Tamil News Today Live : ''கொரோனா பாதிப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அதனால் அரசுக்கு என்ன லாபம்,'' என மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ''தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையை எளிமைப்படுத்த, மாவட்டத்திற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறுவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர நான்கு வெவ்வேறு கட்டங்களில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விமானங்களை மூலம் 746 முறை இயக்கி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் வாயிலாக இதுவரை 9.5 லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். ஆக.1-ம் தேதி முதல் ஐந்தாம் கட்டத்தினை துவக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையிலும் லெபனான் விபத்து அபாயம் – எச்சரிக்கையால் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
துபாயில் இருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
விபத்து நடந்த இடத்தில் புகை இருந்ததாகவும், விமானம் இரண்டு பகுதிகளாகப் உடைந்திருப்பதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
டி.ஜி.சி.ஏ வட்டாரங்கள் சார்பில், “விமானம் ஓடுபாதையை ஓவர்ஷாட் செய்து, ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது. தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவியை பாதியாகக் குறைத்து சிறுமைப்படுத்துவது சரியா?
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்-மரணம் எவ்வளவு? அரசு வழங்கிய நிவாரணங்கள் என்ன? மறைப்பது ஏன்?
தியாகத்தை இருட்டடிப்பு செய்வது நியாயமா?
- மு.க.ஸ்டாலின் கேள்வி
நெல்லை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் முடிவடைந்த மற்றும் புதிய நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மண்டலங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை அனுமதித்த காரணத்தால் தான், கொரோனா பரவல் அதிகரித்ததாகக் குறிப்பிட்டார். எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.
தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனாவால் இறந்தால், செத்த நாயை தூக்கி எறிவதைப்போல புதைகுழியில் எறியப்படுவோம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனக்கு ஆறுதல் கூற வந்து அந்த பயணத்தின் வழியில் கொரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எனக்கு ஆறுதல் கூறுவதற்கு யாரும் தேடிவர வேண்டாம் என்றும், உங்கள் பாதுகாப்புக்காகவே இதனை கூறுவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
க.குறிச்சி-139
திண்டுக்கல்-134
தென்காசி-117
மதுரை-109
திருச்சி-105
விருதுநகர்-101
நாகை-78
விழுப்புரம்-73
பெரம்பலூர்-69
ஈரோடு-67
திருப்பத்தூர்-66
சிவகங்கை-64
அரியலூர்-51
கிருஷ்ணகிரி- 46
திருவாரூர்- 44
ராமநாதபுரம்- 43
நாமக்கல்- 34
திருப்பூர்- 31
கரூர்-26
தர்மபுரி - 16
நீலகிரி - 13
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு!
உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்தது.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்த அவர், இதனை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் தீபா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதுகலை மருத்துவர்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்களால் தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தை கருதி, தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திடீரென வரும் 24ம் தேதி முதல் அனைத்து முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டதால் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும். 1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன. 95 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2020
கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய கருவியாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, 34 ஆண்டுகளுக்குப் பின் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.உயர்கல்வியில் புதிய மாற்றத்தை புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்துவது உறுதி என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என தீபா தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கை, 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டி போட்டிகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com) வழியாக பதிவு செய்து, தங்கள் வசதிக்கேற்ப வீட்டு மாடி, தோட்டம், ட்ரெட்மில் என எந்த இடத்திலும் ஓடலாம். இதில் பங்கேற்பவர்களுக்கான சான்றிதழ், இணையம் மூலமாகவும், வெற்றி பெறுவோருக்கான பதக்கம், அஞ்சல்மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கு நினைவு வணக்கம்.
நினைவிடத்தில்...
கோபாலபுரத்தில்...
சி.ஐ.டி காலனியில்...@kalaignar89 @kalaignarist #கலைஞர் pic.twitter.com/FE0MfZ78RA— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2020
கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜகவை அடுத்து இன்று திமுகவுக்கு ஆதரவாக அவர் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Remembering with gratitude @kalaignar89 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/ziYrVYSz37
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 7, 2020
கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை விதிக்க வேண்டும் என்ற விவகாரத்தில், பதஞ்சலி றுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சித்ததற்காக ரூ 10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது' இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று (ஆக., 07), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 40வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 13வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கூடலூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வசித்த 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை அவலாஞ்சியில் 346 மி.மீ., கூடலூரில் 349 மி.மீ., தேவாலா 360 மி.மீ., மேல்கூடலூர் 330 மி.மீ., மழை பெய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights