Tamil News Today: சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள் தாமாக முன்வந்து, மாலை 5 மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு உதவ முடியும் என, நம்புகின்றனர். காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள, இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க, வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை மாநகராட்சி நிர்வாகம், கொரோனா நோய் பரவலை தடுக்க முடியாமல், விழி பிதுங்கி நிற்கிறது. அரசு போர்க்கால அடிப்படையில், அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என்ற, நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இயற்கை அங்காடி முன், கொரோனா தடுப்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி, கடந்த மூன்று மாதத்தில் சென்னையில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதை தவிர்க்கவும் என்று எழுதப்பட்டுள்ளது. அங்காடியின் நூழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பலகை, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
'டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று'
டெல்லி மாநிலத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,327 ஆக அதிகரிப்பு
- மாநில சுகாதாரத்துறை
* மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக அதிகரிப்பு
'மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா'
மகாராஷ்டிராவில் கொரோனாவால் இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,950 ஆக அதிகரிப்பு
- மாநில சுகாதாரத்துறை
*மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,958 ஆக அதிகரிப்பு
கொரோனா நோய் தாக்கம் உலகம் முழுவதும் கடுமையாக இருக்கும் சூழலில், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 19ம் தேதியே மக்கள் கூடும் இடங்களான கடற்கரை சாலை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இதனால் இரு மாதங்களாய் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. ஊரடங்கு தளர்வால் மக்கள் நடமாட்டம் அதிகமாகி நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் 10 என படிப்படியாக அதிகரித்து, இன்று மொத்த பாதிப்பு 194ஆக உயர்ந்துள்ளது.
உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறந்து வைத்தார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!
4 பள்ளிகளையும் சேர்த்து இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை 1,239 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,138 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சில பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில், பள்ளிக் கல்வித்துறை புதிய கல்வியாண்டு முதல் 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத்தொகுப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. அதனால், புதிய பாடத்தொகுப்புக்கு முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெறாமல் 11-ம் வகுபுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இன்று மும்பையில் அவருடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணத்துக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழக்கை வரலாற்றுப் படமான தோனி 2016-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான ஆலோசனைக் கூட்டம் பயனுள்ள வகையில் இருந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன” என்று கூறினார்.
டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததால் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் தனியார் மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 18 நபர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 7பேர், கேஎம்சியில் 3 பேர் என 18 பேர்உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது; தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம். கேள்வி கேட்பது சுலபம்;களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இந்திய பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் அடைந்தார். பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு காரணமாக, எல்லைப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,20,922ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 9,195ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி, நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights