் அறிவிப்பு

இ-பாஸ் தொடர்பாக, முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

09:46 (IST)25 Aug 2020
புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு

கொரோனா நோய் தொற்றை தடுக்க இரண்டாவது வாரமாக செவ்வாய்கிழமையான இன்று புதுச்சேரியில் முழு ஊரடங்கு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

09:41 (IST)25 Aug 2020
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தமிழகத்தில், இன்று (ஆக., 25), பெட்ரோல் லிட்டருக்கு 84.73 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து, 84.73 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

09:37 (IST)25 Aug 2020
80 பேருக்கு கொரோனா

மதுரையில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 13,588 ஆக அதிகரித்துள்ளது.

Tamil nadu news today updates : அ.தி.மு.க., வினரிடமிருந்து, கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சுங்கச்சாவடிகளில், 'பாஸ்டேக்' முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, ரொக்கமாக பெறுவதில் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.

Web Title:Tamil nadu news today live coronavirus tamil nadu admk modi epass

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X