Tamil News Today : திருமழிசை காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த சிறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறி வாகங்களை சந்தைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சந்தைக்கு வரும் வியாபாரிகளை போலீசார் அலைக்கழிப்பதாகவும் சிறு வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருமழிசை சந்தையை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் திட்டத்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர்., துவக்கி உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாட்டின் பல மாநிலங்களில், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக, பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.குறிப்பாக, மும்பை, தானே, சென்னை, டில்லி நகரங்களில், சமூக பரவலாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.சென்னையில், நேற்று முன்தினம் வரை, 83 ஆயிரத்து, 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,376 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பு சமூக பரவலாகவில்லை என, தமிழக அரசு கூறி வருகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில், ஐ.சி.எம்.ஆர்., பொதுமக்களிடம் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு – முழு விபரம்
கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், அந்த மருந்தை ஜூலை 20ம் தேதி, டெல்லி எய்ம்சில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை திருமழிசை சந்தையில் காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தைக்கு வரும் வாகனங்கள் சோதனை பொருட்டு அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், திருமழிசை சந்தையை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது. காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் வெளியிடும் அறிக்கை காவல்துறையினருக்கு மனச்சோர்வை தரும். சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் எந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அதிமுக” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும்
இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும்
- அமைச்சர் கே.பி.அன்பழகன்
* எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என அறிவிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணியால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எட்டாயிரத்து 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்காயிரத்து 658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 147 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் பரிசோதனை மூலமாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 24 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , அவர்கள் தங்களது குழந்தைகளுடன் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
- மு.க.ஸ்டாலின்
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் 15 ஆயிரம் கோடி நலத்தை அபகரிக்க முயற்சி நடைபெற்றதாக தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் இருந்து யாரும் இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க முடியாது. கட்டளையிடவும் முடியாது. ஆலோசனை வேண்டுமென்றால் கூறலாம். அதுவும் கூறுவதில்லை. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனை’’ என்றார்.
நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 14,997 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1407 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#chennaicorporation pic.twitter.com/MmUowiMZVg
— Greater Chennai Corporation (@chennaicorp) July 19, 2020
ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணை தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் சிலர் மீது புகார்கள் வந்துள்ளன.போலீஸ் மீதான புகார் குறித்து டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது என தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஷாக் அடிக்கும் மின்கட்டணம்! https://t.co/4eSh3LpjkM
— M.K.Stalin (@mkstalin) July 19, 2020
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் நேற்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ. 182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் ரூ.42 கோடிக்கும், திருச்சியில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.37 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716லிருந்து 10,77,618 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751லிருந்து 6,77,423 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273லிருந்து 26,816 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் சிகிச்சைக்காக, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொறறுக்கு உள்ளாகியுள்ள 5வது திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று (ஜூலை 19), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 21வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் இன்று மாற்றம் செய்யப்பட்டவில்லை.
சென்னையில் ஊரங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் உட்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. துணை ஆணையர் உட்பட 16 போலீசாருடன் நேரடி தொடர்பில் இருந்த போலீசார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் இதுவரை ஆயிரத்து 518 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசை எதிர்த்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதே ஜி - 20 நாடுகளின் செயல் திட்டமாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights