Tamil News Today: “இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை!” – முதல்வர் பழனிசாமி

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Aug 7, 2020, 10:38:56 PM

Tamil News Today Live : ”கொரோனா பாதிப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அதனால் அரசுக்கு என்ன லாபம்,” என மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ”தமிழகத்தில், ‘இ – பாஸ்’ நடைமுறையை எளிமைப்படுத்த, மாவட்டத்திற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறுவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர நான்கு வெவ்வேறு கட்டங்களில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விமானங்களை மூலம் 746 முறை இயக்கி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் வாயிலாக இதுவரை 9.5 லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். ஆக.1-ம் தேதி முதல் ஐந்தாம் கட்டத்தினை துவக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையிலும் லெபனான் விபத்து அபாயம் – எச்சரிக்கையால் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:51 (IST)07 Aug 2020
ஏர் இந்தியா B737 விமானத்தில்...

கோழிக்கோடு விமான விபத்து!

ஏர் இந்தியா B737 விமானத்தில்,

174 பயணிகள்
10 கைக்குழந்தைகள்
2 விமானிகள் மற்றும்
5 கேபின் குழுவினர்

இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தகவல்!

21:19 (IST)07 Aug 2020
இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் - கேரளாவில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

துபாயில் இருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது

விபத்து நடந்த இடத்தில் புகை இருந்ததாகவும், விமானம் இரண்டு பகுதிகளாகப் உடைந்திருப்பதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

டி.ஜி.சி.ஏ வட்டாரங்கள் சார்பில், “விமானம் ஓடுபாதையை ஓவர்ஷாட் செய்து, ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது. தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

20:52 (IST)07 Aug 2020
'காவிரியில் ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு'

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

20:42 (IST)07 Aug 2020
தியாகத்தை இருட்டடிப்பு செய்வது நியாயமா?

கொரோனா தடுப்பில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவியை பாதியாகக் குறைத்து சிறுமைப்படுத்துவது சரியா?

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்-மரணம் எவ்வளவு? அரசு வழங்கிய நிவாரணங்கள் என்ன? மறைப்பது ஏன்?

தியாகத்தை இருட்டடிப்பு செய்வது நியாயமா?

- மு.க.ஸ்டாலின் கேள்வி

20:39 (IST)07 Aug 2020
டி20 உலக கோப்பை

2021ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும். 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

20:27 (IST)07 Aug 2020
பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன்

”போயஸ் தோட்ட இல்லம் எங்களது உடமையல்ல; உரிமை..

சசிகலா குடும்பத்தினரால் நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன்”

- ஜெ.தீபா

20:26 (IST)07 Aug 2020
3வது நாளாக 10,000 கடந்த கொரோனா பாதிப்பு

ஆந்திராவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தொடர்ந்து 3வது நாளாக 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.

இன்று 10,171 பேருக்கு தொற்று உறுதி; 89 பேர் உயிரிழப்பு.

இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,06,960 ஆக உயர்வு.

20:17 (IST)07 Aug 2020
இந்திய ஹாக்கி அணியின் கேப்டனுக்கு கொரோனா

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார் ஆகிய 4 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

19:47 (IST)07 Aug 2020
நடிகை தற்கொலை

போஜ்புரி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த நடிகை அனுபமா பதக் மும்பையில் உள்ள தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் - காவல்துறை தகவல்

19:45 (IST)07 Aug 2020
"இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை!" - முதலமைச்சர் பழனிசாமி

நெல்லை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் முடிவடைந்த மற்றும் புதிய நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மண்டலங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை அனுமதித்த காரணத்தால் தான், கொரோனா பரவல் அதிகரித்ததாகக் குறிப்பிட்டார். எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.

19:27 (IST)07 Aug 2020
இரண்டு மொழிகள் எவை?

இரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை? - உயர் நீதிமன்றம் கேள்வி

"தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா? அல்லது தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா?"

- சென்னை ஐகோர்ட்

19:09 (IST)07 Aug 2020
"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனாவால் இறந்தால், செத்த நாயை தூக்கி எறிவதைப்போல புதைகுழியில் எறியப்படுவோம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனக்கு ஆறுதல் கூற வந்து அந்த பயணத்தின் வழியில் கொரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எனக்கு ஆறுதல் கூறுவதற்கு யாரும் தேடிவர வேண்டாம் என்றும், உங்கள் பாதுகாப்புக்காகவே இதனை கூறுவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

18:20 (IST)07 Aug 2020
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 2

க.குறிச்சி-139
திண்டுக்கல்-134
தென்காசி-117
மதுரை-109
திருச்சி-105
விருதுநகர்-101
நாகை-78
விழுப்புரம்-73
பெரம்பலூர்-69
ஈரோடு-67
திருப்பத்தூர்-66
சிவகங்கை-64
அரியலூர்-51
கிருஷ்ணகிரி- 46
திருவாரூர்- 44
ராமநாதபுரம்- 43
நாமக்கல்- 34
திருப்பூர்- 31
கரூர்-26
தர்மபுரி - 16
நீலகிரி - 13

18:19 (IST)07 Aug 2020
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை- 984
திருவள்ளூர்- 388
தேனி- 351
செங்கல்பட்டு- 319
ராணிப்பேட்டை- 253
தி.மலை - 252
கோவை - 228
தஞ்சை-217
கடலூர்- 212
நெல்லை- 200
தூத்துக்குடி-195
குமரி - 187
புதுக்கோட்டை- 173
சேலம்-168
காஞ்சிபுரம்- 166
வேலூர் -158

18:17 (IST)07 Aug 2020
67,352 பேருக்கு கொரோனா

இன்று ஒரே நாளில் 67,352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 30.88 லட்சம் பேருக்கு மேல் பரிசோதிக்கப்பட்டுள்ளது

- தமிழக சுகாதாரத்துறை

18:07 (IST)07 Aug 2020
பாதிப்பு 1,000க்கு கீழ் சென்றது

சென்னையில் கொரோனா பாதிப்பு 1,000க்கு கீழ் சென்றது.

இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனாவால் பாதிப்பு; 24 பேர் உயிரிழப்பு..

சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்தது

18:03 (IST)07 Aug 2020
5,880 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு!

உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்தது.

17:49 (IST)07 Aug 2020
பண மோசடி

சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி பண மோசடி!

ரூ.45 கோடி மோசடி செய்தது தொடர்பாக கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை..

17:32 (IST)07 Aug 2020
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

- பிரதமர் மோடி அறிவிப்பு

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவு

17:02 (IST)07 Aug 2020
மோடி பாராட்டு!

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்த அவர், இதனை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

16:47 (IST)07 Aug 2020
வேதா இல்லம்!

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் தீபா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

16:46 (IST)07 Aug 2020
முதுகலை மருத்துவ தேர்வுகள்!

முதுகலை மருத்துவ தேர்வுகள்,  திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதுகலை மருத்துவர்கள் கொரோனா  தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்களால் தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தை கருதி, தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திடீரென வரும் 24ம் தேதி முதல் அனைத்து முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டதால் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

16:45 (IST)07 Aug 2020
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

16:44 (IST)07 Aug 2020
கருணாநிதிக்கு சிலை!

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

16:34 (IST)07 Aug 2020
10 ஆம் வகுப்பு முடிவுகள்!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி  காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

15:19 (IST)07 Aug 2020
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5,000!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5,000 நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

14:10 (IST)07 Aug 2020
கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும். 1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன. 95 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13:04 (IST)07 Aug 2020
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை மணலி கிடங்கிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும் என்று சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13:01 (IST)07 Aug 2020
கருணாநிதி நினைவுநாள் - கமல் டுவீட்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

12:15 (IST)07 Aug 2020
திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா

தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12:06 (IST)07 Aug 2020
இடுக்கியில் மண்சரிவு - 5 பேர் சடலமாக மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11:33 (IST)07 Aug 2020
புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் உரை

புதிய கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய கருவியாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, 34 ஆண்டுகளுக்குப் பின் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.உயர்கல்வியில் புதிய மாற்றத்தை புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்துவது உறுதி என்று மோடி குறிப்பிட்டுள்ளார். 

11:14 (IST)07 Aug 2020
தடை இல்லை

ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என தீபா தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கை,  2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

10:36 (IST)07 Aug 2020
சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டி  போட்டிகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com) வழியாக பதிவு செய்து, தங்கள் வசதிக்கேற்ப வீட்டு மாடி, தோட்டம், ட்ரெட்மில் என எந்த இடத்திலும் ஓடலாம். இதில் பங்கேற்பவர்களுக்கான சான்றிதழ், இணையம் மூலமாகவும், வெற்றி பெறுவோருக்கான பதக்கம், அஞ்சல்மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10:31 (IST)07 Aug 2020
கருணாநிதி நினைவுநாள் - வைரமுத்து அஞ்சலி

10:07 (IST)07 Aug 2020
கருணாநிதி நினைவுநாள் - குஷ்பூ டுவீட்

கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜகவை அடுத்து இன்று திமுகவுக்கு ஆதரவாக அவர் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:54 (IST)07 Aug 2020
ஆன்லைன் வகுப்புகள் 12்ம் தேதி துவக்கம்

தமிழகத்தில் இஞ்ஜினியரிங்  கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் துவங்க உள்ளன. முதலாமாண்டு மாணவர்களை தவிர அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

09:49 (IST)07 Aug 2020
ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை விதிக்க வேண்டும் என்ற விவகாரத்தில், பதஞ்சலி றுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சித்ததற்காக ரூ 10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது' இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

09:38 (IST)07 Aug 2020
175 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,930 ஆக அதிகரித்துள்ளது.

09:08 (IST)07 Aug 2020
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆக., 07), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 40வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 13வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

09:04 (IST)07 Aug 2020
கருணாநிதி நினைவுநாள் - ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை  மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  மரியாதை செலுத்தினர். 

Tamil nadu news today updates : மக்களை இன்னல்படுத்தும் இ - பாஸ் முறை இனி தேவையில்லை' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கூடலூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வசித்த 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை அவலாஞ்சியில் 346 மி.மீ., கூடலூரில் 349 மி.மீ., தேவாலா 360 மி.மீ., மேல்கூடலூர் 330 மி.மீ., மழை பெய்துள்ளது.

Web Title:Tamil nadu news today live coronavirus tamil nadu e pass nep 2020 modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X