Tamil News Today Updates : தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கின. நவம்பர், 16ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, டிசம்பர் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் நடக்க உள்ளன. அப்பணிகளை முடித்து, அடுத்தாண்டு ஜனவரி, 15ல், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்பட்டியல் அடிப்படையில், சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, அறிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
விண்ணப்பிக்கும் அனைவருக்கும், 'இ - பாஸ்' வழங்கும் முறை, ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது. இதனால், ஏராளமான மக்கள், தங்கள் கார்களில், வெளி மாவட்டங்களுக்கு பறந்தனர். பிற மாவட்டங்களுக்கு சென்றிருந்தவர்கள், குடும்பத்துடன் சென்னை திரும்ப துவங்கினர்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதை அடுத்து, கடந்த 2 நாட்களில் 1ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
PhD, MSபயிலும் மாணவர்கள் செப். 2க்குள் செமஸ்டர் கட்டணம் செலுத்த வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 2-ம் தேதிக்குப் பின் கட்டணம் செலுத்தினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்ய முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது குற்றவாளிகள் வெடிகுண்டு வீசி உள்ளனர். இதில் போலீஸ் சுப்பிரமணியம் பலியானார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அரசு வழிகாட்டுதலின்படி கொண்டாடுவது குறித்து இந்து மத அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால், திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 121 பேர் பலியானதை அடுத்து இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மூணாறு நிலச்சர்வில் சிக்கி மாயமானவர்களை மீட்கும் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. மீட்பு பணியில் இன்று ஆற்றில் இருந்து மேலும் 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்கு முன்பாக தமிழக அரசு அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்
ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த ரவுடி துரைமுத்து மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன; கொலை செய்ய துரைமுத்து ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரவுடியை போலீசார் பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் : எஸ்.பி.ஜெயக்குமார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு கொடுத்த மனு ஜூலை 27 ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்
பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளில் 'பரோல்' என்ற வார்த்தையே இல்லை
'விடுப்பு' மட்டுமே வழங்க சிறை விதிகள் வகை செய்கிறது. ஏற்கனவே விடுப்பு பெற்ற 2 ஆண்டுகளுக்கு பிறகே விடுப்பு வழங்க முடியும் - சிறைத்துறை
ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் அறிக்கையில், "இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான சிறுசிறு வணிகங்கள், தொழில்முனைவோர், இந்த ஆலையின் இயக்கத்தைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் ஆகியோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
எங்களது ஆலையின் இயக்கத்துக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதற்காக சில தரப்பினரின் சில சம்பவங்களை வைத்தும், அரைகுறை உண்மைகளை வைத்தும் வேண்டுமென்றே இப்படித்தான் என்று நம்புகிற நிலையால் நாங்கள் ஊக்கம் இழந்துள்ளோம்.
தாமிர உலோகத்துக்கு பகையுள்ளம் கொண்ட நமது அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தாமிர உற்பத்தியில் சொந்தக் காலில் நிற்கும் நம் நாட்டின் திறமையைச் சில சக்திகள் சிதைப்பதற்கு இப்படி சதி செய்கிறார்கள். வரும் காலங்களில் நீதியை நிலைநாட்டுவதற்காக இருக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்ந்து செயல்படுவோம்” என்றுள்ளார்.
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
இழப்பீடு தொகையை பெற நில உரிமையாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இழப்பீட்டுக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது - அரசு தரப்பு
இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்?
தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது?
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துளளார்.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துளளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மனித குலத்தினை காத்திடும் மகத்தான தீர்ப்பு என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்.
நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று @CMOTamilNadu அமைச்சரவைத் தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும்!
ஆலைக்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைத்திட வேண்டும்! pic.twitter.com/OSpBqFBzRD
— M.K.Stalin (@mkstalin) August 18, 2020
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை திறப்பதற்கான தடை தொடரும்! - என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.பல ஆண்டுகளாக பல கட்ட மக்கள் போராட்டத்திற்கு பிறகு 13 பேர் உயிரை விலையாக கொடுத்து இந்த தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி.தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான் என்று நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துவதாக திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.#Sterlite
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 18, 2020
தமிழகத்தில், இன்று (ஆக., 18), பெட்ரோல் லிட்டருக்கு 83.99 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 83.99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம், 'டிஸ்மிஸ்' செய்தது. 'வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க வேண்டாம்' என்றும், மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights