Tamil News Today Live : கொரோனா பரிசோதனைகளின் புதிய வசதிகளை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை,போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை மீட்டெடுத்தது, அ.தி.மு.க., அரசு.சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில், மறைந்த ஜெயலலிதா வசித்த, 'வேதா நிலையம்' உள்ளது.
இதை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, 2017ல், தமிழக அரசு முடிவு செய்தது.அதற்கு, ஜெ.,வின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை ஜெ.,வின் வாரிசுகளாக அறிவிக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், ஜெ.,வின், 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை, தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்கி, அவர்களை முதல் நிலை சட்ட வாரிசுதாரர்கள் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்கு சென்றார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஏற்பாடுவிழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பிரதமர்நரேந்திர மோடி, நாளை (ஜூலை 27-ஆம் தேதி) காணொளிக் காட்சி மூலம் கொரோனா உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும்.
ஐசிஎம்ஆர்- தேசியப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசிய இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனம், கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் இந்த உயர் உற்பத்தி பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் தர்பங்கா, முசாபர்நகர், கோபால்கஞ்ச் மற்றும் சீதாமார்கி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வெள்ளத்தால் குறைந்தது 10 உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் 26 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்திருக்கிறது
சிக்கிம் மாநிலத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 21ம் தேதி முதல் நாளை வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நோய்த் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் இதுவரை 499 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..
சாத்தான்குளத்தில் போலீஸ் லாக்கெப்பில் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பணி ஆணையை நாளை வழங்குகிறார்
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் தொகையை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் ரொக்கத்தை இலங்கை மத்திய வங்கிக்கு பரிமாற்றம் செய்ய இருதரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்! 56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்! " என்று தெரிவித்தார்.
புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை மத்திய திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது! கார்ப்பரேட்டுளுக்கு கார்பெட் விரிக்கும் இந்த புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை (EIA 2020) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது
கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதற்கான காசோலையை இன்று வழங்கினார்.
கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்ததன் 21-வது ஆண்டு தினம் இன்று வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது
கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் பிரியாவிடை அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். உயிரிழப்பவர்கள் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,85,576 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 4,67,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 705 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5,471 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த என்ணிக்கை, 1,56,526 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்: “இழந்த பணத்தை மீட்டு விடலாம்; இழந்த புகழை மீட்டு விடலாம்; ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது. அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது; நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
Lost Money comes back, fame comes back, but the wasted prime time of our lives will never come back. Peace! Lets move on. We have greater things to do😊 https://t.co/7oWnS4ATvB
— A.R.Rahman (@arrahman) July 26, 2020
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் தேவையில்லாத விஷயங்களை பதிவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டதில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,490 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்கள் வெளியே வந்தால் நாளை முதல் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையிலேயே 63% மரணங்கள் கணக்கிடப்படாத நிலையில் மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை, அரசு மறைத்திருக்கிறதோ? கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே கமிட்டிகள் அமைப்பதாகச் சொன்ன நிலையில் மீண்டும் ஒரு புது கமிட்டியை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/qfKysOP9Y5
— Greater Chennai Corporation (@chennaicorp) July 26, 2020
பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், மக்களிடையே மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி வருகிறார். இன்று கார்கில் வெற்றி தினம் என்பதால் அதுகுறித்து பிரதமரின் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
I am sure you would be aware of inspiring anecdotes of how collective efforts have brought about positive changes.
You would surely know of initiatives that have transformed many lives.
Please share them for this month’s #MannKiBaat, which will take place on the 26th!
— Narendra Modi (@narendramodi) July 11, 2020
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 177 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.
மண்டல வாரியான மது விற்பனை:
மதுரை : ரூ. 40.75 கோடி
திருச்சி: ரூ. 40.39 கோடி
சேலம்: ரூ. 39.40 கோடி
கோவை - ரூ. 35.90 கோடி
சென்னை - ரூ. 20.82 கோடி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,36,861லிருந்து 13,85,522ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432லிருந்து 8,85,577ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358லிருந்து 32,063ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூலை 26), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில், பெட்ரோல் விலை 28வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 13 பைசா விலை அதிகரித்து, 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தலைமைச் செயலர் சண்முகம், கடிதம் அனுப்பி உள்ளார்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights