Tamil News Today Live : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் ஓராண்டு வரை பிளாஸ்மா செல்களை சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் அளித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தும் முறை வெற்றி அடைந்துள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு 24 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம், தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்ற அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நிலைக்குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் வேலையிழந்து நிற்பவர்களின் வாழ்வாதாரம் காக்க, ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு வருவாய் அளிக்கும் வகையில், நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் புதிய திட்டம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று 88 உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு நெகடிவ் என்று வந்துள்ளது. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுதவறான செய்தி என்று அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு, தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த 2 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய 6 மாத கால அவகாசம், செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இதனிடையே அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், கீழ்பாக்கம் மற்றும் ஓமாந்தூரார் மருத்துவமனையில் தலா 4 பேர் தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருத்தணிகாசலம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மீது எடுத்த நடவடிக்கை என்ன?
மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சரை பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா?"
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட திருத்தணிகாசலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்கிறோம். மருத்துவ உதவியாளர்களாக இருப்பவர்களை எல்லாம் மருத்துவர்களாக கருத முடியாது - நீதிபதிகள்
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. விலக்கு அளிக்கக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் எனவும், ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை வனிதா - பீட்டர் பால் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்ததாக, சூரிய தேவி என்கிற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது சூரிய தேவி என்ற பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரிய தேவி என்கிற பெண்ணை கைது செய்துள்ளனர்.
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaicCorporation pic.twitter.com/vGx88vRRwK
— Greater Chennai Corporation (@chennaicorp) July 23, 2020
சென்னையில் இன்று (ஜூலை 23), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பெட்ரோல் விலை 25வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று மாற்றம் செய்யப்பட்டவில்லை.
கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.எம்.சி.ஏ., படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கடற்படையின் முக்கிய போர் விமானங்கள், லடாக் எல்லை மற்றும் வடக்கு பிராந்தியத்தில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights