Tamil News Today Updates : தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கின. நவம்பர், 16ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, டிசம்பர் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் நடக்க உள்ளன. அப்பணிகளை முடித்து, அடுத்தாண்டு ஜனவரி, 15ல், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்பட்டியல் அடிப்படையில், சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, அறிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
விண்ணப்பிக்கும் அனைவருக்கும், ‘இ – பாஸ்’ வழங்கும் முறை, ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது. இதனால், ஏராளமான மக்கள், தங்கள் கார்களில், வெளி மாவட்டங்களுக்கு பறந்தனர். பிற மாவட்டங்களுக்கு சென்றிருந்தவர்கள், குடும்பத்துடன் சென்னை திரும்ப துவங்கினர்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil nadu news today updates : அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் பணியில் முதல்வர் பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம், 'டிஸ்மிஸ்' செய்தது. 'வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க வேண்டாம்' என்றும், மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Web Title:Tamil nadu news today live coronavirus tamil nadu admk neet exam modi
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதை அடுத்து, கடந்த 2 நாட்களில் 1ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
PhD, MSபயிலும் மாணவர்கள் செப். 2க்குள் செமஸ்டர் கட்டணம் செலுத்த வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 2-ம் தேதிக்குப் பின் கட்டணம் செலுத்தினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்ய முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது குற்றவாளிகள் வெடிகுண்டு வீசி உள்ளனர். இதில் போலீஸ் சுப்பிரமணியம் பலியானார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அரசு வழிகாட்டுதலின்படி கொண்டாடுவது குறித்து இந்து மத அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால், திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 121 பேர் பலியானதை அடுத்து இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மூணாறு நிலச்சர்வில் சிக்கி மாயமானவர்களை மீட்கும் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. மீட்பு பணியில் இன்று ஆற்றில் இருந்து மேலும் 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது
*ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற அரசின் முடிவு நியாயமானது
- உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்கு முன்பாக தமிழக அரசு அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்
தூத்துக்குடி வல்லநாடு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடரும் பரபரப்பு
காவலர் மீது வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி துரைமுத்துவும் பலி
ரவுடி துரைமுத்து வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழப்பு
ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த ரவுடி துரைமுத்து மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன; கொலை செய்ய துரைமுத்து ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரவுடியை போலீசார் பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் : எஸ்.பி.ஜெயக்குமார்
இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பதவியை ராஜினாமா செய்தார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மனக்கரையில் போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு
சம்பவ இடத்திலேயே காவலர் உயிரிழப்பு
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ரூ.222 கோடிக்கு ட்ரீம் லெவன் நிறுவனம் பெற்றுள்ளது
தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி இன்று மாலை டெல்லி பயணம்
டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம் என தகவல்
அரசியல் நிலைப்பாடு குறித்த மாநில பாஜக தலைவர்களின் கருத்து குறித்து விவாதிக்க வாய்ப்
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை
* கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு கொடுத்த மனு ஜூலை 27 ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்
பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளில் 'பரோல்' என்ற வார்த்தையே இல்லை
'விடுப்பு' மட்டுமே வழங்க சிறை விதிகள் வகை செய்கிறது. ஏற்கனவே விடுப்பு பெற்ற 2 ஆண்டுகளுக்கு பிறகே விடுப்பு வழங்க முடியும் - சிறைத்துறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 21,308ஆக உயர்வு
தொற்றிலிருந்து இதுவரை 18,002 பேர் குணமடைந்துள்ள நிலையில் 349 பேர் உயிரிழந்துள்ளனர்
ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் அறிக்கையில், "இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான சிறுசிறு வணிகங்கள், தொழில்முனைவோர், இந்த ஆலையின் இயக்கத்தைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் ஆகியோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
எங்களது ஆலையின் இயக்கத்துக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதற்காக சில தரப்பினரின் சில சம்பவங்களை வைத்தும், அரைகுறை உண்மைகளை வைத்தும் வேண்டுமென்றே இப்படித்தான் என்று நம்புகிற நிலையால் நாங்கள் ஊக்கம் இழந்துள்ளோம்.
தாமிர உலோகத்துக்கு பகையுள்ளம் கொண்ட நமது அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தாமிர உற்பத்தியில் சொந்தக் காலில் நிற்கும் நம் நாட்டின் திறமையைச் சில சக்திகள் சிதைப்பதற்கு இப்படி சதி செய்கிறார்கள். வரும் காலங்களில் நீதியை நிலைநாட்டுவதற்காக இருக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்ந்து செயல்படுவோம்” என்றுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சரத்குமார் வரவேற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு பல லட்சம் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - சரத்குமார்
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
இழப்பீடு தொகையை பெற நில உரிமையாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இழப்பீட்டுக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது - அரசு தரப்பு
இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங். எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பு
விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியை வசந்தகுமார் எம்.பி. தொடர வேண்டும் - ஸ்டாலின்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்?
தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது?
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துளளார்.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துளளார்.
நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சருடனான ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மனித குலத்தினை காத்திடும் மகத்தான தீர்ப்பு என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை திறப்பதற்கான தடை தொடரும்! - என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.பல ஆண்டுகளாக பல கட்ட மக்கள் போராட்டத்திற்கு பிறகு 13 பேர் உயிரை விலையாக கொடுத்து இந்த தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பி்ட்டுள்ளார்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி.தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான் என்று நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துவதாக திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், அசதி மற்றும் உடல் வலி காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள், 5 மாதங்களுக்குப் பின் தேங்காய், பூசணிக்காய் உடைத்து திறக்கப்பட்டன. மதுப்பிரியர்களுக்கு, முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 876 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், இன்று (ஆக., 18), பெட்ரோல் லிட்டருக்கு 83.99 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 83.99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
உடுமலை சங்கர் கொலைவழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் விடுதலையை எதிர்த்தும், 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.