Advertisment

Tamil News Today : சம்பந்தப்பட்ட போலீசாரை முதலில் கொலை வழக்கில் கைது செய்க: சிபிஐ விசாரணை குறித்து மு.க.ஸ்டாலின்

Tamil News updates : திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
, dead, dmk, M K Stalin, financial assistance, corona lockdown, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

Tamil News Today : மு.க ஸ்டாலின் ட்வீட்

Tamil News Today : சாத்தான்குளம் லாக் அப் மரணத்தில் அவர்களின் குடும்பத்தாரை கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், தெலுங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளில், 85.5 சதவீதம் பேர், இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அதேபோல், கொரோனாவுக்கு பலியானவர்களில், 87 சதவீதம் பேர், இந்த எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். அதே நேரத்தில், குணமடைந்தோர் சதவீதம், 58.13 ஆக அதிகரித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு, சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:20 (IST)28 Jun 2020

    சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படும் - முரளிதரராவ்

    சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

    19:51 (IST)28 Jun 2020

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,051 ஆக அதிகரித்துள்ளது என்பது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.

    18:33 (IST)28 Jun 2020

    சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு மொத்த பலி எண்ணிக்கை 800-ஐ தாண்டியது

    சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது.

    18:11 (IST)28 Jun 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 82,000 தாண்டியது

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:48 (IST)28 Jun 2020

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

    வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,249 ஆக அதிகரித்துள்ளது.

    17:45 (IST)28 Jun 2020

    மதுரை மேலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் 2 செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு பணி நடைபெற்றது.

    17:44 (IST)28 Jun 2020

    காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன் - இயக்குனர் ஹரி

    காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் ஹரி , காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறலால் ஒட்டுமொத்த துறைக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நடக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

    17:40 (IST)28 Jun 2020

    மருத்துவமனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

    மதுரை மேலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!

    மேலூர் அரசு மருத்துவமனையில் 2 செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு..

    17:40 (IST)28 Jun 2020

    2 காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனம்

    சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதியதாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனம்

    * உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் மணிமாறன் நியமனம்

    17:31 (IST)28 Jun 2020

    மதுரையில் மேலும் 300 பேருக்கு கொரோனா

    மதுரையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    * மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

    17:30 (IST)28 Jun 2020

    தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் - ராகுல் காந்தி

    சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் எனவும், தான் நேரில் வந்து ஆறுதல் கூற கொரோனா சூழலால் இயலவில்லை எனவும் ராகுல் கூறினார்

    - கே.எஸ்.அழகிரி

    17:05 (IST)28 Jun 2020

    கனிமொழி கூறியதில் உண்மையில்லை

    ‘சாத்தான்குளம் சம்பவத்தில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை’

    சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக கனிமொழி கூறியதில் உண்மையில்லை

    - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    17:00 (IST)28 Jun 2020

    50 கைதிகளுக்கு கொரோனா

    மகாராஷ்டிராவின் அகோலா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 50 கைதிகளுக்கு கொரோனா உறுதி!

    சிறையில் அமைக்கப்பட்ட வார்டுகளில் பாதிக்கப்பட்ட கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    16:59 (IST)28 Jun 2020

    புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமணம், இறுதி சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

    16:33 (IST)28 Jun 2020

    இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை

    கொரோனா தொற்று புதிய நோயாக இருக்கின்ற காரணத்தால் இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை

    பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவால் திணறிக் கொண்டிருக்கின்றன

    - முதல்வர் பழனிசாமி

    16:29 (IST)28 Jun 2020

    காவல்துறையை காப்பாற்ற முயற்சி

    சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது

    - தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

    16:28 (IST)28 Jun 2020

    நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை

    கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம்

    ஸ்டாலின் அரசியல் அறிக்கையை மட்டுமே வெளியிடுகிறார்

    கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை

    - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    16:15 (IST)28 Jun 2020

    சேலத்தில் கால்நடை பூங்கா

    ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது

    சேலம் கால்நடை பூங்காவிற்கு ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    கால்நடை பூங்கா மூலம் நாட்டின் மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காக்கப்படும்

    - முதல்வர் பழனிசாமி

    16:14 (IST)28 Jun 2020

    சிபிஐ விசாரணை

    சாத்தான்குளம் வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் - முதலமைச்சர்

    16:03 (IST)28 Jun 2020

    என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவுக்கு நன்றி

    என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு இன்னும் வளரணும் உதய் என்று அறிவுரை கூறி, ஊக்கப்படுத்தும் அதிமுக, மற்றும் பாஜகவுக்கு நன்றி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற அறிவுரைகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புவதாகவும், யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    - உதயநிதி ஸ்டாலின்

    15:59 (IST)28 Jun 2020

    58 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி

    தேனி மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கி 571 ஆக அதிகரிப்பு

    15:41 (IST)28 Jun 2020

    கால்நடை பூங்கா: முதல்வர் ஆய்வு

    சேலம்:தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

    1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது

    *ஆய்வின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    15:39 (IST)28 Jun 2020

    அமைச்சர் ஒருவருக்கு கொரோனா

    பீகாரில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

    தொற்று பாதிப்புக்குள்ளான அமைச்சர், இரண்டு நாட்களுக்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் அலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்.

    15:38 (IST)28 Jun 2020

    ரத்தக்கசிவுடன் காயங்கள்

    'தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: அரசு மருத்துவர் விளக்கம்'

    இருவரின் உடலின் பின்பகுதியில் ரத்தக்கசிவுடன் காயங்கள் இருந்தன

    மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் ரத்தக்கசிவு நின்றுவிட்டது

    - அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன்

    15:36 (IST)28 Jun 2020

    ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்

    தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    15:35 (IST)28 Jun 2020

    சுயநினைவுடன் தான் இருந்தார்கள்

    'தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: அரசு மருத்துவர் விளக்கம்'

    தந்தை, மகன் மருத்துவமனைக்கு வரும்போது காயம் இருந்தது

    தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சுயநினைவுடன் தான் இருந்தார்கள்

    - அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன்

    15:06 (IST)28 Jun 2020

    விசாரணைக்கு வரும் நபர்களை அடிக்கக் கூடாது

    காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு வரும் நபர்களை அடிக்கக் கூடாது, மனதைப் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது

    - காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தல்

    15:06 (IST)28 Jun 2020

    மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை - ஊரடங்கு நீட்டிப்பா?- நாளை முக்கிய முடிவு

    வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில் மருத்துவ நிபுணர் குழுவினர் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14:50 (IST)28 Jun 2020

    143 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று

    * கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1762 ஆக உயர்வு

    14:46 (IST)28 Jun 2020

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்

    சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்

    * தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் ஆறுதல் கூறினார் கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

    14:45 (IST)28 Jun 2020

    நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்

    சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்

    * ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார் ரஜினி

    13:14 (IST)28 Jun 2020

    செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

    செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே எஸ் மஸ்தானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், எம்எல்ஏக்கள், வசந்தம் கார்த்தியகேயன், செய்யூர் எம்எல்ஏ எஸ் டி அரசு உள்ளிட்டோர்களை தொடர்ந்து செஞ்சி எம்எல்ஏ மஸ்தானுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    13:05 (IST)28 Jun 2020

    சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகன் உடலில் காயங்கள் - சிறை பதிவேட்டில் தகவல்

    சா்ததான்குளத்தை சேர்ந்த தந்தை - மகனை கோவில்பட்டி சிறைக்கு அழைத்து வந்தபோதே, அவர்களது உடல்களில் காயங்கள் இருந்துள்ளன. இதுமட்டுமல்லாது, இருவரது புட்டங்களிலும் ரத்தம் வழிந்ததாக சிறைப்பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:47 (IST)28 Jun 2020

    கொல்லங்குடி கருப்பாயி மருத்துவமனையில் அனுமதி

    பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, சாலையை கடக்க முயன்ற இவர் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்திற்கு ஆளானார். உடனடியாக இவரை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு இடது காலில் முறிவு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    12:25 (IST)28 Jun 2020

    லாக்-அப் மரணம் கிடையாது

    சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே, அது லாக்அப் மரணம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

    12:04 (IST)28 Jun 2020

    பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்த வேண்டும்

    நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை, இளைய தலைமுறையினர் விளையாடுவதற்கு ஏற்ற சூழலை, மக்கள் ஏற்படு்தித்தர வேண்டும். இதன்மூலமே, பாரம்பரிய விளையாட்டுகள் பிரபலம் ஆகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    11:55 (IST)28 Jun 2020

    மதுரையில் 300 பேருக்கு கொரோனா

    மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 2,003 ஆக அதிகரித்துள்ளது

    11:54 (IST)28 Jun 2020

    புதுச்சேரி சட்டசபை இன்று மூடல்

    முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக இன்று மூடப்பட்டது.

    11:31 (IST)28 Jun 2020

    2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள்

    எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள். ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது * இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது * பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    11:26 (IST)28 Jun 2020

    தக்க பதிலடி அளிக்கப்படும் – பிரதமர் மோடி

    இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன படையினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மான் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் அமைதியை விரும்பும் இந்தியாவின் நடவடிக்கைகளை, உலக நாடுகள் உற்றுநோக்கி வருகிறது. 

    நாம் தற்போது, மெல்ல மெல்ல கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நேரத்திலும், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டால் மட்டுமே, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    11:16 (IST)28 Jun 2020

    தமிழகத்தில் இதுவரை ரூ.15.87 கோடி அபராதம் வசூல்

    தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,64,823 வாகனங்கள் பறிமுதல்; 6,90,214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.15.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    11:07 (IST)28 Jun 2020

    பிரதமர் மோடி உரை

    இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உரையில், கொரோனா பாதிப்பு, சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10:46 (IST)28 Jun 2020

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,157 ஆக அதிகரித்துள்ளது.

    10:14 (IST)28 Jun 2020

    முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

    கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை. மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் தெரிவித்தேன் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    10:00 (IST)28 Jun 2020

    ஆட்டோ ஓட்டுநர் மரணம் - 2 போலீசார் மீது வழக்குப்பதிவு

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது

    09:54 (IST)28 Jun 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்வு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்,  410 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்த பாதிப்பு - 5,28,859

    குணமடைந்தவர்கள் - 3,09,712

    உயிரிழப்பு - 16,095

    09:34 (IST)28 Jun 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூன் 28), பெட்ரோல் லிட்டருக்கு 83.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.61 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    09:22 (IST)28 Jun 2020

    இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

    சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. போலீஸ் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Tamil nadu news today updates : தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

    வரும், 2021, மே மாதம் நடைபெற உள்ள,தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணியை ஆய்வு செய்யும் போர்வையில், மாவட்டம் வாரியாக செல்ல துவங்கியுள்ள, முதல்வர் பழனிசாமி, மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.

    Tamilnadu Corona Virus Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment