Tamil News Today: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை துவங்கியது. முதல் கட்டமாக, ஜெயராஜ் வீட்டில், அவரது குடும்பத்தினரிடம், ஏழு மணி நேரம்,அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, ஜெயராஜ், பெனிக்ஸ், முதலில் அனுமதிக்கப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணைநடத்தினர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள,10 போலீசாரையும், காவலில் எடுத்துவிசாரிக்க, நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாடு முழுவதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். ''தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கடந்த 2011-ம் ஆண்டில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் முன்னிலையில், திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலில் உள்ள 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அதில், தங்கம், வைரம், வைடூரியம்,18 அடியில் தங்க மாலை இருந்தன. இவற்றின் அன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாத்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தற்போது, கோவிலை பராமரித்து வரும் நிலையில், பெரிய அளவில் உள்ள 6 -வது அறை திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறப்பது குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. திறக்கப்பட உள்ள அறையில் ஏராளமான தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை திறந்தால்,வேறு ஆபத்து வருமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா, தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அதில், விகாஸ்துபே ஆதரவாளர்களால் தனக்கும், தனது மனைவிக்கும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். எனவே பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் மீட்க முயன்ற தீயணைப்புவீரர் ஆகியோர் உயிரிழப்பு
*செல்லிப்பாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த ராதாகிருஷ்ணனை மீட்கும் முயற்சியில் மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி.
'தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று'
கொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை என ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட்
I got tested today for #COVID__19 and negative I appeal people who are in Red zones or with Contact history kindly get it done at the earliest. Early diagnosis not only to protect us but also others.Don't hesitate! Test yourself Motivate others! Follow 4Ts TEST TRACE TREAT TEACH
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 12, 2020
சென்னையில் மட்டும் இன்று 1,168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக காஞ்சிபுரம் -385, மதுரை - 319, விருதுநகர் 246, செங்கல்பட்டு - 245, திருவள்ளூர் - 232, வேலூர் - 151, திருவண்ணாமலை - 151, தூத்துக்குடி - 136, திருநெல்வேலி - 131, கோவை - 117, தேனி - 115, கன்னியாகுமரி - 104, திருச்சி 103, சேலம் - 98, சிவகங்கை 75 என கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 68 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,966ஆக உயர்ந்து 2000ஐ நெருங்கியுள்ளது.
கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் இருவரிடமும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே விசாரணை என்பதால் இருவரும் கொரோனா தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், ஏப்ரல் மாத தேர்வு கட்டணத்தை செலுத்த தவறியிருந்தால், ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது. தேர்வுக் கட்டணம் செலுத்த மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில், அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற உத்தரவு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா தங்கக் கடத்தல் வழகில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். கொச்சி அலுவலகத்தில் ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ விசாரணையை தொடங்குகிறது.
மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த பொதுமுடக்கம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர் உயிரிழந்தார். இதையடுத்து என்.எல்.சி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று முடிவடையவுள்ள நிலையில், முழு பொதுமுடக்கத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்.மேலும் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மோதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில், 10 போலீசார் கைது செய்யப்பட்டநிலையில், உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர, MBBS முடித்து பயிற்சியில் உள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மயக்கவியல், இதய அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பல்வேறு தனிச்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர, MBBS அல்லது டிப்ளமோ முடித்து, பயிற்சி மற்றும் பணியில் உள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம்-2481, அண்ணா நகர்-1941, தேனாம்பேட்டை-1760, தண்டையார்பேட்டை-1407, ராயபுரம்-1304, அடையாறு-1224, திரு.வி.க.நகர்-1211, வளசரவாக்கம்-1059, அம்பத்தூர்-997, திருவொற்றியூர்-776 பேருக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதமாக ரூ.17.84 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,30,662 வாகனங்கள் பறிமுதல்; 7,66,717 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிவிளை இலங்கை அகதி முகாமில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டதால் அந்த முகாம் மூடப்பட்டது. மாவட்டம் முழுவதும் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1363 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 542 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்க முதலிடம் வகித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முகக்கவசம் அணிய மறுத்து வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்றபோது, முகக்கவசம் அணிந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்று (ஜூலை 12), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், 14வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்று லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 849,553 ஆக அதிகரித்துள்ளது. 551 பேர் மரணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,674 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒருநாளில் மட்டும் 19,235 குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 534,621 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வாயிலாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights