Tamil News Today : சாத்தான்குளம் லாக் அப் மரணத்தில் அவர்களின் குடும்பத்தாரை கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்.#JUSTICEFORJAYARAJANDBENNIX
— M.K.Stalin (@mkstalin) June 28, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், தெலுங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளில், 85.5 சதவீதம் பேர், இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அதேபோல், கொரோனாவுக்கு பலியானவர்களில், 87 சதவீதம் பேர், இந்த எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். அதே நேரத்தில், குணமடைந்தோர் சதவீதம், 58.13 ஆக அதிகரித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு, சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,051 ஆக அதிகரித்துள்ளது என்பது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் ஹரி , காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறலால் ஒட்டுமொத்த துறைக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நடக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம்
ஸ்டாலின் அரசியல் அறிக்கையை மட்டுமே வெளியிடுகிறார்
கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு இன்னும் வளரணும் உதய் என்று அறிவுரை கூறி, ஊக்கப்படுத்தும் அதிமுக, மற்றும் பாஜகவுக்கு நன்றி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற அறிவுரைகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புவதாகவும், யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை! என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின்
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில் மருத்துவ நிபுணர் குழுவினர் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்
* தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் ஆறுதல் கூறினார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்
செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே எஸ் மஸ்தானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், எம்எல்ஏக்கள், வசந்தம் கார்த்தியகேயன், செய்யூர் எம்எல்ஏ எஸ் டி அரசு உள்ளிட்டோர்களை தொடர்ந்து செஞ்சி எம்எல்ஏ மஸ்தானுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சா்ததான்குளத்தை சேர்ந்த தந்தை - மகனை கோவில்பட்டி சிறைக்கு அழைத்து வந்தபோதே, அவர்களது உடல்களில் காயங்கள் இருந்துள்ளன. இதுமட்டுமல்லாது, இருவரது புட்டங்களிலும் ரத்தம் வழிந்ததாக சிறைப்பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, சாலையை கடக்க முயன்ற இவர் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்திற்கு ஆளானார். உடனடியாக இவரை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு இடது காலில் முறிவு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள். ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது * இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது * பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன படையினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் அமைதியை விரும்பும் இந்தியாவின் நடவடிக்கைகளை, உலக நாடுகள் உற்றுநோக்கி வருகிறது.
நாம் தற்போது, மெல்ல மெல்ல கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நேரத்திலும், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டால் மட்டுமே, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,64,823 வாகனங்கள் பறிமுதல்; 6,90,214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.15.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உரையில், கொரோனா பாதிப்பு, சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Shri @narendramodi's #MannKiBaat with the Nation, June 2020. https://t.co/zfDOQQTaCu
— BJP (@BJP4India) June 28, 2020
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை. மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் தெரிவித்தேன் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது
வரும், 2021, மே மாதம் நடைபெற உள்ள,தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணியை ஆய்வு செய்யும் போர்வையில், மாவட்டம் வாரியாக செல்ல துவங்கியுள்ள, முதல்வர் பழனிசாமி, மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights